Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
விந்து எந்த நிறத்தில் வெளியேறினால் என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்... தெரிஞ்சிக்கோங்க..
விந்துவினுடைய நிறத்தை வைத்து எந்த மாதிரியான பிரச்சினைகள் உண்டாகும் என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது. இதை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு தெரியுமா ஆரோக்கியமான விந்து திரவத்தில் நிறம் என்னவென்று? இந்த விந்து திரவத்தின் நிறத்தை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை சொல்ல முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நம்மளின் ஆரோக்கிய பிரச்சினைகளை பொருத்து இந்த விந்து திரவத்தின் நிறமும் மாறுபடுகிறது. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

விந்து திரவம்
உடலுறுவின் போது வெளிப்படும் இந்த விந்து திரவத்தை வெளியேற்ற விரைகள், விந்தணு பை, புரோஸ்டேட், விந்து சுரப்பி இவைகள் இணைந்து செயல்படுகிறது. மஞ்சள் நிறத்தில் விந்து சுரப்பியால் விந்தணு திரவம் வெளியேற்றப்பட்டால் அதில் ப்ரக்டோஸ் மற்றும் இதர பொருட்கள் இருப்பதை காட்டுகிறது. இந்த பொருட்கள் தான் 70%அளவு விந்தணு திரவத்தில் கலந்துள்ளது. இதுவே உங்கள் விந்தணு திரவம் வெள்ளை நிறத்தில் இருந்தால் அதற்கு டைஹைட்ரோடெஸ்டிரோஸ்டிரன் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிற விந்து திரவத்தில் புரோட்டியோலைடிக் என்சைம், சிட்ரிக் அமிலம், கலக்டோஸ் பாஸ்படேஸ் அமிலம் போன்றவைகள் இருப்பதை காட்டுகிறது.

ஆரோக்கியமான விந்து திரவத்தின் நிறம்
நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் வெளிப்படும் விந்தணு சீரம் வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படும். இது ஆணுறுப்பிலிருந்து வெளியேற உடன் பார்ப்பதற்கு அடர்த்தியாக பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும். அடுத்த 30 நிமிடங்கள் இது அப்படியே நீர்மமாக மாறிவிடும் தன்மை கொண்டது. விந்தணு திரவத்தில் அதிகமான ப்ரக்டோஸ் இருந்தால் இனிப்பு சுவையுடன் இருக்கும்.

இதர நிறங்கள் மஞ்சள் நிற விந்தணு திரவம்
மஞ்சள் நிற விந்தணு திரவம் சாதாரண விஷயம் தான். பயப்படும் அளவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. ரெம்ப நாட்கள் வரை வெளியேற்றாத விந்தணு திரவம் சற்று மஞ்சள் நிறத்துடன் தான் காணப்படும். ஆண்களின் விறைப்புத்தன்மையின் போது சிறுநீர் பாதை அடைக்கப்பட்டு இருக்கும். எனினும் சில சமயங்களில் விந்தணு திரவத்தில் சிறுதளவு சிறுநீர் கலந்து வருவதால் இந்த நிறம் உண்டாகிறது.
பாதிப்பு
மற்ற நோய் பாதிப்பு காரணங்களாலும் மஞ்சள் நிற விந்தணு திரவம் வெளிப்பட வாய்ப்புள்ளது. லுகோசைட்டோஸ்பெர்மியா (அதிக அளவு வெள்ளையணுக்கள் இருப்பது), மஞ்சள் காமாலை இருந்தால் மஞ்சள் நிற விந்தணு திரவம் வெளிப்படும்.

பழுப்பு நிறம்
பிங்க் அல்லது ப்ரவுன் நிற விந்தணு திரவம் உங்கள் திரவத்தில் இரத்தம் கலந்து உள்ளதை காட்டுகிறது. இது புரோஸ்டேட்டில் ஏற்பட்டுள்ள அழற்சியால் ஏற்படலாம்.
பச்சை நிறம்
பச்சை நிறம் புரோஸ்டேட்டில் ஏற்பட்டுள்ள அழற்சியை குறிக்கிறது. எனவே உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை காட்டுகிறது. இதற்கு ஆன்டிபாடி மருந்துகள் அழற்சியை போக்க பயன்படுகின்றன. சில சமயங்களில் நாம் எடுத்துக் கொண்ட மருந்துகள், விட்டமின் மாத்திரைகள் காரணமாக கூட பச்சை நிறம் ஏற்படலாம்.

சிவப்பு நிறம்
இது உங்கள் விந்தணு திரவத்தில் இரத்தம் கலந்து இருப்பதை காட்டுகிறது. இதை ஹீமட்டோஸ்பெர்மியா என்கின்றனர். இது அபாயமான அறிகுறியும் கூட.
இதர பாதிப்பு
மற்ற நோய் காரணிகளால் கூட இந்த சிவப்பு நிற விந்தணு திரவம் வெளிப்படும். உடலுறவு வழியாக பரவிய நோய்கள், புரோஸ்டேட் பிரச்சினைகள், விந்தணு குழாயில், சுரப்பியில், விரைப்பையில் ஏற்பட்டுள்ள அழற்சி வீக்கம் காரணமாக ஏற்படலாம்.
மருத்துவரை அணுகுதல்
பல நேரங்களில் விந்தணு திரவத்தில் ஏற்படும் நிறம் தற்காலிகமானதாக இருக்கும். எனவே அப்படி இருந்தால் ஓரிரு நாட்களில் சரியாகி விடும். அதுவே இந்த பிரச்சினை உங்களுக்கு ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்தால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள். இது தவிர இந்த அறிகுறிகள் தென்பட்டாலும் மருத்துவரை அணுகுங்கள்

அறிகுறிகள்
சிறுநீரில் இரத்தம் கலந்து செல்லுதல்
அரிப்பு
உடலுறுவில் செளகரியமின்மை
காய்ச்சல்
சிகிச்சைகள்

மஞ்சள் நிறம்
உங்கள் விந்தணு திரவம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் மஞ்சள் காமாலை அல்லது ஏதேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள். இதற்கு ஆன்டி பாடிகள், ஆன்டி வைரல் மருந்துகளை பரிந்துரைக்கலாம். அதே மாதிரி உங்கள் துணைக்கும் தொற்று பரவுவதை தடுக்க தொற்று சரியாகும் வரை உடலுறுவில் ஈடுபடக் கூடாது என்று மருத்துவர்கள் வலியுறுத்துவார்கள்.

பச்சை நிறம்
இதில் புரோஸ்டேட் மற்றும் சுற்றியுள்ள திசுக்களில் ஏற்பட்டுள்ள அழற்சி யின் தீவிரத்தை பரிசோதிப்பார்கள்.
சிவப்பு நிறம் (ஹீமட்டோஸ்பெர்மியா)
இது அபாயமான அறிகுறி. உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இதற்கு 2 வாரத்திற்கு ஆன்டி பயாடிக் (டாக்ஸிசைக்ளின், ட்ரிமிதோப்ரைம், சல்போமெத்தாக்ஸோல், ப்ளுரோக்யூனோலோன்ஸ் மருந்துகள்) பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருந்துகள் புரோஸ்டேட் இரத்த குழாய் வழியாக ஊடுருவி சென்று அழற்சியை போக்குகிறது.



Click it and Unblock the Notifications