For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காயங்கள் சீழ்கட்டி பெரிதாகாமல் இருக்க வீட்டிலிருக்கும் இந்த எளிய பொருட்களே போதும் தெரியுமா?

காயங்களை சரியாக பராமரிக்க விட்டால் அதில் தொற்றுகள் ஏற்பட்டு அதனால் காயத்தில் சீழ்கட்டி கொள்ளவும் வாய்ப்புள்ளது.

|

நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் காயம் படுவதை தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று. ஏனெனில் எந்த சந்தர்ப்பத்தில் காயங்கள் காயங்கள் ஏற்படும் எப்படி ஏற்படும் என்பது நம்மால் யூகிக்க முடியாத ஒன்று. அப்படி காயம் ஏற்பட்டுவிட்டாலும் அதனை குணமாகும் வரை பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

Home Remedies For Festering

காயங்களை சரியாக பராமரிக்க விட்டால் அதில் தொற்றுகள் ஏற்பட்டு அதனால் காயத்தில் சீழ்கட்டி கொள்ளவும் வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை சில வீட்டு வைத்தியங்கள் மூலமாக தடுக்கலாம். இந்த பதிவில் காயங்களை சீக்கிரம் குணப்படுத்தும் மற்றும் சீழ்கட்டி கொள்ளாமல் பாதுகாக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெந்தயம்

வெந்தயம்

மூட்டு வலி சிகிச்சையில் பொதுவாக வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது மூட்டுவலி மட்டுமின்றி பல காயங்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. வெந்தயத்தை பசை போல அரைத்து கொண்டு அதனை காயம்பட்ட இடத்தில் பூசவும். இது பாக்டீரிய தொற்று ஏற்படுவதை தடுப்பதுடன் காயத்தில் சீழ்கட்டுவதையும் தடுக்கிறது.

செவ்வந்தி பூக்கள்

செவ்வந்தி பூக்கள்

இது ஏராளமான எதிர் எ;அழற்சி பண்புகளை கொண்டிருக்கும் மூலிகை ஆகும். இந்த இலைகளை காயவைத்து அரைத்து காயத்தின் மீது தடவலாம். இதனை கொண்டு தேநீர் தயாரித்து குடிப்பது கூட காயத்தை விரைவில் குணமாக்கலாம். இதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் ஒரு துணியை நனைத்து அந்த துணியை காயத்தின் மீது சிலநிமிடங்கள் வைக்கவும். இது காயத்தை உலர்த்துவதுடன் அது மேலும் பெரிதாகாமல் தடுக்கும்.

தேன்

தேன்

தேனை காயத்தின் மீது நேரடியாக தடவ வேண்டும் என்ற அவசியமில்லை. தேனை உணவில் சேர்த்து கொள்வதே உங்கள் காயம் குணமாகும் வேகத்தை துரிதப்படுத்தும். இதில் இருக்கும் பல எதிர் அழற்சி பண்புகள் காரணமாக இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

க்ரீன் டீ

க்ரீன் டீ

காயங்களை வேகமாக குணபடுத்தும் சிறந்த மருந்தாக க்ரீன் டீ இருக்கிறது. தினமும் இரண்டு முறை க்ரீன் டீ குடிக்கும் போது உங்களின் காயம் குணமாகும் வேகத்தை நீங்களே உணரலாம், அதுமட்டுமின்றி இது பல தொற்றுநோய்களில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.

MOST READ: இந்த சூழ்நிலைகளில் இருக்கும் ஆண்கள் தவறே செய்யாவிட்டாலும் அவமானத்தை சந்திப்பார்கள் என்று சாணக்கியர்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் பல அதிசயங்களை நிகழ்த்தக்கூடும். சுடுநீரில் நன்கு குளித்த பிறகு ஆலிவ் எண்ணெயை காயத்தின் மீது தடவி அங்கு மசாஜ் செய்யவும். குளிக்கும் நீரிலும் ஆலிவ் எண்ணெயை கலந்து குளிக்கலாம் இது உங்கள் உடலு தூய்மைப்படுத்தும்.

உப்பு தண்ணீர்

உப்பு தண்ணீர்

உப்பில் தண்ணீரை கலந்து உங்கள் காயத்தின் மீது தடவுவதும் உங்கள் காயத்தை விரைவில் குணப்படுத்தலாம். இது உங்கள் காயத்தை உலர வைப்பதுடன் காயத்தில் சீழ் கட்டுவதை தடுக்கிறது. இதனை தினமும் 3 அல்லது 4 முறை செய்யவும்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயம் இயற்கையாகவே வெப்பத்தை உருவாக்கும் பொருள் என்று கருதப்படுகிறது. வெங்காயத்தை நறுக்கி அதனை அரைத்து காயத்தின் மீது பூசவும். இதனை 5 அல்லது 6 மணி நேரம் அப்படியே உலறும்படி விடவும். இது காயத்தில் இருக்கும் சீழை வெளியேற்றுவதுடன் காயத்தை வேகமாகவும் குணப்படுத்தும்.

பூண்டு

பூண்டு

பூண்டு ஒரு மிகசிறந்த மூலிகையாகும். பூண்டை நன்கு அரைத்து அதனை அடிபட்ட இடத்தில் பூசி சில மணி நேரம் காயவைக்கவும். இதனால் சில நிமிடங்களுக்கு எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாகலாம், ஆனால் இது நல்லதுதான் ஏனெனில் இது பாக்டீரியாக்களை அழிக்கும். காயத்தில் இருக்கும் சீழ் விரைவில் வெளியேறுவதை நீங்களே பார்க்கலாம்.

MOST READ: இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..!

நீரச்சத்துக்கள்

நீரச்சத்துக்கள்

அதிகளவு நீர் மற்றும் பழச்சாறு குடியுங்கள். இது உங்களுடைய உங்களின் உட்புற அமைப்புகளை சுத்தம் செய்வதுடன் உங்கள் உடலில் இருக்கும் நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது. இது உங்கள் காயத்தை உலர வைப்பதுடன் காயத்தையும் விரைவில் குணப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Powerful Home Remedies For Festering

Here are some of the powerful home remedies for festering.
Desktop Bottom Promotion