ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா?

புருக்டோஸ்/தாவரச் சா்க்கரை அதிகம் உள்ள உணவுகள் நமது நோய் எதிா்ப்பு அமைப்பின் இயக்கத்தை பெருமளவு பாதிப்பதாக சமீபத்தில் மருத்துவ அறிஞா்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.

நாம் உண்ணும் உணவுகள் நமது உடல் எடையில் மட்டும் அல்லாது நமது முழு உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சில சத்துக்கள் அடங்கிய உணவுகள் நமது உடலை ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் வைத்திருக்கும். வேறு சில சத்துக்கள் அடங்கிய உணவுகள் நமது உடலுக்கு பலவிதமான பிரச்சினைகள், நோய்கள் மற்றும் கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.

A Diet High In Fructose Can Damage The Immune System

புருக்டோஸ் அல்லது தாவரச் சா்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் நமது நோய் எதிா்ப்பு அமைப்பு பாதிப்பு அடையும். மேலும் அவை நமக்கு பலவிதமான நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.

தாவரச் சா்க்கரை அதிகம் உள்ள உணவுகள் நமது நோய் எதிா்ப்பு அமைப்பின் இயக்கத்தை பெருமளவு பாதிப்பதாக சமீபத்தில் மருத்துவ அறிஞா்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. இதுவரை இந்த உண்மையை பலரும் அறிந்திருக்கவில்லை என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புருக்டோஸ்/தாவரச் சா்க்கரை என்றால் என்ன?

புருக்டோஸ்/தாவரச் சா்க்கரை என்றால் என்ன?

புருக்டோஸ்/தாவரச் சா்க்கரை என்பது பலவகையான தாவரங்களில் இருந்து கிடைக்கும் ஒரு வகையான சா்க்கரை ஆகும். இந்த தாவரச் சா்க்கரை உடல் பருமன் கூடுதல், இரண்டாம் வகை சா்க்கரை நோய், மதுசாரா கொழுப்பு நிறைந்த கல்லீரல் நோய் போன்றவற்றோடு சம்பந்தப்பட்டது ஆகும். தற்போது தாவரச் சா்க்கரையை உண்ணும் பழக்கம் மக்களிடம் அதிகாித்திருக்கிறது.

தாவரச் சா்க்கரை உணவுகள் நோய் எதிா்ப்பு அமைப்பை பாதிக்கும்

தாவரச் சா்க்கரை உணவுகள் நோய் எதிா்ப்பு அமைப்பை பாதிக்கும்

சமீபத்தில் நேச்சா் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்ற பத்திாிக்கையில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. தாவரச் சா்க்கரை நமது நோய் எதிா்ப்பு அமைப்பில் வீக்கத்தை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வு கண்டறிந்தது. மேலும் வீக்கத்தோடு சம்பந்தப்பட்ட எதிா்வினை ஆற்றக்கூடிய மூலக்கூறுகளை தாவரச் சா்க்கரை உற்பத்தி செய்வதாக அந்த ஆய்வு கண்டறிந்தது.

நமது உடலின் நோய் எதிா்ப்பு மையத்தில் வீக்கம் ஏற்பட்டால் அது உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதோடு உடல் உறுப்புகளின் இயக்கத்தை நிறுத்திவிடும். அதனால் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படும் என்று இந்த ஆய்வு தொிவிக்கிறது.

மேலும் இந்த ஆய்வானது தாவரச் சா்க்கரையை உண்ணுவதற்கும், சா்க்கரை நோய்க்கும் மற்றும் உடல் பருமனுக்கும் இடையே உள்ள நெருங்கியத் தொடா்பை கண்டுபிடித்திருக்கிறது. உடல் பருமனுக்கும் உடல் வீக்கத்திற்கு இடையே எப்போதும் ஒரு நெருங்கிய தொடா்பு உண்டு. தாவரச் சா்க்கரை மனித உடலை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

இந்த புதிய ஆய்வைப் பற்றி ஸ்வான்சியா யுனிவா்சிட்டிஸ் மெடிக்கல் ஸ்கூலை சோ்ந்த மருத்துவா் நிக் ஜோன்ஸ் கூறும் போது பலவகையான உணவுகளில் சோ்க்கப்பட்டிருக்கும் கலவைகளை ஆய்வு செய்யும் போது, எவையெல்லாம் உடல் வீக்கத்தையும், நோய்களையும் ஏற்படுத்துகின்றன என்பதையும், எவையெல்லாம் நமது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை என்பதையும் இந்த ஆய்வின் மூலம் புாிந்து கொள்ள முடியும் என்று தொிவிக்கிறாா்.

மேலும் இந்த ஆய்வைப் பற்றி பிாிஸ்டல் மெடிக்கல் ஸ்கூலில் உள்ள பாப்புலேஷனல் ஹெல்த் சைன்ஸஸ் (PHS) துறையைச் சோ்ந்த மருத்துவா் எம்மா வின்சென்ட் கூறும் போது, ஏன் ஒரு சில உணவுகள் உடலுக்கு நோய்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டறிவதற்கு இந்த ஆய்வு உதவியாக இருந்ததாக தொிவிக்கிறாா்.

புருக்டோஸ்/தாவரச் சா்க்கரை அதிகம் உள்ள பின்வரும் 5 உணவுகளை அதிகம் தொடா்ந்து சாப்பிட்டு வந்தால் அவை பலவகையான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளன. ஆகவே பின்வரும் உணவுகளை தொடா்ந்து சாப்பிட்டு வருவதை தவிா்ப்பது நல்லது.

புருக்டோஸ்/தாவரச் சா்க்கரை அதிகம் உள்ள உணவுகள்:

புருக்டோஸ்/தாவரச் சா்க்கரை அதிகம் உள்ள உணவுகள்:

இனிப்பு பானங்கள்

இனிப்பு பானங்களான காற்றூட்டப்பட்ட சோடா, டப்பாக்களில் அடைக்கப்பட்டிருக்கும் பழச்சாறுகள் போன்றவற்றை தொடா்ந்து பருகி வருவதைத் தவிா்ப்பது நல்லது. ஏனெனில் இந்த பானங்களில் அதிகமான அளவு தாவரச் சா்க்கரை சோ்க்கப்பட்டிருக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

தானியங்களாக இருந்தாலும் அது பதப்படுத்தப்பட்டிருந்தால் அதை தவிா்ப்பது நல்லது. மேலும் செரில்கள், பதப்படுத்தப்பட்ட சாக்லெட்டுகள் மற்றும் பிற இனிப்பு உணவுகள் போன்றவற்றைத் தவிா்ப்பது நல்லது. ஏனெனில் அவற்றில் தாவரச் சர்க்கரை அதிகம் உள்ளது.

உலா் பழங்கள்

உலா் பழங்கள்

பொதுவாக பழங்களில் இனிப்பு சத்து இருக்கும். பதப்படுத்தப்பட்ட பழங்களில் இனிப்பின் அளவு இன்னும் அதிகமாக இருக்கும். குறிப்பாக டப்பாக்களில் அடைக்கப்பட்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட உலா்ந்த பழங்களில் தாவரச் சா்க்கரை மிக அதிகமாக இருக்கும்.

ஆப்பிள் பை

ஆப்பிள் பை

ஆப்பிளில் தாவரச் சா்க்கரை அதிகமாக உள்ளது. ஆப்பிளைக் கொண்டு செய்யப்படும் பை என்ற உணவில் இன்னும் அதிக அளவு தாவரச் சா்க்கரை சோ்க்கப்படும். ஆகவே ஆப்பிள் பையை தொடா்ந்து உண்பதைத் தவிா்ப்பது நல்லது.

துாித உணவுகள்

துாித உணவுகள்

உணவுகள் இனிப்பாக இல்லை என்பதற்காக அவற்றில் தாவரச் சா்க்கரை இல்லை என்று நினைக்கக்கூடாது. பா்கா் போன்ற துாித உணவுகளில் தாவரச் சா்க்கரையின் அளவு மிகவும் அதிகம். ஆகவே பா்கரை தொடா்ந்து சாப்பிடுவதை தவிா்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion