Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
முட்டையின் வெள்ளை பகுதியை சாப்பிட்டால் ஆபத்தா? ஏன் தெரியுமா..?
இப்போதெல்லாம் எதை சாப்பிடுவது? எதை சாப்பிட கூடாது? என்கிற எண்ணத்திலே சாப்பிடவதையே மறந்து விடுகிறோம். இதை சாப்பிட்டால் நோய் வரும்! அதை சாப்பிட்டால் பக்க விளைவு அதிகம்! இதை தொட்டாலே மரணம்! இப்படி பல பீதிகளை நாம் ஊர்ந்து கவனித்திருக்க இயலும். ஆனால், இவற்றில் பல உண்மைகளும் மறைந்துள்ளன.

சில உணவுகளை நாம் சாப்பிட்டால் உண்மையிலே ஆபத்துகள் உண்டாகும். சாப்பிட கூடிய உணவின் பதம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் முட்டையை பற்றிய சர்ச்சைகளும் அதிகமாகவே உள்ளது. முட்டையில் இருந்து கோழியா? இல்லை கோழியில் இருந்து முட்டையா? இப்படி ஏடாகூடமான கேள்விகள் முட்டையை சுற்றி இன்றும் வலம் வருகின்றன.
அதே நேரத்தில் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட கூடாது. வெள்ளையை சாப்பிட கூடாது என்கிற பல புதிர்களும் உள்ளன. இவை அனைத்திற்கும் தெளிவான புரிதலை கொண்டு வரவே இந்த பதிவு.

முட்டை..! முட்டை..!
பல்வேறு ஆரோக்கியங்கள் முட்டையில் நிறைந்துள்ளன என்பது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். குறிப்பாக பிராய்லர் முட்டையை விட நாட்டு கோழி முட்டையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளது. முட்டையின் சத்துக்கள் என்பது மஞ்சள் கரு, வெள்ளை பகுதி என தனி தனியாகவே பார்க்கப்படுகிறது.

மஞ்சள் கரு-சத்துக்கள்
முட்டையின் மஞ்சள் கரு என்பது மையத்தில் இருப்பவை. இவற்றில் வைட்டமின் எ,டி, ஈ, பி6, பி12, கே, போலேட், கால்சியம் மெக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும். இவை உடல் ஆரோக்கியம், முடியின் வளர்ச்சி, சருமம் போன்ற அனைத்திற்கும் பயன்படுகிறது.

வெள்ளை பகுதி-சத்துக்கள்
மஞ்சள் கருவை போன்றே முட்டையின் வெள்ளை பகுதியிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. முக்கியமான புரதசத்து இதில் தான் நிறைந்துள்ளது.
மேலும், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவையும் உள்ளது. கூடவே இதில் குறைந்த கலோரிகளே உள்ளன. ஆதலால் எளிதாக இது எடையை குறைக்க உதவும்.

வெள்ளை பகுதி-பாதிப்புகள் #1
என்னதான் எண்ணற்ற நன்மைகள் முட்டையின் வெள்ளை பகுதியினால் கிடைத்தாலும், இவற்றால் சில பாதிப்புகளும் உண்டாகின்றன. முதலாவதாக, இதிலுள்ள ஆல்புமின் என்கிற புரதசத்து சிலரின் உடலில் ஒவ்வாமையை உண்டாக்குகின்றன. முக்கியமாக வயிற்று போக்கு, வாந்தி, மயக்கம் முதலிய பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன.

பாதிப்பு #2
முட்டையின் வெள்ளை கருவை சாப்பிடுவதால் ஆபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா தான்.
இவை முட்டையின் வெள்ளை பகுதியில் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆதலால், இதை நன்றாக சமைத்து சாப்பிடவில்லை என்றால் குடல் சார்ந்த பிரச்சினைகள் கூட ஏற்படும்.

பாதிப்பு #3
முட்டையின் வெள்ளை பகுதியை சாப்பிடும் சிலருக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். காரணம் இதிலுள்ள அதிக அளவிலான புரதசத்து தான். 0.6 - 0.8 கிராம் அளவிலான புரதசத்து தான் ஒரு நாளைக்கு போதுமானதாக இருக்கும். அதற்கு மீறி சாப்பிட்டால் உடல்நல கோளாறுகள் உண்டாகும்.

மஞ்சள் கரு-பாதிப்பு #1
முட்டையின் மஞ்சள் கரு அதிக ஊட்டசத்துக்கள் கொண்டவை தான். என்றாலும், இதில் கொலட்ஸ்ரால் அளவு அதிகமாக உள்ளது. இது தான் இதன் பாதிப்பிற்கு முக்கிய காரணியாக உள்ளது. கூடவே இதயம் சார்ந்த பாதிப்புகளும் இதனால் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.

பாதிப்பு #2
மஞ்சள் கருவை சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் சிலருக்கு பாதிக்க கூடும். குறிப்பாக இதய நோய்கள் உள்ளவர்களுக்கு இதன் தாக்கம் அதிகம். மேலும், இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தமும் உண்டாகும். சிலருக்கு மஞ்சள் கருவின் பாதிப்பு அபாயகரமான நிலைக்கும் கொண்டு சென்று விடும்.

யாருக்கு எது சிறந்தது?
முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் பகுதி இரண்டுமே ஆரோக்கியமானது தான். ஆனால், இதை யார் யார் எவ்வளவு அளவு எடுத்து கொள்ள வேண்டும் என்பதிலே இதன் பாதிப்பும் நன்மையும் உள்ளது.
உடல் எடை குறைப்போர், இதய பாதிப்பு கொண்டோர் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்கலாம். அதே போன்று ஒவ்வாமை, சிறுநீரக பிரச்சினை கொண்டோர் வெள்ளை பகுதியை தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications