தூங்கும் போது உடலில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா? அப்ப தினமும் இத செய்யுங்க...

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையில் நீங்கள் இல்லையா? உடல் பருமன் பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? நீங்கள் ரொம்ப சோம்பேறியா? எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா?அப்படியெனில் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க முடியும் என்பது தெரியுமா? என்ன நம்ப முடியவில்லையா?

ஆம், உண்மையிலேயே நம் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை தூங்கும் போதே எரிக்க முடியும். அதற்கு வாழ்க்கை முறையில் ஒருசில மாற்றங்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். அத்துடன் ஒருசில உணவுப் பொருட்களை இரவு நேரத்தில் சாப்பிட வேண்டியதும் அவசியம். உங்களுக்கு தூங்குவது பிடிக்குமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை தவறாமல் பின்பற்றுங்கள். இதனால் நிச்சயம் உடலில் உள்ள அதிகளவு கொழுப்பைக் கரைத்து, சிக்கென்று மாறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நாள் முழுவதும் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை சிறியளவிலான உணவை சாப்பிட வேண்டும். உடலின் மெட்டபாலிச செயல்பாட்டிற்கு ஆற்றல் மிகவும் இன்றியமையாதது. இத்தகைய ஆற்றலை உணவுகளின் மூலம் தான் பெற முடியும். உங்களுக்கு இனிப்பு உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழலாம். ஆனால் சீஸ், வெண்ணெய், சாக்லேட் போன்றவற்றை விரல் நுனியளவிலும், சிக்கன்/மீன் போன்றவற்றை உள்ளங்கை அளவிலும் வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடலாம். வேண்டுமானால், இவற்றிற்கு சிறந்த மாற்று உணவுப் பொருளாக பேரிச்சம் பழம் அல்லது ஒரு துண்டு டார்க் சாக்லேட்டை சாப்பிடலாம்.

#2

#2

தூங்கும் போது உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க வேண்டுமானால், இரவு நேரத்தில் குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை எரிக்கும் உணவுகளைத் தேர்ந்தேடுத்து சாப்பிட வேண்டியது அவசியம். உங்களுக்கு அந்த உணவுப் பொருட்கள் எவையென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் கொழுப்புக்களைக் கரைக்கும் சத்துக்களான வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளது. வைட்டமின் சி கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஏனெனில் இந்த சத்து கொழுப்புக்களை வேகமாகக் கரைப்பதோடு, உடலில் இருந்தும் கெட்ட கொழுப்புக்களை வெளியேற்றும். எனவே நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுங்கள். இச்சத்துக்கள் கிரேப்ஃபுரூட், கொய்யா, எலுமிச்சை, சாத்துக்குடி, பப்பாளி மற்றும் தக்காளியில் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுப் பொருட்களை இரவு நேரத்தில் ஜூஸ் வடிவிலோ அல்லது அப்படியேவோ சாப்பிடுங்கள்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் தாவர வகை புரோட்டீனி உள்ளது. இந்த புரோட்டீன் செரிமானமாவதற்கு நீண்ட நேரம் ஆகும். இதனால் இது அதிகளவு கலோரிகளை எரிக்கப்படும். ஆகவே பருப்பு வகைகளை இரவு நேரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், அதனால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை வேகமாக குறையும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா? இதில் உள்ள கால்சியம் கொழுப்புச் செல்கள் உடைத்தெறியும். இதில் உள்ள கனிமச்சத்து உடலின் மெட்டபாலிசத்தை தூண்டிவிடும். அதோடு பாலில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இந்த காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உடலில் இன்சுலின் அளவை சீரான அளவில் பராமரிக்க உதவும். இத்தகைய பாலை ஒருவர் இரவில் படுக்கும் முன் தவறாமல் குடித்து வந்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, உடல் எடையை சீக்கிரம் குறைக்கும்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

முழு தானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை சீரான அளவில் பராமரித்து, கொழுப்பைக் கரைக்கும். முக்கியமாக இதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டும். இதன் விளைவாக அதிகப்படியான கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளை கரைக்கப்படும். எனவே முழு தானியங்கள் நிறைந்த கோதுமை, பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை போன்றவற்றை இரவு நேரத்தில் சாப்பிடுங்கள்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

காரமான உணவுகளை ஒருவர் இரவு நேரத்தில் சாப்பிட்ல், அது உடலின் மெட்டபாலிசத்தை தூண்டிவிடும். எனவே நீங்கள் இரவில் நல்ல சுவையான மற்றும் காரமான உணவை உட்கொண்டால், கவலைக் கொள்ளாமல் இரவில் நிம்மதியாக தூங்குங்கள். ஏனெனில் கார உணவுகள் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்களைக் கரைத்து, எடையைக் குறைக்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

இரவு நேரம் தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன் க்ரீன் டீயை ஒரு கப் குடித்தால், அதில் இருக்கும் வளமான அளலிவான ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாட்டை அதிகரித்து, எடையைக் குறைக்க உதவும்.

#3

#3

உடல் எடையைக் குறைப்பதில் ஒருவரது தூக்கமும் முக்கிய பங்கை வகிக்கிறது. அதிலும் ஒருவர் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் மற்றும் எவ்வளவு தரமான அளவிலான தூக்கத்தை மேற்கொள்கிறோம் என்பதும் அவசியம். ஒருவர் தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். குறிப்பாக எடையைக் குறைக்க நினைப்போர், மனதை ரிலாக்ஸாக வைத்து நல்ல தூக்கத்தை மேற்கொள்வதால், விரைவில் எடையைக் குறைக்கலாம்.

#4

#4

உடலில் உள்ள ஹார்மோன்கள் சரியாக செயல்படவும், கொழுப்புக்கள் சரியாக கரையவும் பளுத்தூக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும். ஒருவர் பளுத்தூக்கும் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, உடலில் அதிகளவு கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் எரிக்கப்படும். மேலும் ஒருவர் பளுத் தூக்கும் பயிற்சியை மேற்கொண்ட ஒரு மணிநேரம் கழித்தும், உடல் தொடர்ந்து கொழுப்புக்களைக் கரைக்கும். எனவே மாலை வேளையில் இந்த பயிற்சியை செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Would You Like To Burn Fat While You Sleep

Want to burn fat while you sleep? Read on to know more about it...
Story first published: Wednesday, February 14, 2018, 15:39 [IST]
Subscribe Newsletter