For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி சாப்பாட்ல உப்ப அதிகமா சேர்த்துக்காதீங்க! மீறி சேர்த்துக்கிட்டா இந்த அபாயங்கள் நிச்சயம்!

|

உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா? இப்படி கேட்பதை விளம்பரங்களில் பார்த்திருப்போம். டூத்பேஸ்ட்டில் உப்பு இருந்தால் அதனால் பற்களின் வலிமை கூடி, பற்கள் வெண்மை பெறும். இது எல்லா வகையான உப்பிற்கும் பொருந்துமா? என்பதே கேள்வி. சில வகையான உப்புகள் நாம் நினைப்பது போன்று கிடையாது. இவற்றில் பலவித பாதிப்புகள் ஒளிந்துள்ளதாம்.

இனி சாப்பாட்ல உப்ப அதிகமா சேர்த்துக்காதீங்க! மீறி சேர்த்துக்கிட்டா இந்த அபாயங்கள் நிச்சயம்!

உணவில் அதிக அளவு உப்பு சேர்த்து கொண்டால் அதனால் பலவித பாதிப்புகள் உண்டாகும் என ஆய்வுகள் சொல்கின்றன. இது ஒவ்வொரு உப்பிற்கும் மாறுபடும் என்பதே உண்மை. நாம் சாப்பிடும் உப்பின் வகை எத்தனை பேருக்கு தெரியும் என்பதே கேள்வி. சாதாரண இந்த உப்பிலே பல வகைகள் உண்டு. உப்பின் வகைகள் என்னென்ன என்பதையும்? ஒவ்வொரு உப்பின் தன்மையையும் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்பு

உப்பு

நமக்கு மானம், ரோஷம் உள்ளதா என்பதை உப்பின் அளவை வைத்து தான் பல ஆண்டுகளாக கணக்கிடுகின்றோம். உணவில் அதிக உப்பு சேர்த்து கொண்டால் நமக்கு ரோஷம், மானம் உள்ளது என அர்த்தமாம்.

ஆனால், இது அப்படி கிடையாது. உப்பை அதிகமாக சேர்த்து கொள்வதால் உடலில் இரத்த அழுத்தம் உண்டாகி நமக்கு கோபத்தை தூண்டுகிறது. இது ஆரோக்கியமான சூழலை நமக்கு தராது.

கடல் உப்பு

கடல் உப்பு

கடல் நீரை ஆவியாக்கிய பின்னர் அதிலிருந்து கிடைக்கும் உப்பு தான் கடல் உப்பு. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், ஜின்க், இரும்புசத்து போன்ற தாதுக்கள் பல நிறைந்துள்ளன. இவை உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிக்க உதவும்.

PC: JJ Harrison

டேபிள் சால்ட்

டேபிள் சால்ட்

இதை யோனிஸ்ட் உப்பு என்று கூறுவார்கள். பெரும்பாலும் நாம் இந்த உப்பை தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றோம்.

இதில் 99 சதவீதம் சோடியம் குளோரைடு தான் உள்ளது. மற்ற உப்பு வகைகளை காட்டிலும் இது மிக சுலபமாக உணவுடன் கலந்து விடும்.

MOST READ: எடுப்பான உடல் அழகுடன் கேரளத்து பெண்கள் இருப்பதற்கு இந்த ஒன்று தான் காரணம்!

ஹிமாலய உப்பு

ஹிமாலய உப்பு

ஒரு வித பிங்க் நிறத்தில் தோற்றம் தரும் இந்த உப்பை ஹிமாலயன் உப்பு என்று கூறுவார்கள். நாம் சாப்பிட கூடிய சாதாரண உப்பை காட்டிலும் இது அதிக ஆரோக்கியம் நிறைந்தவை.

ஏனெனில், இதில் குறைந்த அளவில் சோடியம் இருப்பது தான் காரணம். மேலும், பல்வேறு விதமான தாதுக்களும் இதில் நிறைந்துள்ளது.

கோஷர் உப்பு

கோஷர் உப்பு

நிலப்பகுதி அல்லது கடல் பகுதியில் இருந்து பெறப்படும் உப்பு வகையை சேர்ந்தது தான் இந்த கோஷர் உப்பு. இது கிட்டத்தட்ட அரிசி தவிடை போன்று தூள் தூளாக இருக்கும். இறைச்சி போன்றவற்றிற்கு, முன் காலத்தில் இந்த உப்பை தான் பயன்படுத்தி வந்தார்கள்.

குறைந்த சோடியம் கொண்ட உப்பு

குறைந்த சோடியம் கொண்ட உப்பு

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் உப்புகளில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சோடியம் குறைவாக உள்ள உப்பை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். அத்துடன் பலவித உடல் நல குறைபாடுகளையும் இது தடுத்து நிறுத்தும்.

செந்தா நாமாக்

செந்தா நாமாக்

ஆயுர்வேத உப்பாக இது கருதப்படுகிறது. மிகவும் ஆரோக்கியம் நிறைந்த உப்பாக இது பார்க்கப்படுகிறது. இதில் எந்தவித வேதி பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை.

இது தான் இதன் முக்கிய சிறப்பாகும். மேலும், இதில் பொட்டாசியம், காப்பர், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளதாம்.

MOST READ: வீட்டில் உள்ள இந்த 10 பொருட்களில் பயங்கர அமானுஷ்ய சக்திகள் ஒளிந்துள்ளதாம்..!

எவ்வளவு உப்பு?

எவ்வளவு உப்பு?

பொதுவாக 1,500 mg அளவுக்கு மேல் ஒரு நாளைக்கு உப்பை எடுத்து கொள்ள கூடாது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

அளவுக்கு அதிகமாக உப்பு சாப்பிட்டால் அவை நேரடியாக நமது உடலை பாதிக்கும். முக்கியமாக மூளையின் செயல்திறன் முதல் இரத்த அழுத்தம் வரை பாதிக்க படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types Of salt

Here we listed different types of salt and which one is the best.
Story first published: Tuesday, March 26, 2019, 15:27 [IST]
Desktop Bottom Promotion