Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
தொப்பை குறையணுமா? அப்ப கருஞ்சீரகத்தை இந்த மாதிரி சாப்பிடுங்க.. சீக்கிரம் குறையும்..
கருஞ்சீரகத்தை நிறைய பேருக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாது. ஆனால் இந்த கருஞ்சீரகம் உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் கெட்ட நீரை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும்.
Black Cumin Seeds For Weight Loss: நமது சமையலறையில் உள்ள மசாலா பொருட்கள் உணவின் சுவையை அதிகரிக்கவும், உணவிற்கு நல்ல மணத்தை தருவதற்கு மட்டும் பயன்படுவதில்லை. இந்த மசாலாப் பொருட்களில் உள்ள மருத்துவ பண்புகள் உடலில் பல மாயங்களை செய்யக்கூடியவை. இதில் நாம் மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள், கிராம்பு, பட்டை ஆகியவற்றின் நன்மைகளைப் பற்றி அறிந்திருப்போம். ஆனால் இவை அனைத்தையும் விட ஏராளமான நன்மைகளை வழங்கும் சத்துக்களைக் கொண்டவை தான் கருஞ்சீரகம். இது நல்ல மணத்தைக் கொண்டது. இதன் மணமே அதை சாப்பிட வேண்டுமென்ற உணர்வைத் தரும்.

கருப்பு நிறத்தில் காணப்படும் இந்த கருஞ்சீரகத்தை நிறைய பேருக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாது. ஆனால் இந்த கருஞ்சீரகம் உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் கெட்ட நீரை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், கருஞ்சீரகத்தை ஒரு மாதம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். இப்போது கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் நன்மைகளை மட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்க எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதையும் கண்போம்.

கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள்
கருஞ்சீரகத்தில் பல்வேறு வகையான நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. இதனால் இது நாட்டு மருத்துவத்தில் மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருஞ்சீரகம் ஆயுர்வேதத்தில் மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கருஞ்சீரக விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் பைட்டோகெமிக்கல்கள் மற்றும் எடையைக் குறைக்க உதவும் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன

கருஞ்சீரகம் வழங்கும் நன்மைகள்
* நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.
* இரத்த சர்க்கரை அளவை சீராக்கும்.
* கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.
* உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.
* இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* இயற்கை வலி நிவாரணி
* நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும்

கருஞ்சீரகம் எடை இழப்பிற்கு எப்படி உதவுகிறது?
கருஞ்சீரக விதைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், அது பசியுணர்வைக் கட்டுப்படுத்தும் மற்றும் இதில் செயலில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் இருப்பதால், இது உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையை வேகப்படுத்துகிறது.
இப்போது உடல் எடையைக் குறைக்க கருஞ்சீரக விதைகளை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.

வழி #1
* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு சிட்டிகை கருஞ்சீரக விதைகளை எடுத்து வாயில் போட்டு, அந்த எலுமிச்சை நீரைக் குடிக்க வேண்டும்.

வழி #2
* ஒரு பௌலில் சிறிது கருஞ்சீரக விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் விதை மூழ்கும் அளவில் எலுமிச்சை சாற்றினைப் பிழிய வேண்டும்.
* பின்பு அதை வெயிலில் வைத்து விதைகளை காய வைக்க வேண்டும். இதற்கு 1-2 நாட்கள் ஆகலாம்.
* பிறகு 8-10 விதைகளை எடுத்து தினமும் இரண்டு வேளை உட்கொள்ள வேண்டும்.
* இப்படி தொடர்ந்து தினமும் உட்கொண்டு வந்தால், ஒரு வாரத்திலேயே தொப்பையில் மாற்றத்தைக் காணலாம்.

வழி #3
* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிய வேண்டும்.
* பின் அதில் சிறிது கருஞ்சீரக விதைகளை கையால் நசுக்கி போட வேண்டும்.
* பிறகு அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
* இப்படி தினமும் குடித்து வந்தால், தொப்பை வேகமாக கரையும்.

எச்சரிக்கை
கருஞ்சீரக விதைகளை உட்கொள்ளும் முன் ஒருசில விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் கருஞ்சீரக விதைகளை ஒரு வேளையில் 4-5 விதைகளுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால், அது உடலில் பித்தத்தை அதிகரித்துவிடும். கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரக விதைகளை உட்கொள்ளும் முன், மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னரே எடுக்க வேண்டும். ஏனெனில் அது உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் கருச்சிதைவு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.



Click it and Unblock the Notifications
