For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் மாதவிடாயின் போது வரும் ரத்தத்தின் நிறங்களை பற்றி சொல்லும் கதை...!

பொண்ணா பொறந்துட்டாவே அதிகம் சமாளிக்க வேண்டிய பிரச்சனைகளில் ஒன்று இந்த மாதவிடாய்தான். மாதம் ஒரு முறை அழையா விருந்தாளி போல வந்துவிட்டு சிலபல உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளை தந்துவிட்டு போ

|

பொண்ணா பொறந்துட்டாவே அதிகம் சமாளிக்க வேண்டிய பிரச்சனைகளில் ஒன்று இந்த மாதவிடாய்தான். மாதம் ஒரு முறை அழையா விருந்தாளி போல வந்துவிட்டு சிலபல உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளை தந்துவிட்டு போறதுதான் இந்த மாதவிடாயின் முக்கிய குறிக்கோளே..! இது இயற்கையான ஒரு நிகழ்வு என்பதால இதை பற்றி நாம்ம எதுவும் சொல்ல முடியாது. ஏன்னா பெண்களின் உடல் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதே இந்த மாதவிடாய் தான்.

health

அதுவும் அவர்களின் மாதவிடாயின் போது வெளிவரும் ரத்தத்தின் நிறுத்திற்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்குங்க...! என்ன கதைனு கேகுறீங்களா..? மாதவிடாயின் போது வெவ்வேறு விதமான நிறங்களில் இந்த ரத்தம் ஒவ்வொரு பெண்களின் உடல்,ஆரோக்கியம், மன நிலை இதன்படி ரத்தத்தின் நிறம் மாறக்கூடும். இது மாதவிடாய் பிரச்சனையாக கூட இருக்கலாம். எனவே பெண்களே உங்களுக்கு மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#நிறம் மாற காரணம்

#நிறம் மாற காரணம்

மாதவிடாய் ஏற்படும்போது வெளி வரும் ரத்தத்தின் நிறம் ஒவ்வொரு பெண்களின் உடலுக்கும் ஏற்றார் போல மாறுபடும். சில சமயம் இது "இர்ரெகுலர் பீரியட்ஸ்" பிரச்சனையாக கூட இருக்கலாம். இந்த வித நிறம் மாற்றத்திற்கு முதல் காரணம் "தைராய்டு " நோயே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எல்லா மாதவிடாய் கால ரத்த நிறத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. இனி அந்த ரத்தத்தின் வரலாற்றை பற்றி பார்ப்போம்.

#ஆரஞ்சு நிறம்

#ஆரஞ்சு நிறம்

இந்த ஆரஞ்ச் நிற ரத்தம் வர காரணம் செர்விக்கல் ஃப்ளுயட் அதனுடன் கலந்து இருப்பதாலே. அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்களாக கூட இருக்கலாம். இந்த நிற ரத்த போக்கு 10 நாட்கள் வரை நீடிக்கும். சில சமயங்களில் அந்த பெண் கர்பபமாக இருப்பதென்றலும் இந்த நிற ரத்தம் வரலாம். எனவே மருத்துவரை அணுகி பிரகனன்சி டெஸ்ட் எடுத்து கொள்வது சிறந்தது.

#சாம்பல் நிறம்

#சாம்பல் நிறம்

சாம்பலும் வெள்ளை நிறமும் கலந்த மாதிரி ரத்த போக்கு இருப்பது உங்கள் இனப்பெருக்க உறுப்புகளில் பாக்டீரியால் இன்பெக்ஷன் ஏற்பட்டிருப்பதாலே. நீங்கள் கர்ப்பமாக இருந்து இந்த வெள்ளை சாம்பல் கலந்த நிறத்தில் ரத்த போக்கு இருந்தால் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட போகிறது என்றே அர்த்தம். இது காய்ச்சல், இனப்பெருக்க உறுப்புகளில் வலி, மோசமான நாற்றம் போன்ற பல பாதிப்புகளை உருவாக்க கூடும்.

#நீல (அ) ஊதா நிறம்

#நீல (அ) ஊதா நிறம்

என்னது...நீல (அ) ஊதா நிறத்துல கூட ரத்தம் வருமான்னு ஆச்சரியத்தோடு கேக்குறீங்களா..? இதுவும் உண்மைதாங்க... ஆனால் இது போன்ற ரத்த போக்கு மிக சிலருக்கே ஏற்படலாம். இது பயப்பட வேண்டிய நிறம் அல்ல. உடலில் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன்கள் இருந்தால் இந்த நிறம் வரக்கூடும். இவர்கள் அதிக நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளை எடுத்து கொண்டதாலே இந்த நிற ரத்தம் வருகிறது.

#பிங்க் நிறம்

#பிங்க் நிறம்

பொதுவாக மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்போ அல்லது முடிய போகிறதென்றால் இந்த பிங்க் நிற ரத்த போக்கு இருக்க கூடும். சில நேரங்களில் இந்த பிங்க் நிற ரத்த போக்கு கம்மியான அளவில் ஈஸ்ட்ரோஜன்கள் இருப்பதை குறிக்கிறது. இந்த சிறிய அளவில் ஈஸ்ட்ரோஜன்கள் உங்கள் உடலில் இருந்தால் இது கர்ப்பம் ஆவதற்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.

#கருப்பு (அ) பிரௌன் நிறம்

#கருப்பு (அ) பிரௌன் நிறம்

மாதவிடாய் தள்ளி போனால் இது போன்ற கருப்பு (அ ) பிரௌன் நிறத்தில் ரத்தம் வெறியேறும். சில சமயங்களில் கருச்சிதைவு ஏற்பட போகிறது என்பதை உணர்த்தவும் இந்த நிறத்தில் ரத்தம் வெளியேறலாம். இது போன்ற ரத்த போக்கு குழந்தை பிறந்த முதல் 4 முதல் 6 வாரம் வரை கூட வரலாம். இருப்பினும் இதை பற்றி மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

#வெளிர்ந்த சிவப்பு நிறம்

#வெளிர்ந்த சிவப்பு நிறம்

மாதவிடாயின் போது இந்த வெளிர் சிவப்பு நிற ரத்தம் ஏற்பட்டால் சீரான உடல் ஆரோக்கியத்தை குறிப்பதாகும்.அதாவது, இதுவே சரியான மாதவிடாய் ரத்த போக்கின் நிறம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த நிற ரத்தம் அதிக நாட்கள் ஏற்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி தீர்வு கேட்க வேண்டும்.

#அடர் சிவப்பு நிறம்

#அடர் சிவப்பு நிறம்

மிகவும் அடர்ந்த சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுவது கருப்பபையில் சிறிது கூடுதல் நேரம் தங்கிவிட்டு ,பிறகு வெளி வந்தால் இந்த நிறம் வரும். மேலும் இரவு தூங்கி எழுந்திருக்கும் போது கருப்பையில் தங்கியுள்ள பழைய இரத்தம் வெளியேறினால் அது அடர் சிவப்பு நிறமாகவே இருக்கும். இந்த நிற இரத்த போக்கு அதிக நாட்கள் இருந்தாலே அது பிரச்சனையை தர கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Your Period Blood Color Tells You About Your Health

Black, Brown, Bright Red, and More: What Does Each Period Blood Color Mean?
Story first published: Thursday, July 19, 2018, 18:32 [IST]
Desktop Bottom Promotion