Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
உங்க மேல வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா? அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... உஷார்..
அதிகப்படியான வியர்வை நாற்றமானது உடலில் உள்ள ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பது தெரியுமா?
Body Odour Causes: பொதுவாக வெயில் அதிகமாக கொளுத்தம் போது வியர்க்கும். இப்படி வெயிலில் சுற்றி ஒருவருக்கு வியர்ப்பது என்பது இயல்பான நிகழ்வு. நமது வியர்வையானது வாசனையற்றது. ஆனால் அந்த வியர்வை நமது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் சேரும் போது தான் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. ஒருவரது உடலில் அதிகளவு வியர்வை நாற்றம் வீசினால், அது மற்றவர்களின் அருகில் செல்லவே ஒருவித அசௌகரியம் மற்றும் சங்கடத்தை உண்டாக்கும்.

ஆனால் சில நேரங்களில் இந்த வியர்வை நாற்றமானது உடலில் உள்ள ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பது தெரியுமா? ஆம், அதிகப்படியான வியர்வையானது ஒருசில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கின்றன. எனவே உங்களுக்கு அளவுக்கு அதிகமாக காரணமின்றி வியர்த்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள். இப்போது உடலில் எந்த பிரச்சனை இருந்தால் உடல் துர்நாற்ற பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

ஹைப்பர்ஹைட்ரோசிஸ்
எப்போது ஒருவருக்கு வழக்கத்தை விட அதிகமாக வியர்க்கிறதோ, அவருக்கு ஹைப்பர்ஹைட்ரோசிஸ் இருக்க வாய்ப்புள்ளது. ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்னும் நிலை ஒருவருக்கு இருந்தால், அவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கும் மற்றும் அவர்களின் அருகில் சென்றால் கடுமையான வியர்வை நாற்றம் வீசும். இம்மாதிரியான நிலையை நிர்வகிக்க வியர்வை எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பிற மருந்துகளைப் பயன்படுத்தலாம். ஆனால் இது முற்றிய நிலையில் அறுவை சிசிச்சை தேவைப்படலாம்.

சர்க்கரை நோய்
தற்போது சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் நிறைய பேருக்கு தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரிவதில்லை. உங்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்தால், உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம். முக்கியமாக சர்க்கரை நோய் இருந்தால், உடல் துர்நாற்றம் மட்டுமின்றி, வாய் துர்நாற்றம் மற்றும் அவர்களின் சிறுநீரும் கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கும். இந்நிலையில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் உடல் துர்நாற்றத்தைக் குறைக்கலாம்.

சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய்
எப்போது ஒருவரது சிறுநீரகம் அல்லது கல்லீரல் சரியாக செயல்படுவதில்லையோ, அப்போது உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, அதன் விளைவாக வியர்வையின் போது அழுகிய முட்டையின் நாற்றம் அவர்கள் மீது வீசும் மற்றும் வாய் துர்நாற்றமும் அதிகமாக இருக்கும்.

தைராய்டு பிரச்சனை
நமது உடலில் உள்ள தைராய்டு சுரப்பி உடலில் பல முக்கியமான செயல்பாடுகளை சீராக நடைபெற வைக்கின்றன. அதில் ஒன்று தான் வியர்வை சுரப்பது. எப்போது ஒருவரது தைராய்டு சுரப்பியில் அதிகப்படியான தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறதோ, அப்போது அதிகளவு வியர்வை பிரச்சனையை ஒருவர் சந்திக்க நேரிடும்.

டிரிமெதிலாமினுரியா (Trimethylaminuria)
இது ஒரு அரிய வகை மரபணு கோளாறு ஆகும். இப்பிரச்சனையைக் கொண்டிருந்தால், அது வாய், சிறுநீர் மற்றும் வியர்வையில் அழுகிய மீன் நாற்றத்தை உண்டாக்கும். இந்த வகையான கோளாறு கொண்டிருந்தால், அதை உணவு மாற்றங்கள் மற்றும் மருந்துகளின் மூலம் நிர்வகிக்கலாம்.

ஹார்மோன்கள்
ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால், அது அதிகப்படியான வியர்வையை வெளியேற்றி, உடல் துர்நாற்றத்தை உண்டாக்கும். அதனால் தான் கர்ப்பிணிகள், டீனேஜ் வயதினர் மற்றும் இறுதி மாதவிடாயை நெருங்கும் பெண்கள் அதிகப்படியான வியர்வையை சந்திக்கிறீர்கள். ஏனெனில் இந்த காலத்தில் இவர்களின் உடலில் உள்ள ஹார்மோன்கள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.

உடல் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த சில டிப்ஸ்..
* தினமும் இரண்டு வேளை சோப்பு பயன்படுத்தி குளிக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வியர்வை மற்றும் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் நீக்கப்பட்டு, உடல் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
* நல்ல காற்றோட்டமாக இருக்கும் காட்டன் அல்லது லெனின் உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.
* வியர்வை எதிர்ப்பு மருந்துகள் மற்றும் டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்தலாம்.
* அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் துர்நாற்றம் வீசுவது குறையும்.
* வெங்காயம், பூண்டு போன்ற உணவுகள் கடுமையான உடல் துர்நாற்றத்தை உண்டாக்கும். எனவே இவற்றைத் தவிர்க்க வேண்டும் அல்லது அளவாக உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் துர்நாற்றத்தைக் குறைக்கலாம்.



Click it and Unblock the Notifications