எடையை குறைக்கிறேன்னு தசையை குறைச்சுடாதீங்க. அப்புறம் பிரச்சனை உங்களுக்கு தான்…

பல சந்தர்ப்பங்களில், உடல் எடையில் விரைவான மாற்றங்களை காண வேண்டும் என்று செய்யக்கூடிய செயல்கள், உடலில் தசை இழப்பு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.

உடல் எடை குறைப்பு என்பது பலரது கனவாகவே மாறிவிட்டது. என்றாவது ஒரு நாள் இந்த கனவு நிறைவேறி விடாதா என்ற ஏக்கம் பலரிடம் இருக்க தான் செய்கிறது. அந்த ஏக்கம் தான் உடல் எடை குறைப்பு முறைகளில் சில தவறான முடிவுகளை எடுக்க வைத்து விடுகிறது. நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க பல்வேறு உடற்பயிற்சி முறைகள், டயட் முறைகள் இருக்கின்றன. அவற்றில், நமது உடலுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டியது அவசியம்.

தினசரி உடற்பயிற்சி செய்யும் பெரும்பாலான மக்கள் தங்கள் இலக்குகளாக எதையாவது நிர்ணயித்து கொண்டு தான் செய்ய தொடங்குகின்றனர். அதிலும், பெரும்பாலான மக்கள் கொழுப்பை கரைப்பதை தான் இலக்காக கொண்டுள்ளனர். ஆனால் கொழுப்கை குறைக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், அவற்றில் சிறிது தந்திரங்கள் இருக்க தான் செய்கின்றன என்பதை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். டயட் அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்த சிறிது காலங்களிலேயே, உடனடியாக உங்கள் உடலில் வித்தியாசத்தை நீங்கள் உணர்கிறீர்கள் என்றால், அது நிச்சயமாக கொழுப்பு இழப்பாக இருக்க வாய்ப்பே இல்லை.

4 Things Show That You Are Losing Muscles And Not Body Fat

பல சந்தர்ப்பங்களில், உடல் எடையில் விரைவான மாற்றங்களை காண வேண்டும் என்று செய்யக்கூடிய செயல்கள், உடலில் தசை இழப்பு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. அடிப்படை உடல் இயக்கத்திற்கு தசைகள் மிகவும் அவசியமான ஒன்று. எனவே, கொழுப்பு இழப்பு என்ற பெயரில் தசைகளை இழப்பது ஆரோக்கியமற்றது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அவை, உடலின் செயல்பாடுகள் குறைவதற்கு வழிவகுத்துவிடும்.

உடல் எடை குறைப்பு நடவடிக்கைகளால், உடலில் ஏற்படக்கூடிய இந்த 4 மாற்றங்கள், அவை கொழுப்பு இழப்பு அல்ல தசை இழப்பு என்பதை குறிப்பனவாகும். வாருங்கள், இப்போது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடற்பயிற்சி செய்யும் போது அதிக சோர்வாக உணர்வது

உடற்பயிற்சி செய்யும் போது அதிக சோர்வாக உணர்வது

தினந்தோறும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? இருப்பினும், உடற்பயிற்சி செய்வதை இப்போது நிறுத்திட வேண்டும் என்று எண்ணம் அடிக்கடி தோன்றுகிறதா? அதிகப்படியான சோர்வு தான் இதற்கு காரணம். அதிலும், இத்தகைய சோர்வு நாளுக்கு நாள் அதிகரிக்கக்கூடும். அதாவது உடலில் தசை பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை குறிக்கும் அறிகுறி இது. உடற்பயிற்சி செய்து உடல் எடை குறைந்த மகிழ்ச்சியில் இருந்தால் அது தவறான ஒன்று. ஏனென்றால், உங்கள் உடலில் குறைந்திருப்பது கொழுப்பு அல்ல, தசை மட்டுமே. உடலில் தசை குறையும் போது, எந்தவொரு கடினமாக வேலையையும் செய்ய முடியாமல், தட்டிக்கழிக்கத் தோன்றும். எப்போதும் ஒருவித மந்தமான உணர்வு இருந்துக் கொண்டே இருக்கும். எனவே, உங்கள் எடை இழப்புக்கு பின்னால் உள்ள உண்மையின் அடையாளமாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

