Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
முன்கூட்டியே விந்தணு வெளியேறுவதை தடுக்கும் முன்னோர்களின் ஆசன பயிற்சிகள்..!
இன்று பல ஆண்கள் பல வித பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். நோய்களின் தாக்கமும் முன்பை விட இப்போதெல்லாம் அதிகம் ஆகி கொண்டே இருக்கிறது. பல வகையில் குறைபாடுகளும் ஆண்களை வதைத்து கொண்டே இருக்கிறது. உடலில் இது போன்ற நோய்கள் வர சில முதன்மையான காரணங்கள் இருக்கிறது. உணவு பழக்கங்களில் சீர்கேடு, சுற்றுசூழல் குறைபாடு, இன்பமற்ற இல்லற வாழ்வு, அன்றாட செயல்கள்... இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

அந்த வகையில் ஆண்களின் பெரும் பிரச்சினையாக கருதப்படுவது விந்தணு குறைபாடு, ஆண்மை குறைபாடு, முன்கூட்டியே விந்து வெளியேற்றம், மலட்டு தன்மை போன்றவை இவற்றில் அடங்கும். இந்த பதிவில் முன்கூட்டியே விந்தணு வெளியேறுவதை தடுக்கும் சில முதன்மையான முன்னோர்களின் யோகா முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

விந்து வெளியேற்றமா..?
இன்று பெரும்பாலான ஆண்கள் இந்த விந்தணு பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக 30 சதவீத ஆண்கள் முன்கூட்டியே விந்தணு வெளியேறும் பிரச்சினையால் மிகவும் அவதிப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தனது இணையுடன் சேர்ந்த ஒரு சில நிமிடத்தில் விந்தணு வெளியேறி இல்லற வாழ்வில் திருப்தியை தராமல் போய்விடும். இதுவே பல்வேறு உறவு கசப்புகளை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருக்கிறது.

முன்னோர்களின் வைத்தியம்...
நம் முன்னோர்கள் பல வித உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு எண்ணற்ற வழி முறைகளை கையாண்டுள்ளனர். அவற்றில் ஒன்றுதான் இந்த யோகா முறையும். இவற்றில் செய்யப்படும் எல்லா வகையான பயிற்சிகளும் ஆண்களின் கோளாறுகளையும், குறைபாடுகளையும் எளிதில் தீர்க்க கூடியதாம்.

புஜங்காசனம்
இந்த பயிற்சி முறை நல்ல பாம்பு படமெடுப்பது போன்றதாகும். இது, ஆண்களின் பெரும்பாலான பிரச்சினைகளை விரைவில் குணப்படுத்த கூடியது. உடலின் தசைகளை இலகுவாக்கி ஆண்களின் குறைபாடுகளை முற்றிலுமாக நீக்கி விடக்கூடியது. அத்துடன் பிறப்புறுப்பில் அதிக பலத்தை இது ஏற்படுத்தும். மேலும், நல்ல பசியை தூண்டி இல்லற வாழ்வில் ஈடுபட, ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

பயிற்சி முறை...
இந்த பயிற்சியை செய்வதற்கு முதலில் குப்புற படுத்து கொள்ளவும். அடுத்து இரண்டு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக வைத்து கொண்டு தலை மற்றும் மார்பு பகுதியையும் சேர்த்து மேலே தூக்கி மூச்சை இழுத்து விடவும். அடுத்து இரு கால்களையும் மேலே தூக்கி மூச்சை இழுத்து விடவும். இவ்வாறு, தலையையும் காலையும் ஒரே நேரத்தில் தூக்கி மூச்சை இழுத்து விட்டால், முன்கூட்டியே விந்து வெளியேறுவதை தடுக்கலாம்.

பத கோணாசனம்
இந்த யோகா முறை கிட்டத்தட்ட பட்டாம்பூச்சியை போன்ற நிலையில் செய்ய வேண்டும். ஆண்களுக்கு இந்த ஆசனம் ஒரு சிறந்த வர பிரசாதம். மேலும், உடலின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இல்லற வாழ்வை இனிமையாக்கும். அத்துடன் விந்தணுவின் ஆரோக்கியத்தை கூட்டும்.

பயிற்சி முறை...
முதலில் இரு கால்களையும் நன்றாக நீட்டி உற்கார்ந்து கொள்ளவும். அடுத்து வலது காலை மடக்கி வைத்து கொள்ளவும். அதே போன்று இடது காலையும் மடக்கி வைத்து கொள்ளவும். இரு கால்களும் ஒன்றாக இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும். அடுத்து கை விரல்களை சேர்த்து பாதத்திற்கு அடியில் வைத்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் முதுகு எலும்பு நேராக இருக்க வேண்டும். இந்த ஆசனத்தில் 30 நொடிகள் இருக்கவும். அடுத்து நெற்றியை தரையில் வைக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து கொண்டு ஆரம்ப நிலையில் வர வேண்டும்.

