Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
ஆண்களே! 'அந்த' விஷயத்தில் நீங்க குதிரை போல செயல்படவும் உச்சக்கட்டத்தை அடையவும் இத குடிச்சா போதுமாம்!
ஜின்ஸெங்கை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விறைப்புத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த பாலியல் திருப்தியும் மேம்படும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
பாலியல் ஆசை அல்லது லிபிடோ, பாலியல் உந்துதல் என்று அழைக்கப்படும். ஒவ்வொரு உறவிலும் பாலியல் வாழ்க்கை முக்கிய பங்கு வகிக்கிறது. திருப்திகரமான பாலியல் வாழ்க்கை எப்போதும் உறவை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். மன அழுத்தம் நிறைந்த அன்றாட வாழ்வில், செக்ஸ் வாழ்க்கை சலிப்பானதாகவும், ஆர்வம் இல்லாததாகவும் இருக்கலாம். இது காலப்போக்கில் உங்கள் லிபிடோ அளவு குறைவதற்கு வழிவகுக்கும். உங்கள் தினசரி வழக்கத்தில் சில தந்திரங்களை இணைப்பதன் மூலம் உங்கள் பாலியல் பசியை மீண்டும் தூண்ட முயற்சி செய்யலாம். உங்கள் பாலியல் ஆசையை இயற்கையாக தூண்ட பல வழிகள் உள்ளன.

உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், உங்கள் ஆர்வத்தையும் சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கலாம். அந்த வகையில், பல மூலிகை டீகள் உங்கள் லிபிடோவை அதிகரிப்பதற்கான ரகசியங்களில் ஒன்றாகும். இக்கட்டுரையில், உங்கள் பாலியல் ஆசையை அதிகரிக்க உதவும் சிறந்த மூலிகை டீகள் பற்றி காணலாம்.

மூலிகை தேநீர் லிபிடோவை அதிகரிக்குமா?
மனநிலையை உயர்த்தும் மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் பண்புகள் காரணமாக, தேநீர் பெரும்பாலும் பாலியல் ஆசையை அதிகரிக்க முயற்சிக்கும் நபர்களுக்கு ஒரு ஆரோக்கிய பானமாக இருக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது. பெரும்பாலான மூலிகை தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இது லிபிடோவை அதிகரிக்க உதவியாக இருக்கும். இந்த கேட்டசின்கள் உடலுறவுக்கு தூண்டுவது உட்பட உடல் முழுவதும் சுழற்சியை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஜின்செங்
ஜின்செங் பாரம்பரிய சீன மருத்துவத்தில் மிக முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகும். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரவலான சுகாதார நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பாலியல் செயல்திறனை மேம்படுத்தும் ஆசிய ஜின்ஸெங்கின் திறன் அமெரிக்க ஜின்ஸெங்கை விட பரவலாக ஆய்வு செய்யப்படுகிறது. இரண்டுமே நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் செயலில் உள்ள சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் ஆசிய ஜின்ஸெங் மிகவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் திருப்தியை மேம்படுத்தும்
ஜின்ஸெங்கை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விறைப்புத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த பாலியல் திருப்தியும் மேம்படும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. ஆண்களுக்கு நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஜின்ஸெங் தேநீர் பெண்களின் லிபிடோவை மேம்படுத்துகிறது, பாலியல் ஆசையை தூண்டுதல் மற்றும் திருப்தி ஆகியவற்றை அதிகரிக்கிறது.

மக்கா
பெருவியன் ஜின்ஸெங் அல்லது மக்கா, பல நூற்றாண்டுகளாக ஆண்டிஸின் பழங்குடி மக்களால் பாலியல் உந்துதலை அதிகரிக்கவும், லிபிடோவை அதிகரிக்கவும் ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான பாலுணர்வை ஏற்படுத்தும் திறன் காரணமாக, மக்கா மேற்கு நாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. இது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் வேலை செய்கிறது. லிபிடோவை அதிகரிப்பதைத் தவிர, படுக்கையறையில் மக்கா மற்ற நன்மைகளையும் கொண்டுள்ளது. இது விந்தணுக்களின் செறிவு மற்றும் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் ஆண்களில் கருவுறுதலை மேம்படுத்த உதவும்.

அஸ்வகந்தா
அஸ்வகந்தா மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான ஒரு மூலப்பொருளாக செயல்படுகிறது. இது பாலியல் ஆர்வம் மற்றும் இன்பத்தை அதிகரிக்க வழிவகுக்கும். அஸ்வகந்தா ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவையும் அதிகரிக்கிறது. இது மேம்பட்ட கருவுறுதல் மற்றும் ஆண்மைக்கு வழிவகுக்கும். அஸ்வகந்தா நிலையான டெஸ்டோஸ்டிரோன் அளவைப் பராமரித்தாலும் பெண்களில் பாலியல் ஆசை, தூண்டுதல் மற்றும் உச்சியை அதிகரிக்கிறது.

ஜின்கோ பிலோபா
ஆண்குறி பகுதியில் உள்ள மென்மையான தசைகளை தளர்த்துவதன் மூலமும், இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமும், விறைப்பு உற்பத்தியைத் தூண்டுவதன் மூலமும், ஜின்கோ பிலோபா டீ ஆண்களுக்கு பல வழிகளில் உதவுகிறது. இருப்பினும், ஜின்கோ பிலோபா ஒரு சில மனித ஆய்வுகளில் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே இது மனிதர்களுக்கு எவ்வளவு சிறப்பாகச் சேவை செய்யும் என்று கணிக்க முடியாது. ஆதலால், இதுகுறித்து மேலும் ஆய்வு தேவைப்படுகிறது.

இறுதிக் குறிப்பு
இந்த மூலிகை தேநீர்களை உட்கொள்வதற்கு முன், தகுந்த ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது முக்கியம். பலவிதமான அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பாலியல் உந்துதலை இயற்கையாகவே மேம்படுத்தலாம். இருப்பினும், ஒவ்வொரு நபரும் வேறுபட்டவர்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். உங்களுக்கு எது வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய நீங்கள் கொஞ்சம் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications