For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன உளைச்சல், மனச்சிதைவுக்கு நோய்க்கு வைட்டமின் பி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாமா?

ஸ்கிசோஃப்ரினியா எனும் மனச் சிதைவு நோய்க்கு வைட்டமின் பி மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் இயல்பாக பயன்பாட்டில் உள்ள மன நோய்க்கான மாத்திரைகளால் வரும் பக்கவிளைவுகளையும் வைட்டமின் பி கொண்டு உருவாக்கப்படும்

By Haribalachandar Baskar
|

உலகத்தில் எண்ணிடலங்கா பகுதி மக்கள் மனநலம் அல்லது உளவியல் சார்ந்த பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றனர். முன்பெல்லாம் நமது முன்னோர்கள் கல்வியறிவு இல்லாவிட்டாலும் எப்படி வாழ வேண்டும் என்னும் அரிய வழிகளைக் கற்றுத் தந்தார்கள்.

B Vitamins

கல்வியறிவு இல்லாவிட்டாலும் 4 அல்லது 5 மொழிகளில் புலமைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போதைய காலக்கட்ட இளைஞர்கள் சிறு சிறு பிரச்சினைகளைக் கூட சமாளிக்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனிமை:

தனிமை:

தனிமையாக உணர்கிறேன் என்ற சொல்லாடலை இப்போதெல்லாம் வெகு இலகுவாக கேட்டுவிட முடிகிறது. இந்த வார்த்தைகள் எல்லாம் சமூகக் கட்டமைப்பிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறோம் என்ற என்பது தான் நாம் எல்லோருக்கும் புரியவைக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது. வீடு, கார், பணம் எல்லாம் இருக்கிறது சந்தோசம் இல்லை என புலம்புகிறவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Most Read: தானியங்கி / கேரேஜ் கதவுகள் அடிக்கடி பழுதாகிறதா? இது தான் காரணம்

உங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் கொடுத்து விட்டீர்களா ?

உங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் கொடுத்து விட்டீர்களா ?

உங்கள் குழந்தைகளுக்கு தேவையானதையெல்லாம் கொடுத்து விட்டீர்களா என்றால் நிச்சயம் ஆம் என்று சொல்வீர்கள். நீங்கள் அவர்களுக்கு கல்வியை அளித்திருக்கலாம், அவர்களுக்கு பிடித்த ஆடைகளை வாங்கிக் கொடுத்திருக்கலாம் , பிடித்தவற்றை செய்திருக்கலாம் இது எல்லாம் இல்லாவிட்டாலும் குழந்தைகள் சந்தோசமாக இருந்துவிட முடியும். ஆனால் அன்பை பரிமாறிக் கொண்டீர்களா, சமுதாயத்தில் வாழக் கற்றுக் கொடுத்தீர்களா ? இந்தக் கேள்விக்கு மட்டும் தடுமாற்றத்துடன் கூடிய ஆம் என்ற பதிலைக் கூறுவீர்கள். இந்த தடுமாற்றத்திற்கான காரணம் என்ன?

நீங்களே காரணம்:

ஆரம்பம் முதலே ஒரு வித மனநெருக்கடியுடன் வாழப்பழகும் குழந்தைகள் சமுதாயத்தில் வளர்ந்து சமுதாயச் சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல் ஏற்றத் தாழ்வுகளை தனக்குள்ளே உருவாக்கிக் கொண்டு ஒரு வித மனநெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து தனக்கு பிடித்த மாரி உலகத்தை கட்டமைத்து தனது கற்பனை வாழ்க்கையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். இந்த நிலைக்கு உங்கள் குழந்தைகள் சென்றதற்கு நீங்களே காரணம்.

ஸ்கிசோஃப்ரினியா

ஸ்கிசோஃப்ரினியா

ஸ்கிசோஃப்ரினியா என்பது ஒரு வகையான மனசிதைவு நோயாகும். தனது எண்ண ஓட்டங்கள் இன்னவென்று பகுத்துக் கொண்டு சமுதாயத்தில் ஒரு சாதரண நபராக வாழமுடியாமல் மோசமான உணர்சிகளைக் கொண்டிருப்பவர்கள் ஸ்கிசோஃப்ரினியா நோயால் பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள் ஆவர்.

15-25 வயதில்

15-25 வயதில்

ஸ்கிசோஃப்ரினியா என்பது மனநோயின் கடுமையான அல்லது மிக மோசமான வடிவங்களில் ஒன்று. கடுமையான நோய் பாதிப்புக் கொண்டவர்களின் வாழ்க்கை சுழற்சி, எண்ணங்கள், முடிவெடுக்கும் திறன், உணர்வு, போன்றவற்றில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஏன் உங்களது ஆளுமையையே இதனால் இழக்க நேரிடலாம். பெரும்பால மக்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-25 வயதில் உள்ளவர்களைத் தான் தாக்குகிறது.

கற்பனை உலகம்:

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத ஒரு ஒலியை கேட்பார்கள், இல்லாத ஒன்றை கற்பனை செய்து பார்ப்பார்கள் அது மட்டுமில்லாமல் உங்களை யாரோ கட்டுப்படுத்துவது போல் உணர்வீர்கள்.

Most Read: இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா? நீங்களும் முயற்சி செய்யுங்கள்

டாக்டர் கூற்றுப்படி:

டாக்டர் கூற்றுப்படி:

ஸ்கிசோஃப்ரினியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் பி கொண்டு உருவாக்கப்படுகிற மாத்திரைகள் அவர்களை நோய் பாதிப்பிலிருந்து இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவுவதாக ஆய்வறிக்கைகளில் நிரூபிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சிகிச்சை முறைகள்

தற்போதைய சிகிச்சை முறைகள்

சாதரண பொதுமக்களுடன் ஒப்பிடுகையில் இந்த நோய் பாதிப்பு உடையவர்கள் இறப்பு விகிதத்தில் இரண்டு அல்லது மூன்று மடங்கு முன்னேறி இருக்கிறார்கள் மேலும் வாழ்க்கைச் சக்கரத்தில் 15 முதல் 25 ஆண்டுகளை தங்களது வாழ்நாளில் நோய் பாதிப்படைந்தவர்கள் இழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நோய்க்கான மருந்துகளாக மனநோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனோடு சேர்த்து பிசியோதெரபியைச் சேர்த்தோ அல்லது சேர்க்கமாலோ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இவ்வைகையான மருந்துகளை உட்கொள்கிறவர்கள் பக்க விளைவுகளைச் சந்திக்கிறார்கள். இந்த பக்க விளைவுகள் மிகவும் கவலையேற்படுத்தக்கூடிய, தாங்க முடியாததாகவும் மாறி விடுகிறது.

பக்கவிளைவுகளால் ஏற்பட்ட பொதுவான காரணிகளான நடுக்கம், போதை மருந்து தூண்டப்பட்ட பர்க்கின்சன்கள், அதிகப்படியான உமிழ்நீர், உயர் இதய துடிப்பு, மற்றும் வளர்சிதை மாற்ற அறிகுறிகள் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.

மூன்றில் ஒருவருக்கு இந்த வகையான மருந்துகளை உட்கொள்ளும் போது எந்தவகையான மாறுதல்களும் ஏற்படுவதில்லை.

வைட்டமின் பி ஏன் தேவை:

வைட்டமின் பி ஏன் தேவை:

வைட்டமின் பி மாத்திரைகள் அதிக அளவு அல்லது வைட்டமின்களின் கூட்டாக உருவாக்கப்படும் குறைந்த அளவுகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவ்வகை மாத்திரைகள் உளவியல் அல்லது மனரீதியான நோயின் அறிகுறிகளைக் பக்கவிளைவுகள் இல்லாமல் குறைக்கிறது.

வைட்டமின் பி கூடுதலாக பயன்படுத்தும் போது அதீத பயன்களை பெற முடிகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஓய்வின்மை மற்றும் விரும்பமில்லாத இயங்கங்களை பிரிடாக்சின் குறைக்கிறது.

ஃபோலோட்டுடன் கூடிய கோபாலமின் மனச்சிதைவு நோயின் எதிர்மறையான அறிகுறிகளிலிருந்து முன்னேற்றத்தை அளிக்கிறது.

பொதுவான மனச்சிதைவு நோய் சிகிச்சைகளுடன் ஃபோலிக் அமிலம் (2மிகி/நாள்), வைட்டமின் பி-6 (25மிகி/நா) வைட்டமின் பி-12 (400 மிகி/நா) போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.

Most Read: இப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க

மருத்துவ பரிசோதனைகள் :

மருத்துவ பரிசோதனைகள் :

ஸ்கிசோஃப்ரினியா நோய்க்கு வைட்டமின் -பி உதவுமா என்பதை ஒரு சீரற்ற பரிசோதனையின் மூலம் பாதிப்படைந்தவர்களுக்கு செயல்படுத்திப் பார்த்திருக்கிறார்கள். தங்களது முதல் பகுப்பாய்வில் 18 மருத்துவ பரிசோதனைகளில் 832 பேர் வைட்டமின் பி தொடர்பான மருந்துகளை எடுத்துக் கொண்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர்.

மேலும் இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவக் குழுவினர் ஊட்டச்சத்துகள் மனநலத்தை முன்னேற்ற எந்த வகையில் உதவும் என்பதை அறிய இன்னும் அதுகுறித்த ஆய்வுகள் தேவைப்படுகின்றன என கருத்துத் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்துகளைக் கொண்டு கொடுக்கப்படும் மருத்துவத்தின் விளைவாக ஏற்படும் மாற்றங்களில் மூளையின் செயல்பாடு குறித்த ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: treatment உணவு
English summary

B Vitamins Can Reduce Schizophrenia Symptoms

Vitamin B pills for the schizophrenia disorder also reduce the side effects of the naturally occurring mental illness pills. Doctors say further research has proven it.In this article we are sharing about b Vitamins can reduce schizophrenia symptoms. Read on.
Story first published: Monday, July 22, 2019, 12:31 [IST]
Desktop Bottom Promotion