Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
நைட் ஷிஃப்டில் உள்ளவர்களை மட்டும் குறி வைக்கும் அபாயகர நோய்கள்! காரணம் தெரியுமா..?
இன்றைய கால சூழல்ல எல்லாருக்குமே பலவித பிரச்சினைகள் இருக்க தான் செய்யுது. சிலருக்கு பண கஷ்டம், சிலருக்கு வேலை கிடைக்கலன்னு கவலை, சிலருக்கு அதிக வேலை கொடுக்கறாங்களேன்னு வேதனை... இப்படி பலருக்கும் பலவிதங்களில் பிரச்சினைகள் உண்டு. எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் நமது உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் எல்லாவித பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும்.

ஆனால், நீங்கள் செய்கின்ற வேலையே உங்களது உயிருக்கு உலை வைத்தால் எப்படி?! ஆமாங்க, சமீபத்தில் செய்த ஆராய்ச்சியில் நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்கின்ற பலரையும் அதிர விடும் ஒரு தகவல் வெளி வந்துள்ளது. அதாவது, இவர்களுக்கு மட்டுமே சில பொதுவான நோய்கள் இருப்பதாக கண்டறிய பட்டுள்ளது.
காலை நேரத்தில் வேலை செய்பவர்களை காட்டிலும் நைட் ஷிஃப்ட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வித நோய்களின் வீரியம் அதிக அளவில் உள்ளது என இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகி பலரின் மனதை உலுக்கி உள்ளது. எதனால் இந்த பாதிப்பு, எப்படிப்பட்ட நோய்கள் நைட் ஷிஃப்ட்டினால் உருவாகும், எப்படி தீர்வு காண்பது... இது போன்ற பலவற்றிற்கும் பதில் சொல்லத்தான் இந்த பதிவு உங்களுக்காக!

சுமைகள்!
இன்றைய இளைய தலைமுறை பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர். ஒரு புறம் குடும்ப கஷ்டம், ஒரு புறம் கனவுகளை அடைய வேண்டுமே என்கிற தவிப்பு, ஒரு புறம் சமூக அவலங்கள், ஒரு புறம் காதல் பிரச்சினைகள்... இப்படி பல கூறுகளால் இன்றைய தலைமுறையினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இவற்றின் அழுத்தத்தால் தான் பலரும் இது போன்ற நைட் ஷிஃப்ட் வேலைகளுக்கு செல்கின்றனர். சுமையை கரைக்க செல்பவர்களுக்கு மேலும் பல சுமைகளை இவை தருகின்றன.

இரவும் பாதிப்பும்!
இரவு வேலைக்கு செல்பவர்கள் சாதாரணமாக காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்களை காட்டிலும் பல வகையில் பாதிப்பை சந்திக்க நேரிடும். காரணம், சிறு வயது முதலே நமது உடல் இரவில் ஓய்வெடுக்க பழகி கொண்டது.
ஆனால், தற்போது இரவில் ஓய்வெடுக்காமல் பகலில் கொஞ்சம் நேரம் மட்டும் ஓய்வெடுத்தால் நம் உடல் என்னவாகும் என்பதை நீங்களே சிந்தியுங்கள். இதில் உள்ளுறுப்புகள் முதலில் அபாய நிலைக்கு செல்லும்.

ஆய்வு!
பலவித ஆய்வுகள் இந்த நைட் ஷிஃப்ட்டில் வேலைக்கு செல்பவர்களை வைத்து நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகள் அனைத்துமே நைட் ஷிஃப்ட் வேலையை பற்றி ஆபத்தான விளைவுகளை தந்துள்ளது என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது DNA- தான்.

DNA மாற்றம்!
பொதுவாக மனித உடல் இந்த அளவிற்கு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதற்கு மூல காரணமே இந்த DNA தான். இதில் மாற்றமோ அல்லது சிதைவடைந்தாலோ ஆபத்து நமக்கே.
DNA சிதைவடைவதால் அடுக்கடுக்காக நோய்கள் நமது உடலுக்குள் ஊடேறி நோய்களின் கூடாரமாகவே மாறி விடும்.

வீரியும்!
DNA பாதிப்பதால் புற்றுநோய், நரம்பு மண்டலம் பாதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய்கள், இரத்த நாளங்களை நோய்கள் தாக்குதல்... இது போன்ற வீரியமிக்க தாக்குதல்கள் நம் உடலில் உண்டாகும். 25 முதல் 30 சதவீகிதம் வரை நைட் ஷிப்ட்டினால் DNA சிதைவடையும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

காரணம்?
உடலில் ஏற்பட கூடிய ஒவ்வொரு மாற்றத்திற்கும் கட்டாயம் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் இப்படி DNA மாற்றம் உண்டாகுவதற்கு மூல காரணமே நமது தூக்கம் தான். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் வேலை செய்வதால் நமது DNA சிதைவடைகிறது.

ஆய்வின் முடிவு?
ஹாங் காங் பல்கலைக்கழத்தில் இதை பற்றி மேற்கொண்ட ஆய்வுகளில் மேற்சொன்ன பாதிப்புகள் உண்டாகும் என கண்டறிய பட்டுள்ளது.
கூடவே, நமது உடலில் உள்ள செல்கள் ஒவ்வொன்றாக தனது இயல்பு தன்மையை இழந்து செல்கள் இறக்க நேரிடும் என்கிற திடுக்கிடும் தகவலையும் இது வெளியிட்டுள்ளது.

நாள்பட்ட நோய்கள்!
இந்த நிலை, நைட் ஷிஃப்டில் வேலை பார்பவர்களுக்கு கட்டாயம் வர கூடும் என ஹாங் காங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதில் குறிப்பிட்டு சொல்ல போனால் நாள்பட்ட நோய்கள் மற்றும் DNA சிதைவு போன்ற பாதிப்புகள் நிச்சயம் வரும் எனவும் கூறியுள்ளனர்.

தீர்வு!
வாழ்க்கைக்காக ஓட தொடங்கிய நம்மில் பலர் இப்போது எங்குள்ளோம் என்பதை 1 நொடி சிந்தித்து பாருங்கள். "வாழ்க்கை வாழ்வதற்கே" என்கிற உயிர்ப்பான வார்த்தைகளை பலர் மறந்து விட்டனர்.
வீட்டில் இருக்கும் சுமைகளுக்காக உழைக்கின்ற உங்களுக்கு மேற்சொன்ன அபாயங்கள் உண்டாகாமல் இருக்க நிச்சயம் இது போன்ற நைட் ஷிஃப்ட் வேலைகளை தவிர்க்க வேண்டும்.
எவ்வளவு வேலை செய்தாலும் உங்களுக்காக தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது ஒதுக்கி உங்களை பற்றி, உங்கள் சுயத்தை பற்றி ஆராயுங்கள். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்வதன் மூலம் உங்களுக்கான சிறப்பான வாழ்வு நிச்சயம் கிடைக்கும் நண்பர்களே.



Click it and Unblock the Notifications