சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம்

Chanakya Niti: பண்டைய இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக சாணக்கியர் கருதப்படுகிறார். நெறிமுறைகள் மற்றும் பொருளாதாரம் போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் விளக்கியுள்ளார். சாணக்கியர் ஒரு பொருளாதார, அரசியல் மற்றும் இராஜதந்திர நிபுணராகக் கருதப்படுகிறார். தனது கொள்கைகளின் சக்தியால் சந்திரகுப்தனை மௌரியப் பேரரசின் மாபெரும் பேரரசராக மாற்றினார்.

Chanakya Niti Never Tell These Secrets to Anyone for Peaceful Life

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க எப்படி சில விஷயங்களை அவசியம் செய்ய வேண்டுமோ அதேபோல சில விஷயங்களை செய்யக்கூடாது. அதில் முக்கியமான இன்று சில முக்கியமான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது. ஏனெனில் சில ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றும் என்று சாணக்கியர் கூறுகிறார். இந்த பதிவில் சாணக்கிய நீதி படி எந்தெந்த விஷயங்களை மற்றவர்களுடன் ஒருபோதும் சொல்லக்கூடாது என்று தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை யாரிடம் சொல்லக்கூடாது

சாணக்கிய நீதி படி உங்கள் குடும்பப் பிரச்சனைகள், உடல்நலப் பிரச்சனைகள் அல்லது மற்ற தனிப்பட்ட பிரச்சனைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இதனால், மற்றவர்கள் உங்கள் பலவீனத்தை உங்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது உங்களைக் கேலி செய்யலாம். மேலும், உங்கள் வருமானம், செலவுகள், சேமிப்பு மற்றும் முதலீடுகள் பற்றியும் யாரிடமும் சொல்லாதீர்கள். இது மற்றவர்களுக்கு உங்கள் மீது பொறாமையை ஏற்படுத்தலாம் அல்லது உங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.

திட்டங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது

சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, ஒருவர் தனது தொழில் திட்டங்கள், வணிக யோசனைகள் அல்லது தனிப்பட்ட இலக்குகள் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது. ஏனெனில் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அந்த நபர்கள் உங்கள் திட்டங்களைத் திருடலாம் அல்லது அந்த திட்டத்தை நிறைவேற விடாமல் தடுக்கலாம். இது மட்டுமல்லாமல், உங்களின் மகிழ்ச்சி மற்றும் வெற்றி போன்ற சாதனைகளைப் பற்றி அதிகமாகப் பெருமை பேசாதீர்கள். அது மற்றவர்களுக்குப் பொறாமையை உண்டாக்கும். உங்களை எதிர்மறையாக உணர வைக்கும். ஒவ்வொரு நபரின் வாழ்விலும் சில இரகசியங்கள் இருங்க வேண்டும் என்பது அவசியம்.

தனிப்பட்ட ரகசியங்களை சொல்லக்கூடாது

சாணக்கியரின் அறிவுரையின் படி மக்கள் தங்கள் காதல் விவகாரங்கள் அல்லது குடும்ப உறவுகள் பற்றிய அதிகப்படியான தகவல்களை யாரிடமும் கொடுக்கக் கூடாது. இது தவறான புரிதலுக்கு வழிவகுக்கலாம் அல்லது உங்கள் வேலையில் தடைகளை ஏற்படுத்தலாம். பிரச்சனைகளையும் திட்டங்களையும் நம்பகமான மற்றும் நேர்மையான நபர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களிடம் கூட மிகவும் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது.

திருமண வாழ்க்கையின் ரகசியங்கள்

கணவன்-மனைவி உறவு என்பது பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. தம்பதிகள் இருவரும் தங்கள் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், ஒருபோதும் தங்களுக்குள் நடக்கும் விஷயங்களை மூன்றாம் நபரிடம் சொல்லக்கூடாது. அவ்வாறு செய்வது திருமண பந்தத்தை பலவீனப்படுத்தும். அது குடும்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.

உண்மையான வயது

ஒருவர் தனது உண்மையான வயதை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று சாணக்கியர் கூறியுள்ளார். சில மருந்துகளும் சிகிச்சை முறைகளும் இரகசியமாக வைக்கப்படுவதைப் போலவே, உண்மையான வயதை இரகசியமாக வைத்திருப்பது சில சமயங்களில் நன்மை பயக்கும்.

Story first published: Friday, June 26, 2026, 10:12 [IST]
Desktop Bottom Promotion