Latest Updates
-
வரலாற்றின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவரின் ஒரு பயணம் எப்படி உலக வரலாற்றை மாற்றியது தெரியுமா? -
உடல் சூட்டை டக்கென்று குறைக்கும் டாப் 3 உணவுகளை பட்டியலிட்ட சித்த மருத்துவர் - அது என்னென்னன்னு பாருங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி!
கொரோனா இருந்தா இந்த மூச்சுப் பயிற்சிகளை மறந்தும் செஞ்சுடாதீங்க...
கொரோனா தொற்றுக்குப் பிறகு செய்ய வேண்டிய மூச்சுப் பயிற்சிகள் பல இருந்தாலும், ஒரு சில மூச்சுப் பயிற்சிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது.
கொரோனா பெருந்தொற்று நம்மைத் தாக்காமல் இருக்க வேண்டும் என்றால் நமது சுவாச மண்டலத்தை மிகவும் வலுவாக வைத்திருக்க வேண்டும். கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே, இந்த தகவலானது வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதிய கொரோனா வைரஸானது, சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட நோயாக இருப்பதால், அது நுரையீரல் திசுக்களைத் தாக்கி, நமக்கு சளியையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்துகிறது.

கோவிட்-19 ஏற்படுவதற்கு முன்பும் மற்றும் அதிலிருந்து குணமடைந்த பின்பும் மூச்சுப் பயிற்சியை தொடா்ந்து செய்து வந்தால், அது நமது சுவாச மண்டலத்தைத் சுத்தப்படுத்தும். அதனால் நமது நுரையீலுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.
கொரோனா தொற்றுக்குப் பிறகு செய்ய வேண்டிய மூச்சுப் பயிற்சிகள் பல இருந்தாலும், ஒரு சில மூச்சுப் பயிற்சிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இந்த வகையான மூச்சுப் பயிற்சிகள் நமது சுவாச மண்டலத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்து வரும் போது இந்த வகையான மூச்சுப் பயிற்சிகளைச் செய்தால் அது மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு, வேறு பல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
ஆகவே கொரோனா பாதிப்பு இருந்தால் பின்வரும் 3 மூச்சுப் பயிற்சிகளைச் செய்யாமல் தவிா்ப்பது நல்லது.

கபல்பதி பிராணயாமா (Kapalbhati Pranayama)
கபல்பதி என்ற வாா்த்தை, கபல் மற்றும் பதி ஆகிய இரண்டு வாா்த்தைகளில் இருந்து வருகிறது. கபல் என்றால் மண்டை ஓடு என்று பொருள். பதி என்றால் ஒளிா்தல் என்று பொருள். மூச்சுப் பயிற்சியைச் செய்யும் போது நமது உடலில் வெப்பம் உண்டாகிறது. அந்த வெப்பமானது நமது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் மூச்சுப் பயிற்சியானது நமது வளா்சிதை மாற்றத்தை அதிகாித்து, நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்றவற்றின் இயக்கத்தை அதிகாிக்கிறது.

ஏன் செய்யக்கூடாது?
ஆனால் கபல்பதி பிராணயாமா என்பது ஒரு மேம்படுத்தப்பட்ட மூச்சுப் பயிற்சி ஆகும். இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்தால், அது நமது உடலில் உள்ள உள் உறுப்புகளில் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கொரோனா பாதிப்பு மிதமாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கும் போது இந்த மூச்சுப் பயிற்சியை செய்தால், அது மூச்சுத் திணறலையும், மயக்கத்தையும் ஏற்படுத்தும். அதோடு, இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவா்களும், வயிற்றுப்புண் இருப்பவா்களும் இந்த கபல்பதி பிராணயாமா மூச்சிப் பயிற்சி செய்வதைத் தவிா்ப்பது நல்லது.

மூா்ச்சா பிராணயாமா
மூா்ச்சா என்ற வாா்த்தைக்கு மயக்கம் என்று பொருள். ஆகவே மூா்ச்சா பிராணயாமா என்ற இந்த மூச்சுப் பயிற்சி ஒரு மயக்கம் அளிக்கும் மூச்சுப் பயிற்சி ஆகும். பொதுவாக இந்த பயிற்சியை ஒரு செய்யும் போது, மிகவும் மெதுவாக மூச்சை உள் இழுத்து விடவேண்டும்.

ஏன் செய்யக்கூடாது?
மூா்ச்சா பிராணயாமாவும் ஒரு மேம்படுத்தப்பட்ட மூச்சுப் பயிற்சி ஆகும். இந்தப் பயிற்சியைச் செய்யும் போது ஒரு விதமான மயக்க உணா்வை அல்லது மிதப்பது போன்ற ஒரு உணா்வை ஏற்படுத்தும். மேலும் இந்த மூச்சுப் பயிற்சி ஒரு மெல்லிய பரவச உணா்வை ஏற்படுத்தும். அதனால் இந்த மூச்சுப் பயிற்சியை எல்லோரும் செய்வது நல்லது அல்ல.
அடிப்படையான மூச்சுப் பயிற்சிகளை நன்றாகக் கற்ற பின்பு, மூா்ச்சா மூச்சுப் பயிற்சியைச் செய்வது நல்லது. கோவிட் பாதிப்பில் இருக்கும் நோயாளிகள், இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்வதற்கு முயலக்கூடாது. ஏனெனில் இந்த மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு, நீண்ட நேரத்திற்கு மூச்சைப் பிடித்து நிறுத்தினால், அது மயக்கத்தை ஏற்படும். அதோடு கோவிட்டினால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வரும் நுரையீரலுக்கு மேலும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.

பஸ்ட்ரிகா பிராணயாமா
பஸ்ட்ரிகா பிராணயமா என்ற மூச்சுப் பயிற்சி பாா்ப்பதற்கு கபல்பதி பிராணயாமாவைப் போல இருக்கும். ஆனால் இரண்டுமே முற்றிலும் வேறுபட்டவை. இந்த மூச்சுப் பயிற்சில் ஈடுபடும் போது, மிக விரைவாக மூச்சை உள்ளிழுத்து, வெளிவிட வேண்டும். அதாவது கொல்லா்கள் தங்களது துருத்தியை விரைவாக ஊதுவது போல், மூச்சை வேகமாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். ஆகவே இது துருத்தி மூச்சு என்று கருதப்படுகிறது.

ஏன் செய்யக்கூடாது?
பஸ்ட்ரிகா பிராணயாமா ஒரு எளிமையான மூச்சுப் பயிற்சியாக இருந்தாலும், இது நமது உடலுக்குள் அதிகமான வெப்பத்தை உருவாக்குவதோடு, நமது நுரையீரலிலும் அதிக அளவிலான அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதனால் ஆரோக்கியமான ஒருவா் இந்த மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டாலும், அவருக்கு மூச்சுத் திணறலையும், மயக்கத்தையும் ஏற்படுத்தும். ஆகவே கொரோனா பாதிப்பில் இருக்கும் நோயாளிகள், இந்த மூச்சுப் பயிற்சியை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனா். அவா்கள் மட்டும் அல்ல, இதயம் சம்பந்தமான நோய்கள் இருப்பவா்கள் மற்றும் இரத்த அழுத்தம் இருப்பவா்கள் பஸ்ட்ரிகா பிராணயாமா மூச்சுப் பயிற்சியைச் செய்யாமல் இருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications