உங்க கிச்சன்ல இதெல்லாம் இருந்தா நீங்க வெயிட் போடவே மாட்டீங்க...

Written By: manimegalai
Subscribe to Boldsky

நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கும் நம்முடைய இந்த நவீன வாழ்க்கை முறைக்கும் இடையே சிறு வித்தியாசம் தான் உள்ளது. நம்முடைய முன்னோர்கள் தங்களுடைய எல்லா வகையான உடல்ரீதியான பிரச்னைகளையும் தாங்கள் உண்ணும் உணவின் மூலமாகவே சரிசெய்து கொண்டனர். ஆனால் நாமோ இன்றைக்கு நம்முடைய எல்லா பிரச்னைகளுக்கும் மருந்து சாப்பிடுகிறோம். அதாவது உணவே மருந்தாக இருந்த நம்முடைய பழக்க முறை தற்போது மருந்தே உணவாக மாறிவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல்பருமன்

உடல்பருமன்

இந்திய உணவு முறை மற்ற உலக நாடுகள் பார்த்து வியக்கும் வகையில் இருக்கிறது. ஆனால் மேலைநாட்டு உணவுக் கலாச்சாரத்தை உயர்ந்தது என்று எண்ணிக்கொண்டு, ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்துக்கு மாறிவிட்ட நம்முடைய நாட்டில் பெரும்பான்மை சதவீதம் பேர் உடல்பருமனால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

#3

#3

உடல்பருமன்தான் நம்முடைய உடலில் உண்டாகும் பெரும்பான்மையான பிரச்னைக்கு காரணம் என்பதைப் புரிந்து கொண்டாலே உங்களுக்கு உடல்பருமன் குறித்த பிரச்னையின் தீவிரம் புரியும். குறிப்பாக, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குப் பெரிதும் காரணமாக இருப்பது இந்த உடல்பருமன்தான். அந்த உடல்பருமனை எப்படித்தான் சரி செய்வது என்பது தானே உங்களடைய கேள்வி...

நோ டயட், நோ உடற்பயிற்சி

நோ டயட், நோ உடற்பயிற்சி

இதற்காக உடற்பயிற்சி, நடைபயிற்சி, வயிற்றைக் கட்டி டயட் இருப்பது போன்றவற்றையெல்லாம் இனி செய்ய வேண்டிய அவசியமில்லை. டயட், உடற்பயிற்சி எதுவுமில்லாமல் எப்படி எடை குறையும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு நம்முடைய கிச்சனில் இருக்கும் சில உணவுப்பொருள்களே போதும்.

கிச்சன் பொருள்கள்

கிச்சன் பொருள்கள்

நம்முடைய இந்தியர்களின் கிச்சனில் இருக்கும் சில உணவுப்பொருள்களே நம்முடைய உடல்பருமனாக விடாமல் காப்பாற்றி, நம்மை சிக்கென வைத்துக்கொள்ள உதவும். அப்படி உடலை சிக்கென வைத்துக் கொள்ள நம்முடைய முன்னோர்கள் என்னவெல்லாம் சாப்பிட்டார்கள் என்று தெரிந்துகொள்வோமா?

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பு இல்லாத இந்திய சமையலறையே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். இதில் வைட்டமின் ஏ, சி, பி, ஈ, பொட்டாசியம், கால்சியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. மேலும் மிக அதிக அளவிலான புரதமும் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், உடல் பருமன் உண்டாகாமல் தவிர்க்க முடியும். குறிப்பாக, பாசிப்பருப்பைச் சமைத்து சாப்பிடுவதைவிட, முதல்நாள் இரவு ஊறவைத்து முளைகட்டிய பயறுடன் காரட், பீன்ஸ், ஸ்பின்னாக் போன்ற காய்கறிகளுடன் லெமன் ஜூஸ் சேர்த்து காலையில் சாப்பிட்டு வரலாம். 100 கிராம் பாசிப்பயறில் 347 கலோரி கிடைக்கும்.

வால்நட்

வால்நட்

வால்நட் மூளை வளர்ச்சிக்கு உதவும் மிகச்சிறந்த உணவு. இதில் உயர்தர ஆன்டி ஆக்சிடண்டுகள்,ஃபோலேட் , ஒமேகா3 ஃபேட்டி ஆசிட், மாங்கனீசு, காப்பர், புரோட்டீன் ஆகியவை அடங்கியிருக்கின்றன. குறிப்பாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் சிறிது வால்நட் சாப்பிட்டு வருவது நல்லது. 10 கிராம் வால்நட்டிலிருந்து 65.4 கலோரிகள் பெற முடியும்.

ஸ்பின்னாக்

ஸ்பின்னாக்

வைட்டமின் கே, வைட்டமின் ஏ, ஃபோலேட், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம் என அத்தனை சத்துக்களும் அடங்கியது ஸ்பின்னாக். இது உடல்பருமனை குறைக்க உதவும் மிக முக்கிய உணவு.

100 ஸ்பின்னாக் = 23 கலோரிகள்

பாகற்காய்

பாகற்காய்

பாகற்காய் என்று சொன்னோலே பலருக்கும் கசக்கும். ஆனால் பாகற்காயில் மிக அதிக அளவு உள்ள பாஸ்பரஸ், ஜிங்க், பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். அதனால் உடலில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸ் உறிஞ்சப்படுகிறது. பாகற்காயில் 85 முதல் 90 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியிருப்பதால் இது உடல்பருமன் உண்டாவதைத் தடுக்கும்.

100 கிராம் பாகற்காய் = 34 கலோரி

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கும் உணவுகளில் மிக முக்கியமானது. பீட்ரூட் உடலில் உள்ள டாக்சினை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

100 பீட்ரூட் = 43 கலோரிகள்

பாதாம்

பாதாம்

பாதாம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருந்தால், அது அதிக பசியைத் தூண்டும். ஆனால் உடலுக்கு அது ஆற்றலைத் தராது. அதற்கு பதிலாக உடல்பருமனையே உண்டாக்கும். பாதாமில் உள்ள ஒமேகா3, ஒமேகா6, ஒமேகா9 ஆகியவை உடல்பருமனைக் குறைக்கும்.

10 கிராம் பாதாம் = 57 கலோரிகள்

ஆப்பிள்

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடமே போக வேண்டாம் என்று சொல்வார்கள். ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து அதிக நேரம் பசியைக் கட்டுப்படுத்தும். ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளில் 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. இது பெண்களுக்கு அன்றாட நார்ச்சத்தின் தேவையை 16 சதவீதமும் ஆண்களுக்கு 11 சதவீதமும் நிறைவடையச் செய்கிறது.

இது மெட்டபாலிசத்தை முறைப்படுத்தி உடல்எடையைக் குறைக்க உதவுகிறது.

100 கிராம் ஆப்பிள்= 52 கலோரிகள்

கருப்பு பீன்ஸ்

கருப்பு பீன்ஸ்

கருப்பு பீன்ஸில் புரோட்டீனும் நார்ச்சத்தும் மிக தாராளமாகக் கிடைக்கின்றன. அதோடு வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்திருக்கின்றன. அதனால் இது எலும்புகளை உறுதியாக வைத்திருக்க உதவும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, ஜீரணத்தை துரிதப்படுத்துகிறது.

100 கிராம் கருப்பு பீன்ஸ் = 339 கலோரிகள்

காலிஃபிளவர்

காலிஃபிளவர்

வைட்டமின் கே, தையமின், ரைபோஃபிளேவின், மக்னீசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், புரோட்டீன், மாங்கனீசு, பொட்டாசியம் என அத்தனை சத்துக்களும் நிரம்பியது தான் காலிஃபிளவர்.

100 கிராம் காலிஃபிளவர் = 25 கலோரி

பட்டை

பட்டை

பட்டை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இன்சுலின் சுரப்பை முறைப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. அதனால் நீங்கள் அன்றாடம் குடிக்கும் டீயில் ஒரு சிட்டிகை பட்டைத்தூளை சேர்த்துக் கொள்ளலாம்.

100 கிராம் பட்டை = 247 கலோரிகள்

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது நமக்குத் தெரியும். ஆனால் மஞ்சளில் உடல்எடையைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. கேன்சரை அடியோடு காலி செய்யும் மருந்தாக மஞ்சளை சொல்லலாம்.

100 கிராம் மஞ்சள் = 354 கலோரிகள்

முள்ளங்கி

முள்ளங்கி

முள்ளங்கியிலும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. ஒரு கப் முள்ளங்கியில் 3 கிராம் அளவுக்கு ஃபைபர் கிடைக்கிறது. இது கிட்டதட்ட ஒரு நாளின் நார்ச்சத்து தேவையை 12 சதவீதம் நிறைவு செய்கிறது.

100 கிராம் முள்ளங்கி = 15 கலோரிகள்

பூண்டு

பூண்டு

உயர் ரத்த அழுத்தத்தையும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும் அற்புத சக்தி பூண்டுக்கு உண்டு. உடல்எடையைக் கட்டுக்குள் வைக்க தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வரலாம். வாயுத்தொல்லையைத் தீர்க்கும். கேன்சரை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டது. நோய்த்தொற்றுக்களை தீர்க்கும்.

கொள்ளுப்பயறு

கொள்ளுப்பயறு

அதிக அளவு நார்ச்சத்தும் புரோட்டீனும் கொண்டது கொள்ளுப்பயறு. ரத்த சர்க்கரை அளவு அதிகமானாலே உடல்எடையும் தானாக ஏற ஆரம்பிக்கும். கொள்ளுப்பயறை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தாலே போதும் உடல்எடையில் நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

100 கிராம் கொள்ளுப்பயறு = 116 கலோரிகள்

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிட்டால் எடை கூடும் என்றுதானே இதுவரை நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல்எடை குறையும் என்ற உண்மை தெரியுமா உங்களுக்கு?... ஆம். வாழைப்பழம் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். எடையைக் கூட்டாது.

100 கிராம் வாழைப்பழம் = 89கலோரிகள்

தக்காளி

தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி உள்ளது. இது ஹார்மோனில் கலந்து வயிறை எப்போதும் நிறைவாக வைத்திருக்கச் செய்யும். தக்காளி விதை சிறுநீரகக் கல்லை உண்டாக்கும் என்று சொல்வார்கள். அதனால் விதைகளைத் தவிர்த்துவிட்டு பயன்படுத்தலாம். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் கேன்சர் உண்டாகும் வாய்ப்பைக் குறைக்கிறது.

100 கிராம் தக்காளி = 18 கலோரிகள்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் சமைக்கும்போது நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். டைப் 2 நீரிழிவைக் கட்டுப்படுத்தும். இதிலுள்ள பாலிஃபினைல் நோய்த்தொற்றுகளைத் தடுக்கும்.

100 கிராம் ஆலிவ் ஆயில் = 884 கலோரிகள்

முட்டைகோஸ்

முட்டைகோஸ்

முட்டைக்கோஸ் அதிக அளவு நார்ச்சத்தும் மிகக்குறைந்த அளவு கலோரியும் கொண்டது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. மெட்டபாலிசத்தை முறைப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. கூட்டு, பொரியல், சாம்பார், சாலட், ஜூஸ் என பல வழிகளில் முட்டைகோஸை உணவில் சேர்த்துக் கொள்ள முடியும்.

100 கிராம் முட்டைக்கோஸ் = 25 கலோரிகள்

முட்டை

முட்டை

முட்டையை ஊட்டச்சத்துகள் நிறைந்த பவர்ஹவுஸ் என்று சொல்லலாம். மிக மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய ஒன்று. முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் உள்ளதால் உடல்எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக முட்டையை தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

1 முட்டை = 78 கலோரிகள்

பிளாக் காபி

பிளாக் காபி

பிளாக் காபி உடல் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் என்று ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காபி மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். ஆனால் பால், சர்க்கரை சேர்த்துக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

1 கப் பிளாக் காபி = 2 கலோரி

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

அழகான வடிவமைப்பு, நிறமூட்டப்பட்ட உணவுகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், ரெடிமேடாகக் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளைத் தவிர்த்தாலே போதும் உடல்பருமன் பிரச்னையில் இருந்து நம்மால் எஸ்கேப் ஆகிவிட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 important weight loss foods in every indian kitchen

how to reduce weight from your kitchen
Story first published: Friday, March 2, 2018, 17:39 [IST]