For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்குளில் எந்த காரணமும் தெரியாமல் கட்டி இருக்கா? அப்போ இந்த அபாயம் கூட உங்களுக்கு ஏற்படலாம்!

|

பொதுவாக நம் உடலில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அதை பல முறை கவனிக்காமலே விட்டு விடுவோம். இது போன்ற அறிகுறிகள் உடலில் எண்ணற்ற மாற்றங்களை உண்டாக்கும். சில அறிகுறிகள் அபாயகர நோய்களின் தாக்குதலாகவும் இருக்க வாய்ப்புள்ளது. உடலில் உண்டாக கூடிய அறிகுறிகளுக்கும் சில வகையான நோய்களுக்கும் தொடர்புண்டு.

அக்குளில் எந்த காரணமும் தெரியாமல் கட்டி இருக்கா? அப்போ இந்த அபாயம் கூட உங்களுக்கு ஏற்படலாம்..!

குறிப்பாக அக்குளில் உண்டாக கூடிய அறிகுறிகள் மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அக்குளில் ஏற்படும் எந்தெந்த அறிகுறிகள் உங்களுக்கு மிக மோசமான ஆபத்தை உண்டாக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேமல்

தேமல்

அக்குளில் தேமல் போன்று வர தொடங்கினால் அதை சாதரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். இப்படிப்பட்ட தேமல்கள் பலவித பாதிப்புகளை உண்டாக்க கூடும். ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கிய இந்த அறிகுறிகள் பிறகு நோய் தொற்றாக மாறி விடும்.

வலி

வலி

மிக மோசமான அளவில் அக்குள் பகுதியில் வலி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். அதிக பளுவை தூக்கியதால் இப்படிப்பட்ட மோசமான நிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு கட்டிகள் உட்பகுதியில் இருப்பதாலும் இது போன்று ஏற்படலாம்.

MOST READ: ஆண்களே! உங்களின் இந்த உறுப்புகளை வைத்தே நீங்கள் எப்டிப்பட்டவர் என்பதை கண்டுபிடிக்கலாம்!

வீக்கம்

வீக்கம்

பலருக்கு அக்குளில் எதோ வீக்கம் போன்ற அறிகுறி தென்படும். அதன் பின்னர் தான் இது கட்டி என்பதே தெரிய கூடும். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாகவும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆதலால், இந்த வகை கட்டிகள் தோன்றினால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

வியர்வை

வியர்வை

அக்குளில் அதிக அளவு வியர்வை வெளியேறினால் அதனால் உங்களுக்கு நிச்சயம் ஆபத்து நேரலாம். இது ஹார்மோன் கோளாறாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இது சர்க்கரை நோயிற்கான அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

துர்நாற்றம்

துர்நாற்றம்

குளித்ததற்கு பின்னரும் உங்களின் அக்குளில் இருந்து துர்நாற்றம் வீசினால் உங்களுக்கு தைராய்டு ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகள் உடலில் இருக்க கூடும். மேலும், சிலருக்கு பழம் அழுகின நாற்றம் போன்றோ கெமிக்கல் சேர்ந்த நாற்றம் போன்றோ அடிக்க வாய்ப்புள்ளது.

அரிப்பு

அரிப்பு

அக்குளில் உள்ள முடிகளை அகற்றிய பின்னரும் உங்களுக்கு அந்த இடத்தில் அதிகமாக அரித்தால் அதற்கு காரணம் நீங்கள் பயன்படுத்திய ரேஸரில் இருந்த நுண் கிருமிகள் தான். இந்த கிருமிகள் தான் உங்களது இந்த நிலைக்கு காரணம்.

அதிக முடி

அதிக முடி

அக்குளில் அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்தால் அதற்கு மூல காரணமே ஹார்மோன் மாற்றம் தான். உடலில் ஒரு சில அந்தரங்க பகுதிகளில் இப்படி அளவுக்கு அதிகமாக முடி வளர தொடங்கும். இது சங்கடமான நிலையை உண்டாக்கி விடும் என்பதே நிதர்சனம்.

MOST READ: ஜாக்கிரதை! வீட்டில் உள்ள இந்த பொருட்கள் உங்களுக்கு பயங்கர அல்ரஜியை தரும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Armpit Signs That Can Indicate Health Issues

These armpit signs can indicate health issues.
Desktop Bottom Promotion