Latest Updates
-
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்!
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறார். அத்தேசமயம் நவகிரகங்களிலேயே சனிபகவான்தான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். எனவே சனிபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜோதிடக் கணிப்புகளின் படி, ஜூலை 27 அன்று சனி பகவான் மீன ராசியில் வக்ர பெயர்ச்சியைத் தொடங்கப் போகிறார். டிசம்பர் 11 அன்று அவர் மீண்டும் நேரடி இயக்கத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனிபகவானின் இயக்கத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இந்த கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தற்போது சனி ஏழரைச் சனியின் முதல் கட்டத்தில் உள்ளனர். சனியின் வக்ர இயக்கம் மேஷ ராசிக்காரர்ளுக்கு பணியிடத்தில் ஏற்றத்தாழ்வுகள், சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிகரித்த வேலை அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். பணம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளால் அவர்களின் பல திட்டங்கள் தடைபடும், மேலும் பல சிக்கல்கள் அவர்களை தேடிவரும்.
அவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக அவர்களின் ஆரோக்கியமும் சிக்கலில் இருக்கும். இது சனி வக்ர பெயர்ச்சி அவர்களுக்கு பல மோசமான பலன்களை கொடுக்கப்போகிறது. சிலர் தனிப்பட்ட அல்லது திருமண உறவுகளில் சிரமங்களை அனுபவிக்கலாம். இந்தக் காலகட்டத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தற்போது ஏழரை சனியின் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத்தில் உள்ளனர். இந்த காலகட்டத்தில் பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், முடிந்தவரை இந்த காலகட்டத்தில் எந்த முதலீடுகளையும் செய்யாமல் இருப்பது நல்லது. அவசரமாக எடுக்கும் முடிவுகள் பெரிய இழப்புகளுக்கு வழிவகுக்கலாம், அதேவேளையில் கவனக்குறைவு தொழில் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும்.
இது ஆரோக்கியத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில், இது எதிர்மறையான விளைவுகளைத் தரும் என்று கருதப்படுகிறது. பயணம் மற்றும் வணிகத்தில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் கடுமையான மன உளைச்சலும், பதட்டமும் நிலவும். எனவே நிதானமாக செயல்படவும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் தற்போது ஏழரை சனியின் இரண்டாம் கட்டத்தில் உள்ளனர். இந்த காலகட்டம் பொதுவாகவே மிகவும் சவாலானதாகக் கருதப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் தொழில்ரீதியான தடைகள், நீண்ட கால இலக்குகளை அடைவதில் தாமதம் மற்றும் மன அழுத்தம் அதிகரித்தல் போன்றவை ஏற்படக்கூடும். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றால், அது குடும்பத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். நிதி நெருக்கடிகள் அதிகரிப்பது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதில் தலையிட வேண்டாம், இல்லையெனில் நீங்கள் அவமானங்களை சந்திக்க நேரிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