மச்சியாசனம்
இந்த பயிற்சி முறை கிட்டத்தட்ட மீனை போன்ற தோற்றம் கொண்டது. இவை தசைகளை வலுப்படுத்தி அதிக ஆற்றலை தர கூடியதாம். குறிப்பாக விந்தணு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு இவை நிரந்தர தீர்வை தரும். மேலும், விந்து விரைவில் வெளியேறுவதை தடுக்கும்.

பயிற்சி முறை
முதலில் பத்மாசனத்தில் அமர வேண்டும். அடுத்து, வலது காலை இடது தொடையிலும் இடது காலை வலது தொடையிலும் வைத்து கொள்ள வேண்டும். பின், முழங்கைகளை பின்னல் எடுத்து சென்று மேல் நோக்கி, படுத்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, உடம்பின் மேற்பகுதியை தூக்கி தலையின் உச்சியை தரையில் வைக்க வேண்டும். இறுதியாக பழைய நிலையில் வர வேண்டும்.

தனுராசனம்
தனுராசனம் மிகவும் நலனை தர கூடிய ஒரு ஆசன முறையாகும். தனு என்பதற்கு "வில்" என்ற அர்த்தம் உண்டு. இந்த ஆசனம் செய்ய, வில்லை வளைப்பது போன்று நம் உடலையும் வளைக்க வேண்டும். இவை விந்தணுவின் ஆற்றலை அதிகரித்து, முன்கூட்டியே இவை வெளியேறுவதை தடுக்கும். இந்த ஆசனத்தை மெல்லமாக செய்து வரவும்.

பயிற்சி முறை...
இந்த ஆசன பயிற்சியை செய்ய முதலில் குப்பற படுக்க வேண்டும். அடுத்து இரண்டு கணுக்காலை கைகளால் பிடித்து கொண்டு, நெஞ்சை மேல் நோக்கி தூக்குமாறு செய்ய வேண்டும். இந்த நிலையில் மூச்சை இழுத்து வெளியில் விடவும். இவ்வாறு, வில்லை போன்று உங்கள் உடலை வளைத்து தொடர்ந்து காலை வேளையில் செய்து வந்தால் விந்துவின் நலன் பெருகும்.

சர்வங்காசனம்
சற்றே கடினமான ஆசன முறை, என்றாலும் இது எண்ணற்ற பலன்களை தர கூடியது. இவை விந்தணுவின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், தைராய்டு பிரச்சினைக்கும் சேர்த்தே தீர்வு தருகிறது. உடலின் மெட்டபாலிசத்தை செம்மைப்படுத்த இந்த பயிற்சி முறை மிகவும் உதவுகிறது.

பயிற்சி முறை...
விந்தணு முன்கூட்டியே வெளியேறுவதை தடுக்க, முதலில் முதுகு பகுதி தரையில் படுவது போல படுத்து கொள்ளவும். அடுத்து, உள்ளங்கை தரையை தொடுவது போல வைத்து கொள்ளவும். இந்த நிலையில் மூச்சை உள்ளே இழுத்து கொண்டு, உங்கள் முழு உடலையும் மேலே உயர்த்த வேண்டும். குறிப்பாக கழுத்து பகுதியையும், கால் பகுதியையும் இரு கைகளின் உதவியோடு கால்களை மேலே முடிந்த வரை உயர்த்தவும். பிறகு மூச்சை மெல்லமாக விடவும். இவ்வாறு செய்து வந்தால் ஆண்களின் இல்லற வாழ்வு இன்பம் பெரும்.

உட்தன் பாதாசனம்
பல வகையான ஆசன முறைகளில் முக்கிய ஆசனமாக இந்த உட்தன் பாதாசனம் கருதப்படுகிறது. இது உடல் உறுப்புகளை வலிமை பெற செய்து இல்லற வாழ்வில் இனிமையை ஏற்படுத்தும். அத்துடன் தசைகளுக்கு அதிக பயிற்சியை தந்து, ரத்த ஓட்டத்தை செம்மையாக வைத்து கொள்ளுகிறது. இந்த பயிற்சி முறை, விந்தணு முன்கூட்டியே வெளியேறுவதை தடுக்க கூடியது.

பயிற்சி முறை...
உட்தன்பதாசனாவை பயிற்சி செய்ய, முதலில் சமமான தரையில் மேல் நோக்கி படுத்து கொள்ளவும். அடுத்து, இரண்டு கால்களையும் மேலே தூக்கி 90 டிகிரி கோணத்தில் வைத்து கொள்ளவும். வேண்டுமானால், கைகளை தொடைகளில் வைத்து கொள்ளலாம். இந்த நிலையில், நிதானமாக மூச்சை இழுத்து வெளியே விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஆண்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications











