கார்ப்பரேஷன் தண்ணி கலங்கலா வருதா? இந்த கொட்டைய அதுல போடுங்க... தண்ணி சுத்தமாகிடும்...

Posted By: Sadhishkumar T
Subscribe to Boldsky

வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு, ஈயசொம்பில் தண்ணீர் தந்து, வரவேற்கும் பாரம்பரியம் இருந்த தமிழகத்தில், இன்று, வருபவர் தண்ணீர் வேண்டும் என்று கேட்டால்கூட, யோசித்து, அதோ கேன் இருக்கு, என்று கைகாட்டி ஒதுங்கும் விருந்தோம்பல் மற்றும் பாரம்பரியம் மறந்த நிலையில், இன்று வாழ்ந்து வருகிறோம்.

health

எங்கும் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தால், கலங்கிய நீர் நிரம்பிய கல் குவாரிகளிலும், வறண்ட ஏரிகளின் மிச்சமிருக்கும் பாசி படர்ந்த நீரையும், நகரங்களின் குடிநீர்த் தேவைக்காக, கோடைக்காலங்களில் உறிஞ்சி எடுத்துவிடுகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாசு கலந்த நீர்

மாசு கலந்த நீர்

அவசரகதியில் சுத்திகரிக்கப்பட்ட நீரை, நேரடியாக குடிநீர்த்தேவைக்கு பயன்படுத்த, பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். இதுபோன்ற நீரை சமைக்கப் பயன்படுத்த முடியுமா? தற்கால உணவுகளில் உரங்கள், கெமிக்கல் பாதிப்பு மற்றும் கலப்படங்கள் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் நாம் பருகும் இயற்கை குடிநீரிலும் மாசுக்கள் கலந்து, நம் உடல் ஆரோக்கியத்தை பெரிதும் கெடுக்கின்றன.

சுகாதாரமில்லாத கேன் பாட்டில் குடிநீர்

சுகாதாரமில்லாத கேன் பாட்டில் குடிநீர்

நகரங்களில், குடிநீர்த் தேவை பெரும்பாலும், மினரல் வாட்டர் எனப்படும் கேன்கள் மூலம் நடக்கின்றன. இந்த கேன் தண்ணீரில், என்ன இருக்கிறது? அவற்றில் மினரல்கள் இருக்கிறதா? சுத்தமானதா? என்றால், ஒன்றுமில்லை என்பதே, பெரும்பாலானோரின் பதிலாக, இருக்கும். கேன் மற்றும் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீருக்கு, ஏராளமான தரக்கட்டுப்பாடுகளும், சோதனைகளும் உள்ளன, ஆயினும், நமது நாட்டில் அதையெல்லாம், பொருட்படுத்துவார்களா என்ன?

தண்ணீ விற்பனை

தண்ணீ விற்பனை

தண்ணீரை முறையாக சுத்திகரித்து, தூய்மையான கேன்களில் நிரப்பி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, கேன்களை மாற்றவேண்டும். அழுக்கான கேன்களில் நிரப்பப்படும் நீரே, எங்கும் விநியோகிக்கப்படுகிறது. தூய்மையில்லாத கேன்களில் அடைக்கப்படும் முழுவதும் சுத்திகரிக்கப்படாத தண்ணீர், கொள்ளை இலாபத்துக்கு விற்கப்படுகிறது.

கார்ப்பரேஷன் வாட்டர்

கார்ப்பரேஷன் வாட்டர்

சிலர், கேன் தண்ணீர் வேண்டாம், நாங்கள் கார்ப்பரேஷன் நீரைக் காய்ச்சி குடித்துக் கொள்கிறோம் என்று சொன்னாலும், சமயங்களில் கலங்கலாக, மாசுக்களுடன் வரும் அந்த நீரைக்கண்டு, இதை எப்படி குடிப்பது என்று, அதிர்ந்துபோய் நிற்பார்கள். இந்தத்தொல்லைகளே வேண்டாம் என்று கிணற்று தண்ணீர் அல்லது அடிபம்பில் தண்ணீரைப் பிடித்து, பயன்படுத்த எண்ணினாலும், அவற்றின் இரும்பு வாடை, தண்ணீரைப் பருகவிடாமல் தடுக்கும். இதுபோன்ற பாதிப்புகளுக்கெல்லாம் என்ன தீர்வு?

தீர்வு

தீர்வு

இயற்கை வளம் மிகுந்திருக்கும் நம் நாட்டில், எந்தவித தண்ணீரால் உண்டாகும் பாதிப்புகளையும், அதிக செலவின்றி, இயற்கை முறைகளிலேயே, நூறு சதவீதம், சுத்தமான குடிநீராக மாற்றி நம்மால் பயன்படுத்த முடியும். அப்படித்தான் நம்முடைய முன்னுார்குள் ஏரி, குளங்களில் கலங்கிய நீரை கொண்டு வந்து சத்திகரித்து பயன்படுத்தினார்கள்.

தேற்றான்கொட்டை

தேற்றான்கொட்டை

மனிதர்களுக்கு சிறந்த நற்பலன்களைத் தரும் மரங்களைப் பாதுகாக்க, முன்னோர்கள் அவற்றையெல்லாம், கோவில்களின் தல மரங்களாக வளர்த்து, இறைவனுக்கு நிகராக காத்து வந்தனர். அதுபோன்ற ஒரு மரம்தான், தேற்றான் மரம். முற்காலத்தில், தேற்றான்கொட்டை மரங்கள் நிறைந்த காடாக இருந்த இடம் கூட இருக்கிறதா என தெரியவில்லை.

பிரம்பபுரீஸ்வரர்

பிரம்பபுரீஸ்வரர்

திருக்குவளை எனும் சிற்றூரில் அமைந்துள்ள சிவன் கோவிலின் தலமரமாகத் திகழும் தேற்றான்கொட்டை மரத்திற்கு, கதலிகம், பிங்கலம் என்று வேறு பெயர்களும் உண்டு. திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், திருவாரூரில் இருந்து, வேதாரண்யம் செல்லும் கிளைச்சாலையில் உள்ளது.

சுத்திகரிப்பு முறை

சுத்திகரிப்பு முறை

பளபளக்கும் செழுமையான இலைகளுடன், அடர் பச்சை வண்ணக் காய்களுடன் காணப்படும் தேற்றான்கொட்டை மரங்கள், மலைகளிலும் காடுகளிலும் வளரும் தன்மைமிக்கவை. நீர்நிலைகளின் ஓரமாகவும், அதிகம் வளர்ந்திருக்கும். மக்களின் குடிநீருக்கு, நீர்நிலைகளே பயன்பட்ட காலத்தில், சேறுடன் கூடிய கலங்கிய குளங்களின் நீரை, தேற்றான்கொட்டை கொண்டே, தெளியவைத்து, உபயோகிப்பர்.

குடிநீர்ப் பஞ்சம் அதிகமாக உள்ள இடங்களில் இன்றும், மண்பாண்டங்களில் தேற்றான்கொட்டை விதைகளை இழைத்து, நீரை நிரப்பி, தெளியவைத்து, குடிப்பார்கள். தரமற்ற கேன், பாட்டில் குடிநீரைக் குடிப்பதைவிட, கார்ப்பரேஷன் வாட்டரில், கேற்றான்கொட்டைகளை இழைத்து, நீரை சுத்தமாக்கி, பயப்படாமல் குடிக்கலாம்.

மற்ற வேர்கள்

மற்ற வேர்கள்

செம்பு, வெண்கலப் பானை அல்லது மண் பானைகளில், சுத்திகரித்தத் தேவையான நீரை ஊற்றி, தேற்றான்கொட்டையை அம்மியில் இழைத்து, அதை நீரில் இடவேண்டும். சிறிதுநேரத்தில், தூய்மையான குடிநீர், குடிக்க சுவையாக இருக்கும்.

இதில், விளாமிச்சைவேர், வெட்டிவேர் போன்ற மூலிகைகளையும் இட்டுவைக்க, உடலுக்கு நன்மை தரும் தாதுக்கள் நிறைந்த சுத்தமான, சுவையான குடிநீர் தயார்.

செம்பு, வெண்கலம் போன்ற பாத்திரங்கள், கிருமிகளை அழிக்கும் தன்மைமிக்கவை. விளாமிச்சை, வெட்டிவேர், நீரின் நச்சுக்களை நீக்கி, நீரைத் தூய்மையாக்கும். தேற்றான்கொட்டை மாசுக்களை நீக்கி, நீரைத் தெளிவித்து, சுவைமிக்கதாக்கும்.

கிணற்று நீரைத் தெளிய வைக்கும், தேற்றான்கொட்டை

கிணற்று நீரைத் தெளிய வைக்கும், தேற்றான்கொட்டை

பாழடைந்த கிணறுகள் அல்லது நீர்நிலைகளில் உள்ள நீர் கலங்கி, துர்நாற்றம் வீசும், நெல்லி, வெட்டிவேர், நன்னாரி, கோரைக்கிழங்கு, பீர்க்கைநார், ஏலக்காய் இவற்றை இடித்து அத்துடன், தேற்றான்கொட்டையை தூளாக்கி, நீரில் தூவ, உப்புத்தன்மையுடன் நாற்றமெடுத்த நீர், தெளிந்து, குடிக்க ருசியாக இருக்கும்.

தேற்றான்கொட்டை, அசுத்தமான நீரையும், சுத்தம் செய்து, குடிநீராக மாற்றிவிடும்.

கரு உண்டாதல்

கரு உண்டாதல்

இந்த தேற்றான் கொட்டைக்கு கருத்தரித்தல் பாதிப்பைப் போக்கி, குழந்தைப்பேற்றை அடையவைக்கும் ஆற்றல் மிக்கது. தாம்பத்திய வாழ்வில் ஈடுபடமுடியாமல் தவிக்கும் பலகீனமான ஆண்களுக்கு, உறுதுணையாக இருக்கும்.

உடல் வற்றியிருப்பவனையும், பலசாலியாக்கும் மாமருந்து. தாம்பத்திய வாழ்வை சிறப்பாக்கி, குழந்தைப் பேற்றை தரும் தேற்றான்கொட்டை.

மன வாழ்க்கையின் தற்கால விரிசல்களுக்கு, பெரும்பாலும், தாம்பத்திய குறைபாடுகளே, வெளியில் தெரியாதக் காரணங்களாக அமைகின்றன. உடல் பலகீனம், மனதை சோர்வாக்கி, பலரை குற்றஉணர்வில் நடைப்பிணமாக்கி விடுகிறது.

மெலிந்த உடல் தேற

மெலிந்த உடல் தேற

நாவல்பழங்கள் போல கருமையான தேற்றான் பழங்களின் கொட்டைகள், அனைத்து உடல் பாதிப்புகளையும் போக்கும் தன்மைமிக்கவை. மெலிந்த உடலையும், பெருக்க வைக்கும் ஆற்றல் மிக்கது.

தேற்றான்கொட்டை சூரணம்

தேற்றான்கொட்டை சூரணம்

தேற்றான்கொட்டை சூரணம், திரிபலா சூரணம், திரிகடுகம் சூரணம், சீரகத்தூள், சித்தரத்தைத் தூள் இவற்றை இளஞ்சூடான பாலில் கெட்டியாகக் கலக்கி, கருப்பட்டி அல்லது வெல்லப்பாகில், சேர்த்து நன்கு கிளறி, நெய் விட்டு, இலேகியம் போல வந்ததும் இறக்கி, ஆற வைத்து, தேன் சேர்த்து, பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் இருவேளை சுண்டைக்காய் அளவு சாப்பிட்டுவர, உடல் சதைப்பற்றுடன் வலுவாகும்.

சிறுநீர் பிரச்சனை

சிறுநீர் பிரச்சனை

தேற்றான்கொட்டை சூரணத்தை, நீரிலிட்டு சூடாக்கி, பாலில் கலந்து குடித்தால், அடிக்கடி யூரின் போவதால், வீக்கான உடல் நலமாகி, தூங்கமுடியாமல் இருந்தநிலை மாறி, நல்ல தூக்கம் வரும். இதுவே, உடல் சூடு, நீர்க்கடுப்பு, பெண்களின் வெள்ளைப்படுதல், மூலம் போன்ற கோளாறுகளை சரிசெய்யும் அத்துடன் உடலையும் வலுவாக்கும்.

விந்து உற்பத்தி

விந்து உற்பத்தி

உயிரணு குறைபாடு அல்லது விருப்பமில்லாமை என்று காரணங்கள் எதுவானாலும், அதை சரிசெய்ய சிலர் எந்த சிகிச்சையும் எடுப்பதில்லை. இதற்கெல்லாம் தீர்வாக, தேற்றான்கொட்டை, மாமருந்தாக அமையும்.

தேற்றான்கொட்டை சூரணம், முருங்கைப்பட்டை சூரணம், சந்தனம், பூனைக்காலி விதை சூரணம், ஜாதிக்காய் சூரணம் இவற்றை பாலில் இட்டு கலக்கி, கருப்பட்டி சேர்த்து, இருவாரங்கள் குடித்துவர, உயிரணுக்கள் அதிகரித்து, வீரியமாகி, தாம்பத்ய ஈடுபாடும், குழந்தைப் பேறும் உண்டாகும். உடல் சூடும் தணிந்து, உடல் வளமாகும்.

பெண்களின் மகப்பேறின்மை பாதிப்பை குணப்படுத்தும், தேற்றான்கொட்டை.

பெண்களின் மகப்பேறின்மை பாதிப்பை குணப்படுத்தும், தேற்றான்கொட்டை.

பெண்களின் குழந்தைப் பேறு குறைபாட்டுக்கு, அவர்களின் கருப்பை நாள அடைப்பும், வீக்கமும் காரணமாகின்றன. இதனால், உயிரணுக்கள், கருமுட்டைகளை அடையமுடியாத நிலை ஏற்பட்டு, கருத்தரிக்க முடியதில்லை.

தேற்றான்கொட்டை சூரணம், முருங்கைப்பட்டை சூரணம் போன்றவை, பெண்களின் இதுபோன்ற பாதிப்பைக் களைந்து, மகப்பேற்றை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

usage and benefits of thetraankottai

thetraankottai is a natural water purifier. it helps to weigh gain also. our previous generation people they didnt use aqua purifyer. they are using these kinds of natural sources.
Story first published: Thursday, March 15, 2018, 19:00 [IST]