For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரண வலியை உருவாக்கும் மர்ம நோய் - என்ன அறிகுறி உண்டாகும்?

|

அறிவியல், தொழில்நுட்பங்களில் பரிணாம வளர்ச்சி இருப்பது போல், நிம்மதி இழக்கச் செய்யும் நோய்களும் வீரியம் பெற்றுக்கொண்டே வருகிறது. DERCUM என்ற வியாதியை சாமானிய உலகம் அவ்வளவாக கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியால் ஏற்படும் இந்த கோளாறை DERCUM என பெயர்சூட்டி பயமுறுத்துகிறது. மருத்துவ அறிவியல். மனிதனின் உடல் பகுதிகளை பலவீனப்படுத்தும் இந்த நோய், முழங்கையின் மேற்பகுதியையும், முழங்காலின் மேற்புறத்தையும் வெகுவாக தாக்கக்கூடியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
DERCUM - கொழுப்பு திசுக்களின் வளர்ச்சி

DERCUM - கொழுப்பு திசுக்களின் வளர்ச்சி

Orphanet journal of rare desease trusted என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் DERCUM நோயை பற்றிய அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த வகை நோய் பெண்களை 5 முதல் 30 மடங்குவரை பெண்களைப் பாதிக்கும் என்று கூறியுள்ளது. இதில் உள்ள மற்றொரு ஆபத்து இந்த நோயைப் பற்றி அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது. இது ஒரு மர்ம நோய்

MOST READ: இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்... 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது...

நோயின் அறிகுறிகள் என்ன

நோயின் அறிகுறிகள் என்ன

DERCUM என்ற இந்த நோய்க்கு இப்படியான அறிகுறிகள்தான் இருக்கும் என்று யாரும் அளந்து சொல்லி விடவில்லை. ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமான அறிகுறிகளுடன் இது தோன்றக்கூடியது. அதே நேரத்தில் கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியால் வலியை மெல்ல மெல்ல அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. கொழுப்பு திசுக்களின் அளவு ஒருசிலருக்கு உள்ளங்கை அளவும், ஒரு சிலருக்கு ஒரே அளவாகவும், பலருக்கு பல்வேறு அளவுகளைக் கொண்டதாகவும் இருக்கக்கூடும்.

வலி உணர்வு

வலி உணர்வு

DERCUM நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கொழுப்புத் திசுக்களின் அழுத்தத்தால் மரண வலியை அதிகமாக உணர வாய்ப்புள்ளது. நரம்புகளின் மீது அழுத்தம் கொடுத்து இந்த வலியை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அவ்வப்போது மாறுபடுவதாகவும், பலருக்கு நீடித்த நிரந்தர வலியை கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும்.

பொதுவான முக்கிய அறிகுறிகள்

பொதுவான முக்கிய அறிகுறிகள்

எடை அதிகரிப்பு, உடல் பகுதிகள், கைகால்களில் திடீர் வீக்கம், சோர்வு, பலவீனம், மன அழுத்தம், கவனம், நினைவகம், சிந்தனையில் ஏற்படும் சிதறல், எளிதாக சிராய்ப்பது, அதிகாலையில் விறைப்புத்தன்மை, எரிச்சல், தூக்கமின்மை, இதயத்துடிப்பில் பதற்றம், மூச்சுத்திணறல், மலச்சிக்கல் ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.

நோய் உருவாக காரணங்கள்

நோய் உருவாக காரணங்கள்

DERCUM எப்படி, என்ன காரணத்தால் ஏற்படுகிறது என்பதை மருத்துவ உலகம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஆய்வாளர்களில் சிலர் நோய் எதிர்ப்பு சக்தியை இழப்பதால் ஏற்படும் தடுமாற்றம் என பொதுவாக கூறுகிறார்கள். ஆரோக்கியமான திசுக்கள் மீது நோய் எதிர்ப்பு சக்தி நடத்தும் தவறான தாக்குதல் என்றும், வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் அசாதாரண பிரச்சினை என்றும் நம்பப்படுகிறது.

MOST READ: நிறைய பால் குடிப்பீங்களா? உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா?

கண்டறிவது எப்படி

கண்டறிவது எப்படி

DERCUM நோயை கண்டறிவது பற்றி மருத்துவ உலகத்தில் இதுவரை எந்த சாத்தியமுள்ள சிகிச்சை நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. இதற்கு பதிலாக மருத்துவர் ஒருவர், fybromyalgia அல்லது lipedema உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கலாம். உடலில் உள்ள ஒரு சிறிய திசுவை எடுத்து நுண்ணோக்கி மூலம் கண்டறியலாம். இதனை ஆய்வு செய்வதற்கு சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது.

நோயின் வகைப்பாடு

நோயின் வகைப்பாடு

சிறந்த மருத்துவர் ஒருவர் ஒருவேளை DERCUM நோயை கண்டறிந்து விட்டால், கொழுப்பு திசுக்களின் அளவு, பாதிக்கப்பட்ட இடத்தை வைத்து இவ்வாறு வகைப்படுத்தலாம். கை, வயிறு, தொடை உள்ளிட்டவற்றில் பரவும் பெரியவகை

கொழுப்புத் திசுக்களால் ஏற்படும் எலும்பு முறிவு.

நோய்களை பரப்பும் கொழுப்புத் திசுகள்.

பெரிய மற்றும் சிறிய கொழுப்புத் திசுக்களின் கலவை

சிகிச்சை முறைகள்

சிகிச்சை முறைகள்

DERCUM நோயிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு இதுவரை குறிப்பிட்ட எந்த சிகிச்சை முறைகளையும் மருத்துவ அறிவியல் சுட்டிக்காட்டவில்லை. வேண்டுமானால் வலியைப் போக்குவதற்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது.

வலி நிவாரணிகள், CORTISONE ஊசி, கால்சியம் மாற்றிகள், methotrexate, infliximab, interferon alpha, அறுவைச்சிகிச்சை மூலம் கொழுப்புத் திசுக்களை அகற்றுதல், liposuction, மின்னாற்றல் அதிர்வு சிகிச்சை, அக்குபஞ்சர் வைத்தியம், intravenous lidocaine போன்ற மாற்று சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம் இது தவிர அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஒவ்வாமை எதிர்ப்பு உணவுகள், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் மூலம் இந்த நோயின் வலியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

MOST READ: தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க... இந்த நோய் உடனே தீரும்...

நோயின் பாதகங்கள்

நோயின் பாதகங்கள்

கடுமையான வலியை ஏற்படுத்தும் இந்த நோயால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஒருவர் போதைப் பழக்கத்துக்கு ஆளாக நேரிடும் ஆபத்தும் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வலி உணர்வை போக்கும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Successful Treatment of Dercum's Disease by Transcutaneous Electrical Stimulation

Dercum's disease is a rare condition of painful subcutaneous growth of adipose tissue. Etiology is unknown and pain is difficult to control. We report the case of a 57-year-old man with generalized diffuse Dercum's disease, who improved after the treatment with transcutaneous frequency rhythmic electrical modulation system
Story first published: Tuesday, May 21, 2019, 11:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more