Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
செலவே இல்லாமல் உங்கள் இரத்தத்தில் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்க இந்த எளிய மாற்றங்களே போதும்...!
நீங்கள் அடிக்கடி சோர்வாக உணருகிறீர்களா?. சோர்வும், களைப்பும் உங்களை பாடாய்ப் படுத்துகிறதா? இதற்கு காரணம் உங்கள் இரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனின் அளவு குறைவதாக கூட இருக்கலாம்.
உயிர் வாழ்வதற்கு அனைத்து உறுப்புக்களையும் விட அவசியமான ஒன்று இரத்தம்தான். நமது உடலில் இருக்கும் இதயம் முதல் சிறு நரம்பு வரை அனைத்தும் செயல்பட இரத்தம்தான் எரிபொருள். ஒரு உறுப்புக்குச் செல்லும் இரத்தத்தின் அளவில் மாற்றமோ அல்லது பற்றாக்குறையோ ஏற்படும்போது அந்த உறுப்பின் செயல்பாட்டில் பிரச்சினைகள் ஏற்படும்.

நீங்கள் அடிக்கடி சோர்வாக உணருகிறீர்களா?. சோர்வும், களைப்பும் உங்களை பாடாய்ப் படுத்துகிறதா? இதற்கு காரணம் உங்கள் இரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனின் அளவு குறைவதாக கூட இருக்கலாம். உங்க இரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்க அதிக செலவு செய்ய வேண்டுமென்று அவசியமில்லை. செலவே இல்லாமல் எளிய வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம் உங்கள் இரத்தத்தின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கலாம்.

உடற்பயிற்சிகள்
உங்கள் இரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்க நீங்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் உடலில் இருக்கும் செல்கள் வழக்கத்தை விட அதிகமாக ஆக்சிஜனை எறிக்கிறது. உடலில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும்போது, உங்கள் மூளை அதிக ஆக்ஸிஜனைப் பெற சுவாச வீதத்தை அதிகரிக்கிறது. உடற்பயிற்சியின் போது உங்கள் இதயமும், நுரையீரலும் அதிக ஆக்சிஜனை உள்ளிழுக்க முயலும்.

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ளும்போது, உங்கள் உடல் ஆக்ஸிஜனை சிறந்த முறையில் பயன்படுத்தலாம். வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி போன்றவை சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பெர்ரி வகைகள், சிவப்பு கிட்னி பீன்ஸ், இலை காய்கறிகள் போன்ற பொருட்களை சாப்பிட்டு நீங்கள் உங்கள் உடலில் ஆன்டி ஆக்சிடண்ட்களின் அளவை அதிகரிக்கலாம்.

உடல் நிலைகளில் மாற்றம்
உங்கள் உடலின் நிலைகளுக்கும், இரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவிற்கும் தொடர்பு இல்லை என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் உண்மையில் தொடர்பு இருக்கிறது. நீங்கள் சாய்ந்த நிலையிலேயே நிற்கவும், நடக்கவும், அமரவும் செய்தால் அது உங்கள் சுவாசத்தின் மீது ஒரு தடையை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உடலுக்கு குறைவான ஆக்சிஜனே கிடைக்கும். நிமிர்ந்த முதுகு மற்றும் நேராக்கப்பட்ட நடையுடன் உட்கார்ந்து அல்லது நடப்பது அதிக ஆக்ஸிஜனை உள்ளிழுக்க உதவுகிறது, மேலும் இது இரத்த ஓட்டத்திலும் நுழைகிறது.

கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்சைடை தவிர்க்கவும்
கார்பன் மோனாக்சைடு மற்றும் அதனை ஒத்த வாயுக்களின் செறிவு அதிகமாக இருக்கும் பகுதிகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். நகர்ப்புறங்களில் இதுபோன்ற பகுதிகளைக் கண்டுபிடிப்பது கடினம். ஆயினும்கூட, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

சுத்தமான காற்று சுவாசிக்கவும்
சுத்தமான காற்று இருக்குமிடத்தில் நீங்கள் அதிக நேரம் செலவழிக்கும் போது உங்கள் இரத்த ஓட்டத்திற்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. உங்கள் வீட்டுத் தோட்டங்களில் அதிக ஆக்சிஜனை வெளியிடும் செடிகளை வளர்க்கத் தொடங்குங்கள். காலை நேரத்தில் அதிக மரங்கள் நிறைந்த இடத்தில் நடைப்பயிற்சி செய்வது உங்களுக்கு தேவையான ஆக்சிஜனை கொடுக்கும். நீங்கள் வசிக்கும் அறையில் போதுமான காற்றோட்ட வசதி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கொழுப்பு அமிலங்கள் இருக்கும் உணவுகள்
உடலுக்கு அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கும் உணவுகளை சாப்பிடுவது பல வழிகளில் உங்களுக்கு உதவியாக இருக்கும். இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்க இந்த பொருட்கள் மிகவும் அவசியமானவை. ஆல்பா-லினோலெனிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் போன்ற சேர்மங்களைக் கொண்ட உணவுகள் இதற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வால்நட், சோயாபீன், ஆளி விதைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புகைப்பிடித்தல் மற்றும் மதுபழக்கத்தை தவிர்க்கவும்
புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம், உங்கள் இரத்த ஓட்டம் தேவையான அளவு ஆக்ஸிஜனைக் கொண்டிருப்பதை உறுதிசெய்யலாம். இத்தகைய பழக்கங்களை நிராகரிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று உங்களுக்கே நன்கு தெரியும்.



Click it and Unblock the Notifications