For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்த விதைக்குள்ள தான் ஆண்மையைப் பெருக்கும் சக்தி அதிகமா இருக்காம்...

  By Gnaana
  |

  பூனைக்காலி விதையுடன் நெல்லிக்காய் தூளை சேர்த்து, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து, பனங்கற்கண்டு சேர்த்து தினமும் சாப்பிட, ஆண்மை குறைபாடுகள் விலகிவிடும். அதுமட்டுமல்ல. பார்கின்சன் சிண்ட்ரோம், எனும்நோயின் பாதிப்புகளை, நாம் சிலசமயம் நேரிடையாகக் கண்டிருக்கலாம்.

  velvet bean

  பேருந்து, இரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் வயதுமுதிர்ந்தசிலர், வேதனையான முகத்துடன் கைகள் நடுங்கியபடி அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கலாம், அவர்கள் பேச முயற்சித்தாலும், சிரமப்பட்டே பேசுவதைக்கண்டு, நாம் வருந்தியிருக்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  நடுக்குவாதம்

  நடுக்குவாதம்

  உடலின் மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து, உடல் இயக்கத்தை பாதிக்கும் வியாதி, கை கால் மற்றும் உடலில், நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. நாட்கள் செல்லச்செல்ல, உடல்நலத்தில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும், இந்த நடுக்குவாதம்.

  உலகில் கிட்டத்தட்ட பத்துமில்லியன் பேரை, பார்கின்சன் வியாதி பாதித்திருப்பதாக, உலக சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  நடுக்குவாதம் ஏற்பட காரணம்

  நடுக்குவாதம் ஏற்பட காரணம்

  பார்கின்சன் சிண்ட்ரோம் வியாதிக்கு, எந்தவொரு தனிப்பட்டகாரணமும், மேலைமருத்துவத்தில் கண்டறியப்படவில்லை, என்பதே உண்மை. இந்த வியாதியை ஓரளவே, குணப்படுத்தமுடியும் என்கிறது, மேலை மருத்துவம். கை, கால்கள் மற்றும் முகத்தில் சிலருக்கு நடுக்கமிருக்கும். செயல்களில் தடுமாற்றம் இருக்கும், கைகால் மற்றும் முதுகை எளிதில் அசைக்கமுடியாதபடி, அவை இருகியிருப்பதாக உணர்வார்கள். காரியங்களை ஒருங்கிணைப்பது, ஒருவிசயத்தில் முழுமையாக ஈடுபடுவது, மிகவும் சிரமம்தரும் ஒன்றாக, இவர்களுக்கு அமையும்.

  மூளையில் நியூரான் நரம்பு திசுக்கள், உடல் இயக்கம், மனநிலை, நோயெதிர்ப்பு போன்ற தன்மைகளை அதிகரிக்க பல என்சைம்களை உற்பத்திசெய்கின்றன. இதில், டோபாமைன் எனும் சுரப்பே, ஒட்டுமொத்த மனித உடலின் அசைவுகள் மற்றும் கைகால்கள் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.

  டோபாமைனை உருவாக்கும் நரம்புகளின் பாதிப்பால், சுரப்பு குறையும்போது, இயக்கத்தில் சிரமங்கள் ஏற்பட்டு, உடலில் நடுக்கம் ஏற்படுகின்றன. முன்னரெல்லாம், அறுபதுவயதுக்கு மேற்பட்டவர்களை பாதித்த இந்த நோய், தற்காலத்தில் நாற்பது வயதுள்ளவர்களுக்கும் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

  நடுக்குவாத பாதிப்புகள்.

  நடுக்குவாத பாதிப்புகள்.

  உடலின் ஒருபக்கத்தில் ஏற்படும் நடுக்குவாதம், நாளடைவில், மறுபக்கத்துக்கும் பரவி, மொத்தமாக உடல் இயக்கத்தை பாதித்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சிலருக்கு விரலில் நடுக்கம் ஏற்படும், சிலறுக்கு வாய் அல்லது கைகளில் நடுக்கம் ஏற்படலாம்.

