For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றணுமா? அப்ப இந்த டீயை தினமும் குடிங்க...

நுரையீரலில் இறுகிய நிலையில் உள்ள சளியை எளிதில் உடைதெறிய உதவும் அற்புதமான ஓர் நிவாரண வழி தான் வெந்தய டீ. மேலும் இது அனைவரது சமையலறையிலும் இருக்கக்கூடிய ஒரு மசாலாப் பொருள்.

|

தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் இதர வெளிப்புற காரணிகளால் ஒருவரது நுரையீரலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஒருவரது சுவாசத்தில் இரண்டு நுரையீரல்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன. வளர்ந்த ஐரோப்பாவில் மொத்த இறப்பு விகிதத்தில் 8 சதவீதம் மூச்சுத் திணறல் பிரச்சனையால் ஏற்பட்டதாக ஒரு ஆய்வு காட்டும் போது எவ்வளவு ஆச்சரியமாக உள்ளது. காற்று மாசுபாடு, புகைப்பிடித்தல், குப்பைகளை எரித்தல், கெமிக்கல்களின் பயன்பாடு மற்றும் தற்போது உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் போன்றவை நுரையீரலின் சரியான செயல்பாட்டிற்கு இடையூறை ஏற்படுத்துபவை.

Break Down Mucus In Lungs With Fenugreek Tea For Better Respiratory Health

நகரமயமாக்கல், கால அட்டவணைகள் மற்றும் பிற காரணிகளை மாற்றுவதன் மூலம், சுவாச நோய்களின் வழக்குகளில் நிலையான உயர்வு காணப்படுகிறது. ஒருவரது நுரையீரலை நோய்கள் அதிகமாக தாக்கும் போது, அது சுவாச மண்டலத்திற்கு மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தி, நுரையீரலின் சுவாசத் திறனைக் குறைக்கிறது.

MOST READ: இந்த சாதாரண பழக்கங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தை அதிகரிக்கும் என்பது தெரியுமா? இன்னக்கே அத கைவிடுங்க...

எனவே அவ்வப்போது நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்களில் இருந்து இரட்டிப்பு பாதுகாப்பை நுரையீரலுக்கு அளிக்க, ஒட்டுமொத்த உலகமும் மாற்று சிகிச்சைகளை தேடி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சளி

சளி

இன்று பலரது நுரையீரலில் சளி அதிகம் தேங்கியுள்ளது. இப்படி சளி வெளியேறாமல் நுரையீரலிலேயே தங்கியிருந்தால், இருமலால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். அதே சமயம் அதிகப்படியான சளித் தேக்கம் உடலின் நோயெதிர்ப்பு திறனை எவ்வாறு குறைக்கும் என்பது தெரியுமா? உடலில் சளி அதிகம் தேங்கும் போது, அது பாக்டீரியா, கிருமிகள், வைரஸ்கள் போன்றவற்றை உடலிலேயே தங்க வைத்து, உடலின் நிலைமையை மோசமாக்குகிறது. பொதுவாக நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளியை அகற்ற உடலில் நடைபெறும் சில வேறுபட்ட வழிமுறைகள் தான் இருமல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல்.

MOST READ: கொரோனாவின் புதிய அறிகுறியை கூறிய ஸ்பானிஷ் நிபுணர்கள்... அது என்ன அறிகுறி?

வழக்கத்திற்கு அதிகமான சளி

வழக்கத்திற்கு அதிகமான சளி

சிலருக்கு வழக்கத்திற்கு அதிகமாக சளி தேங்கியிருக்கும். இப்படி அதிகப்படியான சளியைக் கொண்டவர்கள் மாதக்கணக்கில் இருமல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். இப்படி உடலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றுவதற்கு, முதலில் அதை உடைக்க வேண்டும். அதற்கு சிறப்பான வழி சுடுநீர் ஆவி பிடிப்பது. சளியால் அவஸ்தைப்படுபவர்கள் ஆவி பிடிக்கும் போது, வெதுவெதுப்பான காற்றை நாசிகளின் வழியே உள்ளிழுக்கும் போது, இறுகிய நிலையில் இருந்த சளி இளகி, எளிதில் வெளியேறுவதற்கு ஏற்றவாறு மாறும்.

சளியை உடைதெறிவதற்கான மாற்று வழி

சளியை உடைதெறிவதற்கான மாற்று வழி

நுரையீரலில் இறுகிய நிலையில் உள்ள சளியை எளிதில் உடைதெறிய உதவும் அற்புதமான ஓர் பொருள் தான் வெந்தயம். இது அனைவரது சமையலறையிலும் இருக்கக்கூடிய ஒரு மசாலாப் பொருள். மேலும் இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தன்னுள் கொண்டது. இப்போது சளியை எளிதில் இளகச் செய்ய வெந்தயத்தை எப்படி உட்கொள்வது என்று காண்போம்.

MOST READ: இருமல் வந்தாலே கொரோனா வைரஸா இருக்குமோ என்று பயம் ஏற்படுதா? அப்ப இத படிங்க தெளிவாகிடுவீங்க...

வெந்தய டீ செய்முறை

வெந்தய டீ செய்முறை

* ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் வடிகட்ட வேண்டும்.

* வேண்டுமானால், இத்துடன் சிறிது மிளகையும் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளலாம்.

எவ்வாறு மற்றும் எப்போது குடிக்க வேண்டும்?

எவ்வாறு மற்றும் எப்போது குடிக்க வேண்டும்?

* சிறப்பான பலன் கிடைக்க வெந்தய டீயை தினமும் காலையில் ஒரு கப் மற்றும் மாலையில் ஒரு கப் என குடிக்க வேண்டும்.

* மிளகை இந்த பானத்துடன் சேர்ப்பதால் இந்த பானத்தின் நன்மை இரட்டிப்பாகும். மிளகில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வலி நிவாரணப் பண்புகள் உள்ளது மற்றும் இது சளியை எளிதில் உடைத்தெறிந்து வெளியேற்றும்.

இப்போது நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்ற உதவும் இதர சில வழிகளைக் காண்போம்.

MOST READ: மக்களே உஷார்..! கொரோனா வைரஸ் காற்றிலும் பரவுமாம்.. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்..

எலுமிச்சை தேன்

எலுமிச்சை தேன்

ஒரு டம்ளர் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் 2-3 முறை குடிக்க வேண்டும். இதனால் தேன் தொண்டை மற்றும் நெஞ்சு பகுதிக்கு இதமளிக்கும் மற்றும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

வெதுவெதுப்பான பால்

வெதுவெதுப்பான பால்

வெதுவெதுப்பான பாலில் தேன், மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கிருமிகளை அழிக்க உதவும். மிளகு செரிமானத்திற்கும், இருமல் மற்றும் சளியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். இந்த பானத்தல் தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.

MOST READ: இந்தியர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்திய ஆயுஷ் அமைச்சகம் கூறிய வழிகள் இதாங்க...

சுடுநீர்

சுடுநீர்

சுடுநீரை எப்போதும் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அது நெஞ்சு பகுதியில் சளி தேங்குவதைத் தடுத்து, சுவாசப் பாதையில் உள்ள சளியை எளிதில் வெளியேற்றும். ஆகவே இனிமேல் குளிர்ந்த நீரைப் பருகாமல் சுடுநீரைப் பருகும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ப்ளாக் காபி

ப்ளாக் காபி

சளித் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் ப்ளாக் காபி குடித்தால், தற்காலிக நிவாரணம் கிடைப்பதோடு, நெஞ்சு பகுதியில் உள்ள சளியை இளக உதவும். ஆனால் ஒரு நாளைக்கு 2 கப்பிற்கு மேல் காப்ஃபைன் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

MOST READ: கொரோனா வைரஸ் குறித்து ஒவ்வொருவரின் மனதில் எழும் கேள்விகளும்... அதற்கான பதில்களும்...

மஞ்சள்

மஞ்சள்

சுடுநீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் மஞ்சளில் உள்ள குர்குமின், சளியை இளகச் செய்யும் மற்றும் நெஞ்சு சளிக்கு நிவாரணம் அளிக்கும் மற்றும் அதில் உள்ள மருத்துவ பண்புகள் பாக்டீரியாக்களை அழிக்கும் மற்றும் சளி, இருமல் தொந்தரவைப் போக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Break Down Mucus In Lungs With Fenugreek Tea For Better Respiratory Health

Respiratory health is a major concern, and hence proper ways should be undertaken to take care of health for an enhanced immunity during COVID-19.
Desktop Bottom Promotion