Latest Updates
-
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா? -
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
July 2026 Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாதமாக இருக்கப்போகிறதாம் - ஜாக்கிரதை -
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
டர்ர்ர்.... புர்ர்ர்... மூலமா கொரோனா வைரஸ் பரவும் என்பது உண்மையா? ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
மனிதன் வெளியேற்றும் வாயுவில் உள்ள நுண்துகள்களுக்கு பாக்டீரியாக்களைப் பரப்பும் திறன் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், வாயுவால் வைரஸ் தொற்றுக்களை அடையாளம் காண்பதற்கு கூடுதல் முழுமையான ஆரா
தற்போது எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸ் பற்றிய பேச்சு தான் உள்ளது. அந்த அளவில் கொரோனா வைரஸ் மக்களிடையே மிகவும் மோசமாக பரவி வருகிறது. இதுவரை உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய கொரோனா வைரஸ் மக்களிடையே இருமல் தும்மல் வழியாக மட்டுமின்றி, மேற்பரப்புக்களில் சில மணிநேரம் வரை உயிருடன் இருக்கும் என்பதால், அவ்விடத்தை யாரேனும் தொடுவதனால் பரவியது.

இப்படி ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த புதிய தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன. அந்த வகையில் பெரும்பாலானோர் மனதில் எழும், கேட்க நினைக்கும் ஓர் கேள்வியாக, கொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றும் வாயு மூலமாகவும் பரவுமா என்பது உள்ளது. இந்த கேள்வி விசித்திரமானதாக இருக்கலாம். ஆனால் சுகாதார நிபுணர்கள், இது உண்மையில் சரியான கேள்வி என்று கூறுகின்றனர்.
ஒரு சமீபத்திய அறிக்கை தலைப்பை ஆராய்ந்ததில், மனிதன் வாயுவை வெளியேற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புள்ளதா இல்லையா என்ற தலைப்பில் பல மருத்துவர்கள் விவாதம் மேற்கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதுக்குறித்து சுகாதார நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வாயுவின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?
மனிதன் வெளியேற்றும் வாய்வு கொரோனா வைரஸை பரப்பும் என்பது குறித்த விரிவான ஆராய்ச்சி எதுவும் இல்லை. ஆனால் ஒரு ஆய்வு உள்ளாடை, பேண்ட் அணியாமல் வாய்வை வெளியேற்றுவது ஆபத்தானது என்று கூறியது. இரண்டு மருத்துவர்களுக்கு இடையே மனிதன் வெளியேற்றும் வாய்வில் வைரஸ் இருப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஏற்பட்ட கலந்துரையாடலில் இருந்து வந்தது தான் இந்த அறிக்கை. இப்படி ஒரு கலந்துரையாடல் நிகழ்வதற்கு காரணம், பல ஆய்வுகளில் அதிக எண்ணிக்கையான கொரோனா வைரஸ் நோயாளிகள் இரைப்பை குடல் அறிகுறிகள் இருப்பதை கூறியிருப்பது மற்றும் சில கொரோனா நோயாளிகளின் சிறுநீர் மற்றும் மலத்திலும் கொரோனா வைரஸ்கள் இருப்பது போன்றவை தான்.

போதுமான ஆதாரம் இல்லை
இருப்பினும், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனிதன் வெளியேற்றிய வாயுவால் கொரோனா வைரஸ் பரவியதற்கான எந்த ஒரு தகவலோ, ஆதாரமோ இல்லை. எனவே வாயுவால் கொரோனா பரவும் என்பதை உறுதியாக கூற முடியாது.

வாய்வு என்பது ஒரு ஏரோசல் உருவாக்கும் செயல்முறையாகும்
மருத்துவமனைகள் போன்ற ஏரோசோல் உருவாக்கும் செயல்முறைகள் நடத்தப்படும் வளிமண்டலத்தில் கொரோனா வைரஸ் தங்க வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் முன்பு கூறியது. சில மருத்துவ செயல்முறைகள் வளிமண்டலத்தில் நீண்ட நேரம் ஏரோசோல்களை உருவாக்குகின்றன. அதில் இன்டுபேஷன், எக்ஸ்டுபேஷன் மற்றும் தொடர்புடைய செயல்முறைகள், பல் செயல்முறைகள், CPAP போன்றவை குறிப்பிடத்தக்கவை.
வாய்வு ஏரோசோல் உருவாக்கும் செயல்முறையாக இருப்பதால், அது கொரோனா வைரஸ் பரவலுக்கான ஒரு ஊடகமாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே வாய்வால் கொரோனா வைரஸ் பரவுமா என்று கேட்கப்படும் சந்தேகங்கள் சரியானவை தான்.

ஆய்வு
மனிதன் வெளியேற்றும் வாயுவில் உள்ள நுண்துகள்களுக்கு பாக்டீரியாக்களைப் பரப்பும் திறன் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், வாயுவால் வைரஸ் தொற்றுக்களை அடையாளம் காண்பதற்கு கூடுதல் முழுமையான ஆராய்ச்சி இன்னும் தேவைப்படுகிறது.

சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு கூற்று
மனிதன் வெளியேற்றும் வாயுவால் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க உள்ளாடை ஒரு தடையாக செயல்படுவதாகவும், மக்கள் உள்ளாடை அணிந்தால், வாயுவால் வைரஸ் பரவாது என்றும் கூறியதாக டோங்ஜோ மாவட்டத்தில் உள்ள சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு கூறியுள்ளது.

இறுதி முடிவு
இறுதியாக, மனிதன் வெளியேற்றும் வாயுவால் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கான முடிவை உறுதி செய்வதற்கு போதுமான தரவு தற்போது இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இனிமேல் உங்கள் அருகில் யாரேனும் பாம் போட்டால், அவர்களை விட்டு விலகி ஓடிவிடுங்கள். அது தான் நமக்கு நல்லது.



Click it and Unblock the Notifications