  நடுக்கத்தால், செயல்களில் இருந்த வேகமும் துல்லியமும் குறையும். புருவத்தை உயர்த்தி, தூதுவிடுவது, சைகைகளால் இதயத்தை சுடுவதையெல்லாம், காண்பதுகூட, கடினமாகிவிடும். வழக்கமான பல் துலக்குவது, குளிப்பது, பேசுவது, நடப்பது போன்றவை, சிரமமாக இருக்கும். தசைகள் இறுகுவதால், கழுத்து, தோள்பட்டை, கால்கள் இறுகி, தரையில் கால்கள் பதியாததைப் போன்ற உணர்வுகள் ஏற்படும்.

  வாசனைகளை உணரமுடியாமல், தூக்கமின்மை, மனச்சோர்வு ஏற்பட்டு, மலச்சிக்கலால் அவதிப்படுவார்கள். மேலை மருத்துவத்தில், மருந்துகள் மூலம், இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம், முற்றிலும் குணமாக்க முடியாது, என்கிறார்கள்.

  தீர்வுகள் இல்லாத வியாதிகளே இல்லை, என்று உரைக்கும் நமது முன்னோர்கள் கடைபிடித்த, சித்தர்களின் மூலிகை வைத்தியத்தில், நடுக்குவாதத்திற்கு தீர்வுகள் உண்டா? காணலாம், வாருங்கள்.

  வியாதிகளை ஆராயும் முறை

  வியாதிகளை ஆராயும் முறை

  மனிதரின் இயக்கத்திற்கு உடலிலுள்ள பிராணவாயு முதல் காரணமாக இருந்தாலும், உடலில் வேறுபல வாயுக்களும் உள்ளன. அவற்றில் பல, வயிற்றுப்பகுதியில் உருவாகி, உடலிலிருந்து வெளியேறாமல், இரத்தக்குழாய்கள் வழியே மேல்நோக்கிச் செல்லும்போது, மாரடைப்பு முதல், ஸ்ட்ரோக் போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல், பசிக்காதபோது சாப்பிடுவது, சாப்பிட்டவுடனே தூங்குவது, பேராசைமிக்க செயல்கள் போன்றவற்றால், கெட்ட வாயுக்கள் உடம்பில் உற்பத்தியாகி, இரத்தத்தில் கலக்கும்போது, நடுக்குவாதம் போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன.

  பார்கின்சன் சிண்ட்ரோம்

  பார்கின்சன் சிண்ட்ரோம்

  நடுக்குவாதம் என்று அழைக்கப்படும் நரம்புமண்டல பாதிப்பு நோயை, பூனைக்காலி மூலிகையின் விதைகள் சரிசெய்யும். மூளை நரம்புமண்டலத்தில் சுரக்கும் டோபாமைன் உற்பத்தி குறைவதாலேயே, நடுக்குவாதம் ஏற்படுகிறது என மேலைமருத்துவம் ஆராய்ந்திருப்பதை, நாம் முன்னர் பார்த்திருந்தோம்தானே!

  நரம்புமண்டல இயக்கத்துக்கும், உடலின் செயல்பாட்டுக்கும் இன்றியமையாததாக விளங்கும், டோபாமைன் வேதிச்சத்து, பூனைக்காலி விதைகளில், செறிவாக இருக்கிறது. பூனைக்காலி விதைகளை தினமும் நீரிலிட்டு காய்ச்சி, கசாயம் போல குடித்துவந்தால், நடுக்கம் தந்த நடுக்குவியாதிகளுக்கு, உற்சாகமாக குட்பை சொல்லமுடியும் என்கிறார்கள் மூலிகை மருத்துவர்கள்.

  பூனைக்காலி மூலிகை.

  பூனைக்காலி மூலிகை.

  வெல்வெட் பீன் எனப்படும் பூனைக்காலி செடிகள், தமிழ்நாட்டின் வேலிகளில், சாலையோரங்களில், சாதாரணமாகக் காணப்படும் கொடிவகையாகும். இதன் மலர்கள், விதை, வேர் மற்றும் விதைகளை மூடியிருக்கும் சுனைகள் எனும் மெல்லிய முட்கள், மருத்துவ நன்மைகள் தரவல்லவை. பூனைக்காலி பூக்கள், வேர்கள் மற்றும் விதைகள் நரம்புகளை வலுவாக்கி, ஆண்மை பாதிப்புகளை சரிசெய்கிறது.

  மலச்சிக்கல்

  மலச்சிக்கல்

  சிறுபூனைக்காலி எனும் கொடிவகைகளில், அதன் பழம், சிறிதாக, இளமஞ்சள் வண்ணத்தில் காணப்படும். இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர, மலச்சிக்கல் பாதிப்புகள் விலகி, உடல் வலிமையாகி, நலமுடன் விளங்கும். கழற்சிக்காய், சிற்றாமுட்டி வேர் இவற்றை நன்றாக அரைத்து, பாலில் கலந்து சுண்டக் காய்ச்சி இரவில் குடித்துவர, மலச்சிக்கல் தீர்ந்துவிடும். கடுக்காய், சீந்தில் மொந்தம் வாழைப்பழமும் மலச்சிக்கலைப் போக்கும்.

  மூலிகைகளைக் கொண்டு, வயிற்றையும், பெருங்குடலையும் சுத்தம்செய்த பின்னர்தான், எந்த வியாதிக்கும் சிகிச்சைகள் அளிக்க வேண்டும். அப்படி அளித்தால்தான், வியாதி முற்றிலும் குணமாகும். மலச்சிக்கலுடன் அளிக்கும் சிகிச்சை, விழலுக்கு இரைத்த நீர் என்பார்கள், பெரியோர்.

  சர்க்கரை வியாதி

  சர்க்கரை வியாதி

  பூனைக்காலி விதைகளை தூளாக்கி, தினமும் காலையும், மாலையும் பாலில் கலந்து குடித்துவர, இரத்த சர்க்கரை அளவு சீராகி, சர்க்கரை பாதிப்புகள் சரியாகிவிடும்.

  பூனைக்காலி வேர்களை அரைத்து, வீக்கங்களின் மேல் வைத்துக்கட்ட, வீக்கங்கள் வடிந்துவிடும்.

  ஆண்மை விருத்திக்கு

  ஆண்மை விருத்திக்கு

  பூனைக்காலி விதைப்பொடி, அஸ்வகந்தா பொடி இவற்றை பாலில் கலந்து, பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் இரவில் குடித்துவர, நரம்புகளில் இருந்த பலவீனம் விலகி, கைகால்களின் நடுக்கம் தீரும். பக்க வாதமும் குணமாகும். ஆண்மை பெருகும்.

  பூனைக்காலி விதை, ஜாதிக்காய், திப்பிலி, நிலப்பனங்கிழங்கு, கசகசா இவற்றை தூளாக்கி, பாலில் கலந்து வேகவைத்து, நெய்யை சேர்த்து, ஆறவைத்து, அதில் தேனைக் கலந்து, தினமும் குடித்துவர, உயிராற்றல் அதிகரிக்கும். பூனைக்காலி விதையுடன் நெல்லிக்காய் தூளை சேர்த்து, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து, பனங்கற்கண்டு சேர்த்து தினமும் சாப்பிட, ஆண்மை குறைபாடுகள் விலகிவிடும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  velvet bean- cure parkinson's syndrome and other illness

  While there are many medically approved dopamine replacement drugs available for people affected by Parkinson’s disease, there also are more natural sources.
  Story first published: Monday, April 9, 2018, 14:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more