Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
செஸ்க்ஸ் பற்றிய கல்வியும் புரிதலும் மிக குறைவாக இருக்கும் நம்மிடத்தில் இதனை பற்றிய தவறான பார்வையும் நிச்சயம் அதிக அளவில் இருக்கும். ஆணும் பெண்ணும் காதல் செய்தாலே வெட்டு, குத்து என பேசி கொள்ளும் நாம் எப்போது தன்பாலின ஈர்ப்பாளர்களை பற்றி புரிந்து கொள்ள போகிறோம் என்பது காலத்தின் வெளிச்சம். எப்போதுமே நம்மை சுற்றி பலவித கற்பிதங்களும் அதை சார்ந்த கட்டுக்கதைகளும் சூழ்ந்தபடியே இருக்கும்.

அவற்றில் பல அப்பட்டமான பொய்யாகவே உள்ளன. ஒரு சில மட்டுமே ஏற்றும் கொள்ளும் படி உள்ளது. இதில் பாலியல் ரீதியான நோய்களும் அடங்கும். உடலுறவு கொள்ளும் போது பாலியல் ரீதியான நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இது எதிர் பாலினத்தாருடன் உறவு கொள்ளும் போது ஏற்படும் என்பது நமக்கு தெரியும்.
இதுவே கே, லெஸ்பியன் போன்ற தன்பாலின ஈர்ப்பு கொண்டோருக்கு ஏற்படுமா என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன. தன்பாலின ஈர்ப்பு கொண்டோருக்கு உண்மையில் உறவினால் பாதிப்புகள் ஏற்படுமா? இவர்களை பற்றி நாம் இத்தனை நாட்களாக நினைத்து கொண்டுள்ள கட்டுக்கதைகள் உண்மையா? போன்ற பல தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

வேறுபாடு
ஆண் மற்றும் பெண் ஆகிய எதிர் பாலினத்தவர்கள் சேர்வது ஹெட்ரோ செக்ஸ் எனப்படும். இதுவே ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் சேர்வது ஹோமோ செக்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த வகை தன்பாலின ஈர்ப்பாளர்கள் இன்று நேற்று வந்தவர்கள் கிடையாது. மனித இனம் தோன்றியது முதலே இப்படிப்பட்ட ஈர்ப்பும் இருந்தே வருகிறது.

உடலுறவு
ஹெட்ரோ செக்ஸுவல்ஸ் ஒருவருடன் மட்டும் உடலுறவில் ஈடுபட்டால் பால்வினை நோய்களை தடுக்கலாம். இதுவே இவர்கள் பலருடனும் உறவு கொண்டால் நிச்சயம் பாலியல் ரீதியான நோய்கள் உருவாகும்.
குறிப்பாக காண்டம் போன்ற உறைகளை பயன்படுத்தவில்லை என்றால் பால்வினை நோய்கள் எளிதில் இவர்களை தொற்றி, உயிருக்கே உலை வைக்கும்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்
கே, லெஸ்பியன் போன்றோர் செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்கிறே ஒரே எண்ணத்தில் பழகுகிறார்கள் என்பதே இங்கு பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், நிச்சயம் இது அப்படி கிடையாது.
இவர்களின் ஹார்மோன் மாற்றத்தினால் தான் இப்படி ஒரு ஈர்ப்பு இவர்களுக்கு உண்டாகிறது. தவிர செக்ஸ் மட்டுமே இவர்களுக்கு வேண்டியதில்லை.

கலவி
எப்படி எதிர் பாலினத்தவர்களுக்கு ஒரு பெண் மீதோ அல்லது ஒரு ஆண் மீதோ காதல் பிறந்து, உறவு வைத்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறார்களோ அதே போன்று தான் தன்பாலின ஈர்ப்பாளர்களும்.
ஆனால், அவ்வாறு உறவு வைத்து கொள்ளும் போது பல்வேறு சிக்கல்கள் இவர்களுக்கு உண்டாகிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

மன அழுத்தம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேரும்போதே சில நேரங்களில் மன அழுத்தம், பயம், தயக்கம் போன்றவை உண்டாகும். இதுவே ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களுக்குள் இதை விட பல மடங்கு தயக்கம், பயம், மன அழுத்தம் உண்டாகிறது என பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூறுகிறது.

காரணம்?
இதற்கு சில காரணிகள் உள்ளது எனவும் கண்டறிந்துள்ளனர். இதற்கு மூல காரணமே இந்த சமூகத்தில் ஏற்பட கூடிய ஏற்றத்தாழ்வுகள், உதாசீனப்படுத்துதல், இவர்களை கேலி செய்வது போன்ற கீழ் தரமான செயல்கள் தான். இவை தன்பாலின ஈரப்பளர்களை பெரிதும் பாதிக்கிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

உறவு!
அவ்வாறு ஒரு ஆணும் ஆணும் அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும் அன்பை பரிமாறி கொள்ள, உறவில் ஈடுபடும் போது பலவித பால்வினை நோய்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக HIV போன்ற நோய் தொற்றுக்களின் பாதிப்பு அதிகம் உண்டு. இவற்றில் இருந்து தப்பிக்கவும் சில வழிகள் உள்ளன.

பாதுகாப்பு
ஹோமோ செக்சஸுவல்ஸ் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னர் கட்டாயம் காண்டம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்த கூடிய உறைகளின் தன்மையும் இதில் முக்கியம். எளிதில் கிழியாத உறைகளை பயன்படுத்துவது அவசியம்.

பரிசோதனை
எப்படி ஹெட்ரோ செக்சஸுவல்ஸ் உறவிற்கு முன்னர் பரிசோதித்து கொள்கிறார்களோ அதே போன்று ஹோமோ செக்சஸுவல்ஸ் உறவில் சேருவதற்கு முன் பாலியல் நோய்களின் பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். முன்கூட்டியே இதனை கண்டறிந்தால் உங்களை பாதுகாத்து கொள்ளலாம். இல்லையேல் வாழ்நாள் முழுக்க நரகமே.

தடுப்பூசிகள்
பாலியில் ரீதியாக பரவ கூடிய நோய்களை தடுக்க HPV வகை தடுப்பூசிகளை முன்கூட்டியே போட்டு கொள்ள வேண்டும். இல்லையேல் அந்தரங்க உறுப்பின் வழியாக கல்லீரல், சிறுநீர் பாதை போன்ற மற்ற உறுப்புகளுக்கும் இந்த நோய்கள் பரவ தொடங்கும்.

சக மனிதர்களே!
யாராக இருந்தாலும் ஒன்றே என்பதை நாம் முதலில் உணர வேண்டும். ஹோமோ செக்சஸுவல்ஸ் மற்றும் ஹெட்ரோ செக்சஸுவல்ஸ்...இப்படி யாராக இருந்தாலும் உறவில் சேரும் போது முன்னெச்சரிக்கையாக செயல்படுவது சிறந்தது.
செக்ஸ் பற்றிய கல்வியும், இதை பற்றிய சரியான புரிதலும் விழிப்புணர்வும் இருந்தாலே எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்பட போவதில்லை.



Click it and Unblock the Notifications