கொழுப்பு சதவிகிதத்தில் மாற்றமின்மை

கொழுப்பு சதவிகிதத்தில் மாற்றமின்மை

ஒவ்வொருவரின் உடலுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு கொழுப்பு சதவிகிதம் உள்ளது. அதை பொருத்து தான் எடை இழப்பு அல்லது கொழுப்பு இழப்பை மேற்கொள்ள வேண்டும். எனவே, அதிகப்படியான உடல் எடையைக் குறைத்த போதிலும், உங்கள் உடலில் உள்ள கொழுப்பு சதவிகிதம் அப்படியே இருக்கிறதா? அப்படியெனில், நீங்கள் கொழுப்பிற்கு பதிலாக உடல் தசைகளை இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். உடலில் கிள்ளக்கூடிய அளவு கொழுப்பு அப்படியே இருக்கும்போது, சருமத்தில் கணிசமான சுருக்கம் மட்டும் ஏற்படக்கூடும். எனவே, உடலில் உள்ள கொழுப்பின் அளவை தொட்டுப் பார்த்து, குறைந்திருப்பது உடல் எடையா, கொழுப்பா அல்லது தசையா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வேகமான எடை இழப்பு

வேகமான எடை இழப்பு

நீங்கள் மிக விரைவாக உடல் எடையை குறைக்கிறீர்கள் என்றால் சந்தோஷம் தான். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எடை குறைப்பு என்பது படிப்படியாக தான் நிறைவேறும். நீங்கள் கடுமையான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாதரை மட்டுமே எடை படிப்படியாக குறையும். அடிப்படை உணவு மாற்றங்கள் மற்றும் குறைந்த உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் மட்டுமே, நீங்கள் வேகமாக உடல் எடையை குறைக்கிறீர்கள் என்றால், அது தசை அல்லது நீர் இழப்பாகவும் இருக்கலாம். விரைவான எடை குறைப்பை தாங்குவது என்பது மிக கடினமான ஒன்று. எனவே, உடல் எடையை குறைக்க எப்போதுமே நீண்ட காலம் ஆகும் என்பதை உணர்ந்து, அதற்கு தகுந்த சரியான முறைகளை தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது.

ஒரே அளவிலான எடையை மட்டுமே தூக்க முடிவது

ஒரே அளவிலான எடையை மட்டுமே தூக்க முடிவது

தினந்தோறும உடற்பயிற்சி செய்தும், ஒரே அளவிலான எடையை மட்டும் தான் உங்களால் தூக்க முடிகிறதா? அப்படியெனில், நீங்கள் எவ்வித உடல் வலிமையை பெறவில்லை என்பதே இதன் அர்த்தம். உடற்பயிற்சி என்பதே உடல் தசைகளுக்கு வலிமை சேர்ப்பது தான். ஆனால், அதுவே நிகழாத போது, என்ன பயன்? எனவே, மீண்டும் மீண்டும் ஒரே அளவு பளுவை தூக்குவதால், அதிகப்படியான சோர்வை உணரக்கூடும். இருப்பினும், நாளுக்கு நாள் உடல் எடை மட்டும் குறைகிறது என்றால், குறைவது எடையல்ல, உடலின் தசையாகும். எனவே, தெரிந்தே தசை இழப்புக்கு வழிவகுக்க வேண்டாம்.

குறிப்பு:

குறிப்பு:

உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும், மேலே கூறப்பட்டுள்ள இந்த உதவிக்குறிப்புகளை கவனிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், எடை இழப்பு குறித்து பெரும்பாலான மக்கள் தவறான புரிதலோடு இருக்கின்றனர். சரியான எடை இழப்பு என்பது சரியான மற்றும் தேவையான இடங்களிலிருந்து மட்டுமே உடல் எடையை குறைப்பதாகும். ஒட்டுமொத்த உடலிலிருந்து ஒரே நேரத்தில் எடையை குறைப்பது, எடை குறைப்பே அல்ல என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, மேற்கூறியவற்றை கவனத்தில் கொண்டு, சரியான வழியில் உடல் எடை குறைக்க சிறந்த மாற்று வழிகளைத் தேடி தேர்ந்தெடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion