Latest Updates
-
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
இரவு நேரம் பாலோடு 'இந்த' இரண்டு பொருளை கலந்து குடிக்க சொல்லி ஆயுர்வேதம் ஏன் சொல்லுது தெரியுமா?
நெய் மற்றும் பால் கலவையானது சருமத்திற்கு இயற்கையான மற்றும் ஆழமான ஈரப்பதத்தை வழங்குகிறது. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக குளிர்காலத்தில் இந்த கலவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பண்டைய காலம் முதல் இன்று வரை ஆயுர்வேதம் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கி வருகிறது. பல்வேறு வழிகளில் நமக்குப் பலனளிக்கக்கூடிய பல இயற்கை சிகிச்சைகள் மற்றும் வைத்தியங்களை ஆயுர்வேதம் உள்ளடக்கியுள்ளது. அந்த வகையில், பாலில் நெய்யும் மஞ்சளும் கலந்திருப்பது அத்தகைய ஒரு தீர்வு. படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு சூடான கிளாஸ் பால் குடிக்க வேண்டும் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஆனால் நீங்கள் அதில் நெய் மற்றும் மஞ்சள் சேர்த்துக் கொண்டால், அந்த கலவை இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

இந்த ஆரோக்கியமான நடைமுறையை உங்கள் அன்றாட வாழ்வில் ஏன் சேர்க்க வேண்டும்? நெய்- மஞ்சள்-பால் கலந்த பானம் உங்களுக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது
வயிறு தொடர்பான பிரச்சனைகளை அடிக்கடி அனுபவிப்பவர்கள், பாலுடன் நெய் மற்றும் மஞ்சள் கலந்த இந்த மந்திர கலவையை அருந்தலாம். செரிமானத்திற்கு உதவுவது, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது, மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது என இந்த கலவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது. மேலும், நெய்- மஞ்சள்-பால் ஆகிய மூன்று பொருட்களும் உங்களுக்கு தனித்தனியாக பல நன்மைகளை வழங்குகிறது.

மூட்டு வலியைக் குறைக்கிறது
பாலில் உள்ள கால்சியம் உள்ளடக்கம் இயற்கையாகவே பலவீனமான எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. நெய் மூட்டுகளின் உயவூட்டலுக்கு உதவுகிறது. நெய்யில் வைட்டமின் K2 உள்ளது, இது கால்சியத்தை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவும் ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இந்த கலவையை அருந்துவதால், உங்கள் மூட்டு வலி குறையும்.

ஒளிரும் தோல்
நெய் மற்றும் பால் கலவையானது சருமத்திற்கு இயற்கையான மற்றும் ஆழமான ஈரப்பதத்தை வழங்குகிறது. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக குளிர்காலத்தில் இந்த கலவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நெய் மற்றும் பால் தொடர்ந்து உட்கொள்வது உங்கள் சருமத்தை உள்ளிருந்து பளபளப்பாக்குவது மட்டுமல்லாமல், சரும புள்ளிகள் மற்றும் கறைகளை அகற்றவும் உதவும்.

சளி மற்றும் இருமலைப் போக்கும்
கோடையில் இருந்து குளிர்காலத்திற்கு பருவத்தில் ஏற்படும் மாற்றம் சளி மற்றும் இருமலை கொண்டு வருகிறது. படுக்கைக்குச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான நெய்-மஞ்சள்-பால் கலந்த கலவையை குடிப்பதன் மூலம் சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இது அசௌகரியத்தை குறைக்கும், தொண்டை புண் ஆற்றவும் மற்றும் இருமல் தீவிரத்தை கூட கணிசமாக குறைக்கும்.

அதை எப்படி செய்வது?
ஒரு கடாயில் 1 தேக்கரண்டி நெய் சேர்க்கவும். அது சூடான பின்பு, அதில் 1 கிளாஸ் பால் சேர்த்து தொடர்ந்து கலக்கவும். அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர், பாலை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள், மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விடவும். இப்போது அடுப்பை அனைத்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூளை கலக்கவும். பாலை இனிமையாக்க தேனை பயன்படுத்தலாம். இப்போது, நெய்-மஞ்சள்-பால் கலந்த பானம் ரெடி! இதை ஒரு கிளாஸில் ஊற்றி சூடாக அருந்தவும்.



Click it and Unblock the Notifications
