For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க நுரையீரலை பாதுகாக்க ஆயுர்வேதம் சொல்லும் எளிய ரகசியம் என்ன தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!

நுரையீரலை சுத்தப்படுத்தும் மற்றொரு சூப்பர் மூலிகை திப்பிலி. இது நீங்கள் எளிதாக சுவாசிக்க உதவுகிறது. கூடுதலாக, அதன் புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் காரணமாக நுரையீரல் தொற்றுக்களை எதிர்த்து போராட பயனுள்ளதாக இருக்கிறது.

|

அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப நம் உடலில் பருவகால பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தற்போது, நாம் அனைவரும் குளிர்காலத்தில் இருக்கிறோம். சுற்றுச்சூழல் மாசுபாடுகளும் நம் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதிகரிக்கும் வாகன பயன்பாடுங்கள், தொழிற்சாலைகள், பட்டாசுகள், காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றினால் காற்று மாசு அதிகரித்துள்ளது. நம் தேசிய தலைநகர் மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் அளவை சமாளிக்கும் போராட்டங்களை மக்கள் தினந்தினம் எதிர்கொள்கின்றனர். பருவநிலை மாறுவதால் ஏற்படும் மாசு மற்றும் ஒவ்வாமைகள் உங்கள் நுரையீரலை பாதிக்கும்.

Ayurvedic Rituals To Fight Off Pollution And Smog in tamil

இதனால் உங்கள் நுரையீரல் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான வழிமுறைகளை சேர்க்க வேண்டியது அவசியம். ஆதலால், சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஹேக்குகள் இந்த அச்சுறுத்தலில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும். மாசு மற்றும் புகையை எதிர்த்து உங்கள் நுரையீரல் போராடுவதற்கான சில ஆயுர்வேத குறிப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசி

துளசி

துளசி அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக மட்டுமல்லாது, மாசுபாட்டை எதிர்த்துப் போராடும் திறனுக்காகவும் அறியப்படுகிறது. துளசி செடி மாசுபாட்டை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. எனவே, இந்த செடி ஒவ்வொரு வீட்டிலும் நடப்பட வேண்டும். கூடுதலாக, 10-15 மில்லி துளசி சாறு குடிப்பது சுவாசக் குழாயில் உள்ள மாசுக்களை அழிக்க உதவுகிறது. மேலும், துளசியை நீங்கள் மென்றும் சாப்பிடலாம்.

வேம்பு

வேம்பு

வேப்பம்பூ கொண்ட மூலிகை தயாரிப்புகள் அசுத்தங்களை உறிஞ்சி உடலை நச்சுத்தன்மையாக்க உதவுகின்றன. வேப்ப இலைகளை கொதிக்க வைத்த தண்ணீரில் தோல் மற்றும் முடியைக் கழுவினால், தோல் மற்றும் சளி சவ்வுகளில் சிக்கியுள்ள மாசுக்கள் நீங்கும். வாரத்திற்கு இரண்டு முறையாவது மூன்று முதல் நான்கு இலைகளை மென்று சாப்பிடுவது இரத்தம் மற்றும் நிணநீர் திசுக்களை சுத்தப்படுத்த உதவுகிறது.

திப்பிலி

திப்பிலி

நுரையீரலை சுத்தப்படுத்தும் மற்றொரு சூப்பர் மூலிகை திப்பிலி. இது நீங்கள் எளிதாக சுவாசிக்க உதவுகிறது. கூடுதலாக, அதன் புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் காரணமாக நுரையீரல் தொற்றுக்களை எதிர்த்து போராட பயனுள்ளதாக இருக்கிறது. இஞ்சி, மஞ்சள், திப்பலி பொடி மற்றும் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு உட்கொள்ளலாம். நோய்வாய்ப்பட்ட நுரையீரலுக்கு இது நல்ல சிகிச்சையாக இருக்கும்.

ஆடாதொடை

ஆடாதொடை

ஆடாதொடை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆடாதொடை இலை மற்றும் தேன் கலந்து சாப்பிடுவது, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச நோய்த்தொற்றுகளுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. கூடுதலாக, அதன் எக்ஸ்பெக்டோரண்ட் பண்பு காரணமாக காற்றுப் பாதைகளில் இருந்து சளி சுரப்பதை ஊக்குவிக்க உதவுகிறது.

நீராவி சிகிச்சை

நீராவி சிகிச்சை

நீராவி சிகிச்சையானது நுரையீரலைச் சுத்தப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஏனெனில் நீராவியை உள்ளிழுப்பது காற்றுப் பாதையைத் திறந்து நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது. சளி மற்றும் நெஞ்சுசளி பிடித்தவர்கள் நீராவி சிகிச்சையை மேற்கொண்டால், விரைவில் குணமாகும்.

பிராணயாமா பயிற்சி

பிராணயாமா பயிற்சி

ஆயுர்வேதத்தின் மற்றொரு ரத்தினம் பிராணயாமா பயிற்சி ஆகும். இது சளியை முற்றிலும் நீக்க உதவுகிறது. நெஞ்செரிச்சலை நீக்குகிறது மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பிராணாயாமம் செய்த பிறகு ஒவ்வொரு நாசியிலும் ஒரு துளி எள் எண்ணெயை வைப்பது இந்த உடற்பயிற்சியின் பலனை இரட்டிப்பாக்கலாம்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

உணவகங்களில் வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, இஞ்சி, மஞ்சள், கேரம் விதைகள், குடை மிளகாய் போன்ற மூலிகைகள் சேர்த்து வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுங்கள். இதேபோல், திரிபலா, மஞ்சள், அஸ்வகந்தா, வெல்லம் ஆகியவற்றை உட்கொள்வதால் நுரையீரலை சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Rituals To Fight Off Pollution And Smog in tamil

Here we are talking about the Ayurvedic Rituals To Fight Off Pollution And Smog in tamil.
Story first published: Thursday, November 10, 2022, 13:31 [IST]
Desktop Bottom Promotion