Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
பைல்ஸ் வலியால் உயிரே போகுதா? இதோ அந்த வலியைக் குறைக்கும் அற்புத வழிகள்!
மூல நோயினால் சந்திக்கும் வலியை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் குறைத்து கட்டுப்படுத்தலாம். இப்போது இந்த பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில எளிமையான வீட்டு வைத்தியங்களைக் காண்போம்.
பைல்ஸ் என்னும் மூல நோய் ஆசன வாயில் ஏற்படும் ஒருவித வேதனையைத் தரும் பிரச்சனையாகும். இந்த பிரச்சனை இருந்தால், மலம் கழிக்கும் போது கடுமையான வலி, இரத்தப் போக்கு, எரிச்சல், அரிப்பு மற்றும் உட்கார கூட முடியாமல் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். பெரும்பாலான மக்கள் இந்த மூல நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதைப் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு கூச்சப்படுகிறார்கள். ஏன் மருத்துவர்களிடம் சொல்வதற்கு கூட சங்கடப்பட்டு சொல்லாமல் இருப்பவர்களும் உண்டு. இருப்பினும், இப்பிரச்சனை குறித்து பேச தயக்கம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஒருவர் மூல நோயை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிகளை மேற்கொண்டால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தைத் தவிர்க்கலாம். முக்கியமாக மூல நோயினால் சந்திக்கும் வலியை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் குறைத்து கட்டுப்படுத்தலாம். இப்போது இந்த பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில எளிமையான வீட்டு வைத்தியங்களைக் காண்போம்.

கற்றாழை
அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பிற மருத்துவ குணங்களைக் கொண்ட கற்றாழை பைல்ஸ் காரணமாக ஏற்படும் எரிச்சலைக் குறைக்கும் மற்றும் இது மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும். அதற்கு கற்றாழையை ஜூஸாக குடிக்கலாம் மற்றும் கற்றாழை ஜெல்லை பைல்ஸ் உள்ள ஆசன வாய் பகுதியில் தடவலாம். இதனால் கற்றாழையின் குளிர்ச்சி பண்புகளானது எரிச்சலைக் குறைத்து, அரிப்புக்களைக் கட்டுப்படுத்தும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் இரத்த நாளங்களை சுருக்க உதவுகிறது. எனவே பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிப்பது நல்லது. அதே வேளையில், மூல நோய் உள்ளவர்கள், ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, அதை ஆசன வாயில் வைத்தால், எரிச்சல் மற்றும் அரிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது இரத்த நாளங்களில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும். ஆகவே மூல நோய் இருப்பவர்கள், ஆலிவ் ஆயிலை தினமும் ஆசன வாயில் தடவி வந்தால், பைல்ஸால் சந்திக்கும் அசௌகரியங்களில் இருந்து விடுபடலாம்.

பாதாம் எண்ணெய்
சுத்தமான பாதாம் எண்ணெயை பஞ்சுருண்டையில் நனைத்து, அதை ஆசன வாயில் உள்ள மருக்களின் மீது படுமாறு வைக்க வேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள வீக்கம் குறைவதோடு, எரிச்சலும் தணியும்.

தேங்காய் நார்
தேங்காய் நாரை எரித்து சாம்பலாக்கி, அதை மோரில் கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், மூல நோயினால் சந்திக்கும் அவஸ்தைகளில் இருந்து விடுபடலாம்.

உலர்ந்த அத்திப்பழம்
தினமும் மூன்று உலர்ந்த அத்திப் பழங்களை ஒரு டம்ளர் நீரில் இரவு தூங்கும் முன் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் அத்திப்பழத்துடன் நீரையும் உட்கொள்ள வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது மற்றும் மூல நோயின் வேதனைகளில் இருந்து விடுபடலாம்.

சீரகம்
சீரகத்தை நீர் சேர்த்து அரைத்து நன்கு பேஸ்ட் செய்து, வலிமிக்க ஆசன வாயில் தடவ வேண்டும். இது தவிர, வறுத்த சீரகத்தை பனங்கற்கண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு நாளைக்கு 2-3 முறை 1-2 கிராம் இதை சாப்பிட்டு மோர் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications