Latest Updates
-
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா
நெய்யுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து சாப்பிடுவதால், உடலினுள் நிகழும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?
கொரோனா பரவலுக்கு பின் மக்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளனர். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பலரும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உணவுகள் முக்கிய பங்கை வகிக்கிறது. சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
நெய் மற்றும் எலுமிச்சை ஏராளமான சத்துக்களைக் கொண்டவை. இவை இரண்டும் உடலின் பல பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. ஆயுர்வேதத்தில் நெய் மற்றும் எலுமிச்சையை ஒன்றாக சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இக்கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் இதுவரை நெய், எலுமிச்சையை ஒன்றாக சாப்பிடுவது பற்றி கேள்விப்பட்டதில்லை என்றால், இவற்றை ஒன்றாக சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எடை இழப்பு
நெய் மற்றும எலுமிச்சையை ஒன்றாக உட்கொள்ளும் போது, அது உடல் எடையை திறம்பட குறைக்கும். அதுவும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் நெய் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, கட்டுப்பாட்டுடனும் இருக்கும். இருப்பினும் இந்த ஒரு பானத்தை குடித்து வந்தால் மட்டும் உடல் எடை குறைந்து விடாது, அத்துடன் சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்
நெய் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக உட்கொள்ளும் போது, அது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஏனெனில் எலுமிச்சை மற்றும் நெய்யில் ஏராளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. நீங்கள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், சுடுநீரில் நெய் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து குடியுங்கள்.

மலச்சிக்கல், வாயு தொல்லை நீங்கும்
எலுமிச்சை சாறு மற்றும் நெய்யை ஒன்றாக பல வழிகளில் உட்கொள்ளலாம். நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், சுடுநீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் நெய் சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இது தவிர, இது குடல் நோய் மற்றும் பித்தப்பை நோய்களையும் சரிசெய்யும்.

தலைமுடி உதிர்வைக் குறைக்கும்
தலைமுடி உதிர்வால் சிரமப்படுகிறீர்களா? அப்படியானால் எலுமிச்சை மற்றும் நெய் கலவை, இப்பிரச்சனையை சமாளிக்க உதவும். அதற்கு ஒரு பௌலில் நெய் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதை முடியின் வேர்ப்பகுதியில் தடவி, சில மணிநேரங்கள் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி செய்வதால், தலைமுடி உதிர்வது குறைவதோடு, பொடுகுத் தொல்லை பிரச்சனையும் நீங்கும்.

சுத்தமான மற்றும் பொலிவான சருமம்
எலுமிச்சை சாறு மற்றும் நெய் கலவை சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தை பொலிவோடும், சரும நிறத்தை அதிகரிக்கவும் உதவும். அதற்கு சிறிது நெய்யுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications
