For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அளவுக்கு மேல உடம்புல வெயில் பட்டுச்சினா, உயிரே போயிடுமாம்..!

|

குளிர் காலம் முடியரத்துக்குள்ளேயே வெயில் காலம் ஆரம்பிச்சிடுச்சு. எந்நேரமும் ஏ.சி-யிலே காலத்த போக்குறவங்களுக்கு கூட இனி ஆப்பு தான். ஏ.சிய விட்டு ஒரு அடி நகர்ந்தாலும் ஐய்யய்யோ...அம்மம்ம்மா..! அப்படினு அலறி அடிச்சிக்கிட்டு வந்துடுவாங்க. இப்படிப்பட்ட அளவுக்கு வெயில் நம்மள வாட்டி எடுக்க போகுதுனு நல்லாவே தெரியும்.

இந்த அளவுக்கு மேல உடம்புல வெயில் பட்டுச்சினா, உயிரே போயிடுமாம்!

இதுல முக்கியமான விஷயம் என்னனா" போன வருஷத்த விட இந்த வருஷத்துல வெயில் அதிகமான அளவுல இருக்கும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. சாதாரண மனுஷனோட உடம்புல ஒரு அளவுக்கு மேல வெப்பம் தாங்காது. இந்த வெப்பம் முழுசா நம்ம உயிரையே உருகுலைச்சிடும்னு ஆய்வுகள் சொல்லுது.

இப்படி கொடூரமான அளவுல நம்ம உடம்புல வெயில் பட்டா அதனாலையும் நோய்கள் உண்டாகுமாம். அந்த நோயோட பெயரையும், இது முதல்ல எந்த உறுப்பை பாதிக்கும், இதன் அறிகுறிகள், தாக்கங்கள், தடுப்பு முறை போன்ற பல தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொண்டு, உஷாராக இருப்போம் நண்பர்களே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கால மாற்றம்

கால மாற்றம்

சரியான நேரத்தில் மழை, சீரான அளவு வெயில்...இப்படி பூமியில் இயக்கமே சீராக இருந்து வந்த காலம் முற்றிலுமாக மாறுபட்டு தலைகீழ் சுழற்சியை தற்போது சந்தித்து வருகிறது. மழை எப்போது வரும் என்றே தெரிவதில்லை.

ஆனால், வெயிலின் தாக்கம் மட்டும் பல மடங்கு அதிகமாக உள்ளது. துருவ பகுதியில் பனிக்கட்டிகள் உருகி பல அபாய எச்சரிக்கைகளை பூமி தாய் தந்து வருகிறாள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் மனிதன் மட்டுமே!

தட்பவெப்பம்

தட்பவெப்பம்

சீரற்ற கால மாற்றத்தின் விளைவு மோசமான தட்பவெப்பம் தான். முன்பெல்லாம் வெயில் காலங்களில் வெளியில் சென்றால் அந்த அளவிற்கு சூரியனின் பாதிப்பு இருக்காது. ஆனால், தற்போது இதன் வீரியம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால் தட்பவெப்பமும் உயர்ந்துள்ளது. மனித உடலால் சராசரியாக 95.9°F to 99.5°F என்கிற அளவு தட்பவெப்பத்தை மட்டுமே தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் சென்றால் இதன் பாதிப்பு மோசமாகும்.

ஹைப்பர்தெர்மியா (Hyperthermia)

ஹைப்பர்தெர்மியா (Hyperthermia)

சுட்டெரிக்கும் வெயிலினால் கிடைக்கும் நோய் தான் ஹைப்பர்தெர்மியா. உடலில் தட்பவெப்பம் 104°F (40°C) அளவுக்கு மேல் இருந்தால் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக அர்த்தம்.

வருகின்ற கால கட்டத்தில் இதை விடவும் வெப்பம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹைப்பர்தெர்மியா நீடித்தால் மரணம் கூட நேரலாம்.

MOST READ: இந்த 4 உணவுகளை மஹா சிவராத்திரி அன்று சிவனுக்கு படிக்காதீர்கள்! மீறினால் ஆபத்து உங்களுக்கு தான்!

அறிகுறிகள்

அறிகுறிகள்

இந்த நோயின் அறிகுறிகள் நாம் நினைப்பதை விடவும் அதிக அளவில் இருக்கும்.

- நீர்சத்து படிப்படியாக குறைதல்

- தலைவலி

- அதிக அளவில் வியர்த்து கொட்டுதல்

- தோல் சிவப்பாக மாறுதல்

- தசை வலி

- மயக்கம்

- சிறுநீர் மிக குறைவாக வெளியேறுதல்

- சுய நினைவை இழத்தல்

இப்படிப்பட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுக்கு ஹைப்பர்தெர்மியாவின் பாதிப்பு உள்ளது என அர்த்தமாம்.

தாக்கம்

தாக்கம்

இந்த நோயின் தாக்கம் உயர்ந்தால் மேலும் சில வீரியமிக்க பாதிப்புகள் ஏற்படுமாம். குறிப்பாக,

- தோளில் உடனடியாக வெடிப்பு ஏற்படுதல்

- ஒவ்வொரு உறுப்பாக செயலிழத்தல்

- வலிப்பு

- கோமா நிலை

- இறுதியில் மரணம்

சாதாரண வெயில் தானே என்று எப்போதுமே எண்ணி விடாதீர்கள். இந்த வகை வெயிலால் தான் பாதிப்புகள் அதிகம்.

தீர்வு #1

தீர்வு #1

ஹைப்பர்தெர்மியா போன்ற வெப்பத்தினால் உண்டாகும் பாதிப்பை தடுக்க அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலத்தில் நமது உயிரை காக்கும் சிறந்த ஆயுதம் நீர் தான். மேலும், எலெக்ட்ரோலைட் கலந்த நீரை அருந்தினால் பலன் அதிகம். தினமும் 2 வேளை கட்டாயம் குளிக்க வேண்டும்.

தீர்வு #2

தீர்வு #2

இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்ந்த வகை ஆடைகளை உடுத்தவும். வெயில் காலங்களில் குறிப்பாக அடர்ந்த நிறங்கள் கொண்ட ஆடைகளை உடுத்தவே கூடாது.

வெளியில் சென்று வீடு திரும்பிய பின்னர் ஐஸ் பேக்குகளை தசைகளில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். வெளியில் செல்லும் போது அவசியம் குடை போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

MOST READ: மஹா சிவராத்திரி அன்று எப்படி விரதம் இருக்கலாம்? எது சரியான முறையாக இருக்கும்?

தீர்வு #3

தீர்வு #3

வீட்டிற்குள் நீரோட்டத்தை தரக்கூடிய மரங்களை நட்டு வைப்பது நல்லது. இது நல்ல காற்றோட்டத்தை தந்து, ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும். மேலும், வெயில் காலங்களில் சுவாச கோளாறுகள் ஏற்படாதவாறு பார்த்து கொள்வது அவசியம்.

உங்களை சுற்றி இருக்கும் இடத்தை காற்றோட்டமாக வைத்து கொண்டாலே ஹைப்பர்தெர்மியா நோயின் பாதிப்பு குறைவு.

யாருக்கெல்லாம் பாதிப்பு?

யாருக்கெல்லாம் பாதிப்பு?

பெரும்பாலும் வெயில் காலங்களில் சூரியனின் வெப்பத்தில் அதிக நேரம் இருப்போருக்கே இந்த நோயின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்.

விவசாயிகள், கூலி வேலை செய்வோர், கட்டிட வேலை செய்வோர், வெளி விளையாட்டுகளில் கலந்து கொள்வோர் போன்றோருக்கு ஹைப்பர்தெர்மியா அதிக அளவில் இருக்க கூடும். எனவே, மேற்சொன்ன குறிப்புகளை நினைவில் வைத்து கொண்டு இந்த நோயில் இருந்து தப்பிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hyperthermia: Symptoms, Prevention, and More

This article talks about Hyperthermia: symptoms, treatment, and more.
Desktop Bottom Promotion