For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெஸ்டர்ன் டாய்லெட்டை உபயோகிப்பவரா நீங்கள்? உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் வர வாய்ப்பிருக்காம்...!

பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது நீங்கள் நிச்சயம் அச்சத்தில் இருக்கலாம். கழிப்பறை இருக்கையில் நீங்கள் அமரும் போது, உங்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்றுநோய் பற்றிய பயம் வரலாம்.

|
Can You Get UTI From a Toilet Seat in Tamil

பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது நீங்கள் நிச்சயம் அச்சத்தில் இருக்கலாம். கழிப்பறை இருக்கையில் நீங்கள் அமரும் போது, உங்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்றுநோய் பற்றிய பயம் வரலாம். இது உண்மைதான் கழிப்பறை இருக்கைகளைப் பயன்படுத்துவதால் சிறுநீர் தொற்று ஏற்படுகிறது, ஆனால் டாய்லெட் இருக்கையில் அமர்வதால் மட்டும் சிறுநீர் தொற்று ஏற்படாது. உண்மையில் நீரிழப்பு மற்றும் உங்கள் சிறுநீரை அடக்கி வைத்திருப்பது சிறுநீர்ப்பாதை நோய் தொற்று ஏற்பட முக்கிய காரணங்களாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழிப்பறை இருக்கை மூலம் 3 வழிகளில் UTI ஏற்படலாம்

கழிப்பறை இருக்கை மூலம் 3 வழிகளில் UTI ஏற்படலாம்

1. முறையாகப் பராமரிக்கப்படாத பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது தொற்று ஏற்படுகிறது.

2. ஒருவர் குதப் பகுதியிலிருந்து சிறுநீர்க்குழாய் வரை சுத்தம் செய்து கொள்ள டாய்லெட் பேப்பரைப் பயன்படுத்தும் போது.

3. பாதிக்கப்பட்ட நபரின் சிறுநீருடன் தொடர்பு கொள்ளுதல்.

சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று

சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று

ஒருவருக்கு சிறுநீர் வடிதல் அல்லது மன அழுத்தத்தை அடக்க முடியாமல் இருந்தால், அதுபோன்ற சமயங்களில், கழிப்பறை இருக்கையில் பல சொட்டு சிறுநீர் விழலாம். வேறொரு நபர் உடனடியாக அதைப் பயன்படுத்தினால், சிறுநீர் தொற்று ஏற்படலாம். யோனியில் உங்கள் அசுத்தமான கையைத் தொட்டால் இது நிகழலாம். ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அல்லது அவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தால், UTI ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வெஸ்டர்ன் கழிப்பறைகளைப் பயன்படுத்துவது UTI ஆபத்தை அதிகரிக்குமா?

வெஸ்டர்ன் கழிப்பறைகளைப் பயன்படுத்துவது UTI ஆபத்தை அதிகரிக்குமா?

யுடிஐ நோய்த்தொற்றுகள் வரும்போது வெஸ்டர்ன் கழிப்பறைகளை அடிக்கடி பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. உங்கள் கைகளை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் ஆபத்து அதிகரிக்கும். பிறப்புறுப்பில் காகிதத்தை பயன்படுத்துவதும் ஆபத்தை அதிகரிக்கலாம். ஒரு ஆய்வின்படி, இந்தியக் கழிவறைகளைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், மேற்கத்திய கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு 78.2% சிறுநீர் தொற்று அதிகமாகக் காணப்படுகிறது. வெஸ்டர்ன் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பெண்களிடமே மீண்டும் மீண்டும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் என்னென்ன ஆபத்து ஏற்படலாம்?

இதனால் என்னென்ன ஆபத்து ஏற்படலாம்?

UTI நோய்த்தொற்று பைலோனெப்ரிடிஸ், சிஸ்டிடிஸ் அல்லது யூரித்ரிடிஸ் அபாயத்தை ஏற்படுத்தலாம். இது முன்கூட்டிய பிரசவத்தை ஏற்படுத்தலாம். இது கருவை மறைமுகமாக பாதிக்கும். சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால் அல்லது சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது ஏற்படலாம். இந்த தொற்றால் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உடற்கூறியல் வேறுபாடுகளே இதற்கு காரணமாகும். ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீர்க்குழாய் சிறியதாக இருக்கும்.

இதனைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இதனைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

சிறுநீர் கழிக்கும் முன் பொது கழிப்பறை இருக்கைகளை சுத்தம் செய்யுங்கள். அந்தரங்க பாகங்களை பின்புறம் இருந்து முன்புறம் சுத்தம் செய்யவும். சிறுநீர் கழித்த பிறகு கைகளை நன்கு கழுவவும். எஞ்சிய சிறுநீர் வெளியேறாமல் இருக்க, ஒருவர் கழிப்பறை இருக்கையில் சரியாக உட்கார வேண்டும். உங்கள் சிறுநீர்ப்பையை காலி செய்ய போதுமான நேரத்தை அனுமதிக்கவும். சுகாதாரம் நன்கு பராமரிக்கப்பட்டால், ஒருவர் எப்போதும் UTI இல் இருந்து பாதுகாப்பாக இருப்பார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can You Get UTI From a Toilet Seat in Tamil

Read to know what kind of infections can you get from a toilet seat.
Story first published: Wednesday, November 16, 2022, 18:45 [IST]
Desktop Bottom Promotion