Latest Updates
-
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள்
இந்த ஆயுர்வேத கசாயம் உடல் பருமனை குறைப்பதோடு, இதய நோயையும் தடுக்கும் தெரியுமா?
மருத மரம் என்பது தெருவோரங்களில் நாம் பெரும்பாலும் காணக்கூடிய ஒரு மரமாகும். ஆனால் ஆயுர்வேதத்தில் இந்த மரத்தின் பட்டை ஒரு மிகச் சிறந்த மூலிகையாக அறியப்படுவது பற்றி உங்களுக்கு தெரியுமா?
நமது அன்றாட வாழ்வில் பல்வேறு இயற்கை மூலப்பொருட்களை வழக்கமான முறையில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றின் அற்புதமான நன்மைகள் குறித்து நாம் பெரும்பாலும் கவனம் கொள்வதில்லை.
மருத மரம் என்பது தெருவோரங்களில் நாம் பெரும்பாலும் காணக்கூடிய ஒரு மரமாகும். ஆனால் ஆயுர்வேதத்தில் இந்த மரத்தின் பட்டை ஒரு மிகச் சிறந்த மூலிகையாக அறியப்படுவது பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆயுர்வேதத்தின்படி, மருதம்பட்டை கொண்டு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதன் மருத்துவ குணத்தைக் கருதி, இந்த பட்டையை பொடியாக்கி பல்வேறு மருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீரிழிவு, உடல் பருமன், இதயநோய் போன்ற பாதிப்புகளுக்கு மருதம்பட்டை நல்ல பலன் தருவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இந்த மூலிகை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

மருத மரம் பற்றிய சிறப்புகள் என்ன?
மருத மரத்தின் பட்டையில் பல்வேறு சிறப்பு கூறுகள் இருப்பதால் ஆரோக்கியத்திற்கு சிறந்த நன்மை அளிக்கிறது. அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த பட்டையில் கார்பொக்சிலிக் அமிலம், ட்ரைஹைடிராக்சி ட்ரைடெர்பின் , எல்லஜிக் அமிலம் மற்றும் பீட்டா சிட்டோஸ்டெரால் போன்ற சில வகை குறிப்பிட்ட அமிலங்கள் உள்ளதாக கூறுகின்றனர். இதன் காரணமாக இந்த பட்டை பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த அமிலங்களின் பலவகைகள் உங்கள் சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன மற்றும் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே மருதம்பட்டை சரும நன்மைகளுக்காக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பட்டையை ஆயுர்வேதத்தில் மற்றும் இதர ஆர்கானிக் பொருட்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு மருதம்பட்டை பொடி:
உடலில் இரத்த சர்க்கரை அதிகரிப்பதன் காரணமாக நீரிழிவு பாதிப்பு உண்டாகிறது. இதுவே பல்வேறு இதர பிரச்சனைகளுக்கு காரணமாகி, உடல் உறுப்புகள் சேதம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாக காரணமாக உள்ளது. ஆனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த மருதம்பட்டை உதவுகிறது. சில வகை காய்ந்த பெர்ரிகளுடன் சமஅளவு மருதம்பட்டை எடுத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை இரவில் உறங்குவதற்கு முன் உட்கொள்ளவும். உடலின் இன்சுலின் உற்பத்தியை சீராக்க இந்த பொடி உதவுகிறது.

உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது
உடல் பருமனை கட்டுப்பாட்டில் வைக்க மருதம்பட்டை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பல லட்சம் மக்கள் உடல் பருமன் பாதிப்புடன் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு வியாதிகளுடன் போராடி வருகின்றனர். ஆகவே, நீங்கள் உடல் பருமன் பாதிப்பை ஆயுர்வேத வழியில் குறைக்க நினைத்தால் மருதம்பட்டை உங்களுக்கு உதவ முடியும். அதாவது, மருதம்பட்டை கொண்டு தயாரித்த கஷாயத்தை தினமும் எடுத்துக் கொள்வதால் உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரித்து செரிமானம் மேம்படுகிறது. அதனால் கொழுப்பு எரிக்கும் திறன் அதிகரித்து உடல் எடை குறைகிறது.

இதயநோயை எதிர்த்து பாதுகாப்பு அளிக்கிறது
மாரடைப்பு, இதய செயலிழப்பு, கார்டியாக் அரெஸ்ட் போன்ற பல்வேறு இதயநோய்கள் காரணமாக உலகில் பெரும்பாலான உயிர்கள் பறிபோகின்றன. ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் மட்டும் ஒரு பெரும்பகுதி மக்கள் இதயநோய்க்கு ஆளாகின்றனர். இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்க மருதம்பட்டை உதவுகிறது. மருதம்பட்டையை நீரில் கொதிக்க வைத்து தேநீராக பருகுவதால் இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன. இது தவிர, இந்த தேநீர் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

முடிவு
மேலே கூறப்பட்டவை அனைத்தும் மருதம்பட்டையின் சில நன்மைகளாகும். இது தவிர இன்னும் ஏராளமான நன்மைகள் இந்த பட்டையில் உள்ளன. இந்த பட்டையை உட்கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. மேலும் இந்த பொடி சந்தையில் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாக உள்ளது. ஆகவே அதனை வாங்கி மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் அதனை பயன்படுத்தினால், அதன் நன்மைகளை நீங்களும் பெற்றுக் கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications