Latest Updates
-
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!
இந்த மோசமான நோய்களை உடலில் இருந்து வரும் வாசனையை வைத்தே மருத்துவர்கள் கண்டுபிடித்து விடுவார்களாம்?
நமது உடலில் ஏற்படும் துர்நாற்றம் வியர்வையால் மட்டும் ஏற்படுவதில்லை இது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
நமது உடலில் ஏற்படும் துர்நாற்றம் வியர்வையால் மட்டும் ஏற்படுவதில்லை இது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் கருத்துப்படி புற்றுநோய், பார்க்கின்சன் நோய் போன்ற நோய்களை உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் துர்நாற்றத்தை கொண்டே கண்டறிந்து விடலாம்.

நோய்கள் நமது உடலின் செயல்பாடுகளை மாற்றக்கூடியவை. நோய் உடலில் புதிய மற்றும் வேறுபட்ட உயிர்வேதியியல் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் போது, இந்த செயல்முறைகள் சிறிய கொந்தளிப்பான மூலக்கூறுகளின் உற்பத்திக்கு வழிவகுக்கும். இந்த மூலக்கூறுகள் இரத்தம் மூலமாக நுரையீரலுக்கு செல்வதன் மூலம் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் உடல் துர்நாற்றத்தை வைத்து என்னென்ன நோய்களை கண்டறியலாம் என்று பார்க்கலாம்.

நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோயை வாசனையை வைத்தே கண்டறியலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட நனோஸ் என்னும் கருவி புற்றுநோய் செல்களால் உருவாக்கப்படும் வாசனையை கொண்டு அதன் தன்மையை அளவிடும். இதன் முடிவு 90 சதவீதம் சரியானதாக இருக்கும். இதேமுறையை வைத்து பல்வேறு நோய்களை மருத்துவர்கள் கண்டறிகிறார்கள்.

சிறுநீரக செயலிழப்பு
மூச்சில் அமோனியா வாசனை வருவது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாகும். பொதுவாக சிறுநீரக செயலிழப்பை கண்டறிய அதிக கருவிகள் தேவைப்படும். ஆனால் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் கண்டறியப்பட்ட சென்சார் பொருத்திய சிப்கள் மூச்சில் இருக்கும் வாசனையை வைத்தே சிறுநீரக செயல்பாட்டை கண்டறிந்துவிடும். ஒருமுறை உபயோகப்படுத்திய பிறகு இதனை தூக்கி எரிந்து விடலாம்.

கல்லீரல் செயலிழப்பு
உங்கள் கல்லீரல் அதன் செயல்பாட்டை நிறுத்தும்போது உங்கள் உடலில் இருக்கும் நச்சுத்தன்மை அதிகரிக்கும். இதனால் ஏற்படும் துர்நாற்றம் வியர்வை, சிறுநீர் மூலம் நன்கு தெரியும். இதன் வாசனை மீனின் வாசனையை போன்று இருக்கும்.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ்
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் என்பது தன்னுடல் தாக்க நோய், இதனால் உடல் அதன் சொந்த மைய நரம்பு மண்டலத்தைத் தாக்கத் தொடங்குகிறது. இதனால் உணர்வின்மை, பார்வை குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை பொதுவாக MRI ஸ்கேன் மூலமாகத்தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இந்த நோய்க்கென தனிவாசனை இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனை வைத்து எளிதில் இதனை கண்டறிந்து விடலாம்.

ஈறுகளில் ஏற்படும் நோய்
உங்களுக்கு ஈறுகளில் பிரச்சினை இருந்தால் , அங்கிருக்கும் பாக்டீரியா ஹைட்ரஜன் சல்பைட் போன்ற கழிவுப்பொருட்களை வெளியிடுகிறது, இது அழுகிய முட்டையை போல இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதன்மூலம் ஒருவருக்கு ஈறு நோய், வாய்ப்புண் போன்ற பிரச்சினைகள் இருப்பதை கண்டறிந்துவிடலாம்.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகளின் வாசனையில் எப்போதும் பழ வாசனை இருக்கும். இது நீரிழிவு கீட்டோசிஸைக் குறிக்கும். இன்சுலின் ஹார்மோன் போதுமானதாக இல்லாதபோது அல்லது உடல் அதை சரியாகப் பயன்படுத்தாதபோது, எரிபொருளுக்காக கொழுப்பை எரிக்கத் தொடங்கும்.

மோனோ
உலகளாவிய மக்கள்தொகையில் 90 சதவிகிதம் தொற்று மோனோநியூக்ளியோசிஸ் அல்லது மோனோ தாக்குகிறது. மூச்சுக்காற்றில் புளிப்பு வாசனை வருவது இதன் முதல் அறிகுறியாகும்.



Click it and Unblock the Notifications