Latest Updates
-
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தினமும் ஒரு டம்ளர் ஓம நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிச்சா.. உடம்புல என்ன நடக்கும் தெரியுமா?
வரக்கூடிய 2023 புத்தாண்டில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க விரும்பினால், தினமும் காலையில் காபி, டீ-க்கு பதிலாக ஒரு டம்ளர் ஒம நீரை குடித்து வாருங்கள்.
Ajwain Water Benefits: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உள்ளுறுப்புக்கள் எவ்வித தடையுமின்றி ஆரோக்கியமாக செயல்பட வேண்டும். ஆனால் தற்போதைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினால் நடது உடலில் நச்சுக்கள், கொழுப்புக்கள் அதிகம் தேங்கி பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கி, உடல் ஆரோக்கியத்தை நாசப்படுத்துகின்றன. ஆனால் நமது சமையலறையில் உள்ள பல பொருட்கள் நமது உடலில் மாயங்களை புரியக்கூடியவை. ஒவ்வொன்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியவை. அதில் ஒன்று தான் ஓமம்.

நல்ல வாசனை கொண்ட சிறிய விதைகளான ஓமம் ஏராளமான சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. பெரும்பாலானோருக்கு ஓமம் செரிமான பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான் தெரியும். ஆனால் அந்த ஓமமானது செரிமான பிரச்சனைகளைத் தவிர, எடை இழப்பு, சுவாச பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளைப் போக்கவும் உதவும் என்பது தெரியுமா? நம் முன்னோர்கள் அக்காலத்தில் ஆரோக்கியமாக இருந்ததற்கு இந்த ஓமமும் ஓர் முக்கிய காரணம். எனவே வரக்கூடிய 2023 புத்தாண்டில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க விரும்பினால், தினமும் காலையில் காபி, டீ-க்கு பதிலாக ஒரு டம்ளர் ஒம நீரை குடித்து வாருங்கள். இப்போது ஓம நீரை தயாரிப்பது எப்படி மற்றும் ஓம நீரை தினமும் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

எடை இழப்பு
உங்களுக்கு தொப்பை பெரிதாக உள்ளதா? அதை எளிய மற்றும் ஆரோக்கியமான வழியில் குறைக்க வேண்டுமா? அப்படியானால் ஓம நீரைக் குடியுங்கள். அதுவும் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து தினமும் குடிக்கும் போது, ஜங்க் உணவுகளுக்கு குட்-பை சொல்லிவிட்டு, தினமும் உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

மெட்டபாலிசம் அதிகரிக்கும்
ஓம நீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளது. இது செரிமான செயல்முறையை வேகப்படுத்துவதோடு, அஜீரண கோளாறை தடுக்கவும் உதவுகிறது. உடலின் மெட்டபாலிச செயல்முறை அதிகரிக்கும் போது, அது மலச்சிக்கல் மிற்றும் உடல் பருமன் பிரச்சனையையும் தடுக்கிறது.

குடல் ஆரோக்கியம் மேம்படும்
செரிமான பிரச்சனைகளை தினமும் சந்திப்பவர்கள், ஓம நீரைக் குடிப்பது நல்லது. மேலும் இது செரிமான பிரச்சனையால் ஏற்படும் அடிவயிற்று வலி அல்லது பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. ஓம நீரை வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது குடலில் உள்ள நொதிகளை செயல்படத் தூண்டிவிட்டு, செரிமான பிரச்சனைகள் மற்றும் அசிடிட்டி பிரச்சனைளை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஓம நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது சுவாசப்பாதையில் உள்ள தடைகளை நீக்கி, நன்றாக சுவாசிக்க உதவும். மேலும் ஓம நீர் நுரையீரல் மற்றும் குரல்வளையை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே உங்களுக்கு சுவாச பிரச்சனைகள் இருந்தால், ஓம நீரை தினமும் குடித்து நன்மை பெறுங்கள்.

சரும அரிப்பு மற்றும் கொப்புளங்கள்
உங்களுக்கு சருமத்தில் கொப்புளங்கள் மற்றும் அரிப்புகள் அதிகமாக இருந்தால், அந்த இடத்தில் ஓம விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து தடவுங்கள். இதனால் அவ்விடத்தில் ஏற்படும் அரிப்புக்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஓம நீரை தயாரிப்பது எப்படி?
* 25 கிராம் ஓம விதைகளை முதல் நாள் இரவே ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் அந்த விதைகளை ஸ்பூன் கொண்டு லேசாக நசுக்கி விட்டு, பின் வடிகட்ட வேண்டும். பின் வேண்டுமானால் சுவைக்கு தேன் கலந்து கொள்ளலாம்.
* பின்பு அதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications