For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்பவே வெயில் மண்டைய பொளக்குதா? இந்த மட்டும் பண்ணுங்க... எப்பேர்ப்பட்ட வெயிலையும் சமாளிக்கலாம்

By Mahibala
|

பொதுவாக நமக்கு தண்ணீரின் அருமையே கோடை காலத்தில் தான் தெரியும் என்று சொல்வார்கள். எங்கு பார்த்தாலும் வறட்சியும் வெயிலும் இருக்கும். அதில் நம்முடைய உடலுக்கும் அதிக வறட்சி ஏற்படுத்தும். அத்தகைய வறட்சியைப் போக்கி, கோடை காலத்தை நாம் ஓரளவுக் சமாளிக்க வேண்டும் என்றால் அதற்கு தண்ணீர் தான் மிக முக்கிய தேவையாக இருக்கிறது.

அதற்கான தண்ணீரை நினைத்தபடி குடிக்கக் கூடாது. அதற்கென சில விதிகள் உண்டு. அதை பின்பற்றுவது தான் நல்லது. அதுதவிர கோடைகாலம் வந்துவிட்டால் இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை எழுந்ததும்

காலை எழுந்ததும்

கோடை காலத்தில் காலையில் தூங்கி எழுந்தவுடன் பல்லைத் துலக்கிக் கொண்டு, காபி, டீயைத் தேடுவதை முதலில் நிறுத்துங்கள்.அதற்கு பதிலாக பழைய சாதம் ஊற வைத்த தண்ணீரை (நீராகாரம்) இரண்டு டம்ளர் அளவுக்குக் குடியுங்கள்.

அடுத்து காலை உணவில் மாதுளை, தர்ப்பூசணி, திராட்சை, கொய்யா, பப்பாளி இவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது மிக்ஸ்டாகவோ எடுத்துக் கொள்வது நல்லது.

MOST READ: இந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்

ஊறவைத்த வெந்தயம்

ஊறவைத்த வெந்தயம்

இளநீர், மோர், தண்ணீர் ஏதாவது ஒன்றில் இரவு சிறிதளவு வெந்தயத்தை போட்டு ஊற வைத்துவிடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடித்து வந்தால் வெயிலால் ஏற்பட்ட சூடு உஷ்ணம் குறையும்.

காலையில் தண்ணீர்

காலையில் தண்ணீர்

காலையில் எவ்வளவு தாகம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றபடி தண்ணீர் குடிப்பது நல்லது. முக்கியமாக காலை 5 மணி முதல் 7 வரை பெருங்குடல் வேலை செய்வதற்கான முக்கிய நேரம். அந்த சமயத்தில் நாம் குடிக்கும் தண்ணீர் தான் நமது குடல்களைச் சுத்தப்படுத்தி பசி உணர்வைத் தூண்டும். நல்ல ஜீரணத்துக்கு உதவி செய்யும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடல் உஷ்ணமும் கட்டுக்குள் இருக்கும்.

காலை உணவு

காலை உணவு

கோடை காலத்தைப் பொருத்தவரையில் காலை உணவாக கம்மங்கூழ், பழைய சாதம், நீராகரம், அதோடு தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, புதினா துவையல் ஆகியவற்றை வைத்துக் கொள்வது நல்லது.

குறிப்பு

குறிப்பு

குறிப்பாக காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே முறையாக தண்ணீர் குடித்தல் அவசியம். தாகம் எடுத்தால் ஒழிய தேவையில்லாமல் குடிக்க வேண்டாம்.

மதிய உணவுக்கு முன்

மதிய உணவுக்கு முன்

மதிய உணவு சாப்பிடச் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக சிறிது தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இடையில் தண்ணீர் குடிப்பது தவிர்க்கப்படும். இது உணவு ஜீரணத்தை துரிதப்படுத்தும்.

MOST READ: சீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...

காய்கறிகள்

காய்கறிகள்

மதிய உணவைப் பொருத்தவரையில் நீர்க் காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்வது நல்லது. அதில் சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய் ஆகியவை மிக முக்கியமான காய்கறிகளாகும். இவற்றில் ஏதாவது ஒன்று தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

மோர் எவ்வளவு குடிக்கலாம்?

மோர் எவ்வளவு குடிக்கலாம்?

வெயில் காலத்தைப் பொருத்தவரையில் மோர் தாராளமாகக் குடிக்கலாம். வாரத்தில் நான்கு நாட்களாவது மதிய உணவோடு சேர்த்து மோரை சாப்பிடுங்கள் மோரில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி போட்டு மசாலா மோராகக் கூட பயன்படுத்தலாம். புளிப்பு சுவையை அதிகமாக விரும்பாதவர்கள் மோரை தாளித்து சாப்பிடுங்கள். அது புளிப்புச் சுவையைக் குறைக்கும்.

அசைவ உணவுகள்

அசைவ உணவுகள்

அசைவ உணவு சாப்பிடுகிறவர்களாக இருந்தால் அதை மதிய வேளைகளில் சாப்பிடுங்கள். ஒருவேளை இரவில் சாப்பிடுவதாக இருந்தால் எட்டு மணிக்கு முன்பாகவே சாப்பிட்டு விடுவது நல்லது. அதேபோல் அதிக மசாலாவும் காரமும் இல்லாமல் சாப்பிடுங்கள். குறிப்பாக, ஆட்டின் சாப்ஸ் என்று சொல்லப்படும் மார்பு எலும்பில் சூப் செய்து சாப்பிடுவது நல்லது. அது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

மாலை நேரங்களில்

மாலை நேரங்களில்

ஒரு வேளை மாலை நேரங்களில் பசியோ தாகமோ எடுத்தால் ஜூஸ் ஏதாவது குடித்துக் கொள்ளலாம். நாள் முழுக்க எந்தெந்த நேரங்களில் அதிக தாகம் எடுக்கிறது என்று கவனித்து அதற்கு ஏற்றபடி தண்ணீர் குடிப்பது நல்லது. ஏனென்றால் தேவைக்கு அதிகமாகவும் தண்ணீர் குடிப்பது தவறு.

MOST READ: ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...

வெட்டிவேர்

வெட்டிவேர்

பொதுவாகவே இப்போது எல்லோரும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைத் தான் குடிக்கிறோம். அதில் சிறிது வெட்டிவேர் போட்டு ஊறவிட்டு குடிப்பது இன்னும் நல்லது. சிலர் நிறைய வேர்களைப் போட்டு வைத்துவிடுவார்கள். அப்படி செய்யக்கூடாது. 30 லிட்டர் தண்ணீர் அளவுக்கு 3 வேர்கள் கணக்கில் போட்டாலே போதுமானது.

உட்கார்ந்து

உட்கார்ந்து

நம்மில் பலருக்கும் தண்ணீர் குடிக்கும்போது நின்று கொண்டு குடிக்கும் பழக்கம் தான் அதிகம் இருக்கும். ஆனால் அது முற்றிலும் தவறு. எப்போது தண்ணீர் குடித்தாலும் உட்கார்ந்து தான் குடிக்க வேண்டும்.

சிறுநீர் கழிப்பது

சிறுநீர் கழிப்பது

ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்ததுத் சிறிதளவு தண்ணீர் குடிப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமயத்தில் தாகம் எடுக்காவிட்டாலும் சிறிது குடிப்பது நல்லது.

குளியல்

குளியல்

கோடை காலத்தில் தினமும் தலைக்குக் குளித்துவிடுங்கள். அதேபோல் காலை,இரவு என இரண்டு வேளை குளியுங்கள். அது உடல் சூட்டைக் குறைத்தும் சமநிலைப்படுத்தும். அதேபோல் வாரம் ஒரு முறை மறக்காமல் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.

உள்ளாடைகள்

உள்ளாடைகள்

கோடை காலத்தில் இரண்டு முறையாவது உங்களுடைய உள்ளாடைகளை மாற்றுங்கள். அதேபோன்று தூங்கச் செல்வதற்கு முன்பாக, நமது இடுப்புப் பகுதிகள் உள்ளிட்ட பிறப்புறுப்புப் பகுதிகளை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு தூங்கச் செல்வது நல்லது. அது நமது சிறுநீரகப் பகுதியைக் குளிர்ச்சிப்படுத்தும்.

MOST READ: இன்னைக்கு இந்த நான்கு ராசிக்காரர்களுடைய காதல் மட்டும் தான் பலிக்குமாம்... மத்தவங்களுக்கு பல்பு தான்.

பசும்பால்

பசும்பால்

பாக்கெட் பால் இல்லாமல் நல்ல தூய்மையான பசும்பால் கிடைத்தால் இரவு உணவின் போதோ அல்லது உணவுக்குப் பின்னோ எடுத்துக் கொள்ளுங்கள். அது உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியைக் கொடுக்கும். அதோடு நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

procedure for drinking water in this summer

During summer when the temperatue hits high there is fluid loss from the body. one feels too often and also gets dehydrated in to the heat. water is the best solution quench thirst. prevent fluid loss after excercise and dehydration.
Story first published: Tuesday, February 26, 2019, 15:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more