For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பென்சிலின் ஊசி உங்களுக்கு ஒத்துக்காதா? அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

|

நோய்கள் எப்படி விதவிதமாக வருகிறதோ அதற்கு தகுந்தாற் போல் மருத்துவ சிகிச்சையும் பெருகி வரத் தான் செய்கிறது. ஆனால் தவறான சிகச்சைகள் நமது உயிருக்கே உலை வைத்து விடும். அந்த வகையில் பார்க்கும் போது பென்சிலின் மருந்து எல்லாருக்கும் நன்மை அளிக்க கூடிய ஒன்றா? இல்லைங்க. இந்த பென்சிலின் மருந்தால் 95% மக்கள் அழற்சியால் பாதிப்படைகின்றனர் என்று ஆராய்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது. E மற்றும் IgE போன்ற ஆன்டி பாடிகள் இந்த உண்மையான அலற்சியை காட்டியது என்கிறது அதிர்ச்சி ரிப்போர்ட்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி தகவல்கள்

ஆராய்ச்சி தகவல்கள்

எர்ரி ஷெனோய், MD, PhD, ஹார்வார்ட் மருத்துவப் பள்ளியில் இணை பேராசிரியர் மற்றும் நோய்த்தடுப்புக் கட்டுப்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவரின் கூற்றுப்படி பென்சிலின் ஒவ்வாமை கொண்ட 20 பேர்களில் 9 பேர்களுக்கு ஏற்கனவே அழற்சி இல்லாமல் இருந்துள்ளது என்றும், பென்சிலின் உபயோகித்த பிறகு அழற்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்.

இந்த அழற்சியை தடுக்க மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சை, ஆன்டிபாயாடிக் எதிர்ப்பு மருந்து போன்றவை தேவைப்படுகிறது என்று மதிப்பீட்டாளரின் தலைவராக இருந்த எரிக் ஷேனாய் அவர்கள் ஜனவரி 15,2019 ல் வெளியிடப்பட்ட போஸ்டனின் மாசசூசெட்ஸ் ஜெனரல், அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் (JAMA) இதழில், தன் கருத்தை பென்சிலின் அழற்சி குறித்து வெளியிட்டுள்ளார்.

இந்த ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பிற்கான ஒப்புதலை மூன்று தொழில்முறை மருத்துவ நிறுவனங்கள் அளித்துள்ளன. அமெரிக்க ஒவ்வாமை ஆஸ்துமா, ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு , அழற்சி நோய்கள் சங்கம், மற்றும் அமெரிக்காவின் சுகாதார மருத்துவ நோய் சங்கம் ஆகியவற்றின் அகாடமிகள் இதை ஒத்துக் கொண்டு உள்ளது.

பென்சிலின் அலர்ஜி

பென்சிலின் அலர்ஜி

அமெரிக்க அழற்சிக்கான பல்கலைக்கழக கூற்றுப்படி 10% மக்கள் இந்த பென்சிலின் அழற்சியை கொண்டுள்ளனர் என்று கூறுகின்றது. அப்பொழுது அது வெறும் மருந்து அழற்சியாக மட்டுமே பார்க்க பட்டு வந்தது. ஆனால் தற்போது இது தவறான சிகிச்சை என்று புதிய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ' அலர்ஜி மற்றும் மருத்துவ இம்யூனாலஜி' என்ற ஐரோப்பிய ஆய்வில் 24 ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மக்களில் 95% மக்கள் பென்சிலின் மருந்தால் அழற்சியை பெற்றுள்ளனர். E மற்றும் IgE, ஆன்டி பாடிகள் இந்த உண்மையான அழற்சியை காட்டியது என்கின்றது அதிர்ச்சி ரிப்போர்ட்.

மாற்று மருந்துகள்

மாற்று மருந்துகள்

எனவே உங்களுக்கு பென்சிலின் அழற்சி இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டால் செபாலோஸ்போரின் போன்ற பீட்டா-லாக்டாம் மருந்துகள் பென்சிலின் அழற்சியை குறைக்க பரிந்துரைக்கப்படும். இவைகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளாக செயல்பட்டு தொற்று நோயுகளுக்கு பாதுகாப்பான சிகச்சை அளிக்கிறது.

MOST READ: இந்த 2019-ல் வண்டி வாங்க சிறந்த நாட்கள் இவைதான்... இதுல வாங்குங்க வண்டி அமோகமா இருக்கும்

பீட்டா-லாக்டாம் மருந்துகள்

பீட்டா-லாக்டாம் மருந்துகள்

பல பொது நோய்த்தொற்றுகளுக்கு இது சிறந்த ஒன்று. ஆனால் பீட்டா லாக்டாம் இல்லாத பென்சிலின் மருந்துகள் மோசமான விளைவை உண்டாக்கும் என்று ஷெனாய் கூறுகிறார்.

இது தான் அறுவை சிகிச்சையில் நோய்த்தொற்றை தடுக்க பயன்படுத்தும் முதல் ஆன்டிபாயாடிக் ஆகும். ஆனால் இதுவே நீங்கள் பென்சிலின் ஆன்டி பயாடிக் பயன்படுத்தும் போது அறுவை சிகிச்சைக்கு பிறகு மோசமான அழற்சியை உண்டாக்க நேரிடலாம் என்கின்றார் அவர்.

பாக்டீரியா தாக்கம்

பாக்டீரியா தாக்கம்

ஏன் இந்த பென்சிலின் அழற்சி ஏற்படுகின்றது என்று பார்த்தால் இந்த மருந்துகள் எல்லா பாக்டீரியாவை அளிப்பதில்லை, குறிப்பிட்ட பாக்டீரியாக்களை அளித்து தாக்கும் திறன் இல்லாமல் இருப்பதால் பாக்டீரியா பெருக்கத்தை பெரிதுபடுத்தி அழற்சியை உண்டாக்கி விடுகிறது என்று , எல். பிராங்க்ளின் அட்கின்சன், MD, அலர்ஜி மருந்து மற்றும்ஜான்ஸ் பால்டிமோரில் உள்ள ஹிப்பின்ஸ் மருத்துவம் பல்கலைக்கழக பேராசிரியர் கூறுகிறார். இந்த மருந்து பாக்டீரியா வளர்வதற்வான நிலைப்புத்தன்மையை ஊக்குவிக்கிறது என்கிறார்.

விளைவுகள்

விளைவுகள்

BMJ ல் ஜூன் 2108 ல் வெளியிடப்பட்ட அண்மைய UK ஆய்வில், பென்சிலின் ஒவ்வாமை காரணமாக நிறைய பேர்களுக்கு மெடிசில்லின்-எதிர்ப்பு Staphylococcus aureus (MRSA) மற்றும் 26% க்ளோஸ்ட்ரிடியம் மற்றும் அலற்சி போன்ற தீவிர பாதிப்புகள் உண்டாகி உள்ளது.

அதிக செலவுகள்

அதிக செலவுகள்

இந்த பென்சிலின் அழற்சியால் நோய் குறையாமல் அழற்சி அதிகரித்து இன்னும் நிறைய மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடும். இதனால் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள கூடும் என்று அட்கின்சன் கூறுகிறார்.

MOST READ: கர்ப்பமாக இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடலாமா? ஒருவேளை சாப்பிட்டா எப்படி சாப்பிடணும்?

தவறான கருத்துகள்

தவறான கருத்துகள்

மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் ஒரு ஒவ்வாமை நிபுணர் மற்றும் பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு மருத்துவ பள்ளியில் உதவி பேராசிரியர், கிம்ர்பெரி ப்ளூமெண்டால், எம்.எம். படி, என்பவர்கள் இந்த பென்சிலின் அழற்சி குறித்து மக்களிடையே தவறான எண்ணங்கள் நிலவி வருகிறது என்ற JAMA அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.

பல பென்சிலின் ஒவ்வாமைகள் குழந்தை பருவத்திலேயே கண்டறியப்பட வேண்டும். பென்சிலின் ஆன்டிபாயாடிக் மருந்துகள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று டாக்டர் ப்ளூமெண்டால் கூறுகிறார்.

சருமத் தடிப்புகள்

சருமத் தடிப்புகள்

பென்சிலின் அழற்சியால் சரும தடிப்புகள் போன்ற பாதிப்பு வருவது இயல்பான விஷயம். இது குறித்து மக்கள் பயப்படத் தேவையில்லை. 3-10% மக்களுக்கு இந்த மாதிரியான ரேஸஸ் வருகிறது. இதற்கு பிறகு மருந்துகளை தவிர்த்து கொள்ளலாம். அல்லது, ஸ்டெராய்டுகள் மூலம் எளிதான சிகச்சைகள் அளிக்கப்படும் என்கிறார் அட்கின்ஸன்.

இந்த மாதிரியான அறிகுறிகளை அழற்சி என்று கூற இயலாது. சில நேரங்களில் பக்க விளைவுகள், நோயாளிகளால் மருந்தை தாக்கிக் கொள்ள முடியாத தன்மை போன்றவை யாக இருக்கலாம் என்கின்றார் ப்ளூ மெண்தல்.

உண்மையான பென்சிலின் அழற்சி என்பது காலப்போக்கில் மாறாது. அு அப்படியே நீடிக்கும். ஆனால் சரும வடுக்கள், வீக்கம், தடிப்பு போன்றவை காலப்போக்கில் மாறலாம். காலப்போக்கில் நோயாளிகளால் பென்சிலின் மருந்தை தாக்கிக் கொள்ளக் கூடிய திறன் ஏற்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.

என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

எல்லா நோயாளிகளும், பெற்றோர்களும், குழந்தைகளுக்கும் மருத்துவரையை அணுகி பென்சிலின் தொடர்பான அழற்சி குறித்து கலந்துரையாடி கொள்ள வேண்டும் என்கிறார் DO, வடமேற்கு ஃபைன்பெர்க் சிகாகோவில் மருத்துவக் கல்லூரி, மற்றும் மறுஆய்வு ஆசிரியரான தெரேசா ரோவ் அவர்கள்.

அதே மாதிரி மருத்துவர்களும் இது ஒரு உண்மையான பென்சிலின் அழற்சியா என்பது குறித்து அவர்களுக்கு தகவல்களை வழங்க வேண்டும் என்கிறார்.

முன் பரிசோதனை

முன் பரிசோதனை

உங்கள் அழற்சி தாக்கத்தை குறித்து பரிசீலனை செய்ய பென்சிலின் முன்பரிசோதனை மேற்கொள்ளப்படும். இது ஜனவரி 15, 2019 அன்று அமெரிக்க மருத்துவ சங்கத்தின் ஜர்னல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட மற்றொரு கட்டுரையில் விவரிக்கப்பட்டது. இந்த முன் பரிசோதனை யில் ஒரு சிறிய ஊசி தோல் மீது சொருகப்பட்டு மருந்தை செலுத்தி பரிசோதினை செய்யப்படுகிறது. சோதனையின் முடிவு எதிர்மறையாக இருந்தால் பென்சிலின் மருந்தை வாய்வழி செலுத்தி இறுதி பரிசோதினை செய்யப்படுகிறது. பென்சிலின் அழற்சி இல்லை என்றால் மட்டுமே மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.

MOST READ: இந்த மிளகாயை எண்ணெயாக காய்ச்சி தலையில் தேய்ச்சா கண்டிப்பா முடி கடகடனு வளருமாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: allergy மருந்து
English summary

Are You Allergic to Penicillin?

Penicillin has been a go-to drug to clear up infections caused by bacteria. But some people get a bad reaction from taking it. Your immune system is supposed to fight off the bacteria that make you sick. But sometimes your body fights the medicine itself.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more