Latest Updates
-
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
காலையில் சீக்கிரம் எழுவதற்கான எளிய வழிகள்
ஒருநாளின் வெற்றி என்பது அன்று நாம் செய்து முடிக்கும் காரியங்களில் மட்டுமல்ல. வெற்றிகரமான ஒரு நாளை துவங்குவதென்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு முதலில் காலை சீக்கிரமாக எழ வேண்டும். அதற்கான குறிப்புகளை இங
இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று காலையில் நினைத்த நேரத்தில் எழுவது. ஏனெனில் இரவு முழுவதும் அவர்களின் உயிர் நண்பனான இணையத்தில் செலவழித்துவிட்டு காலையில் எழ முடியாமல் அழுதுகொண்டே எழுந்து அன்று நாள் முழுவதும் தூங்கு வழிந்து கொண்டே இருக்கின்றனர். இன்றய இளைஞர்கள் ஆறு மணி வரை முழித்திருக்க சொன்னால் மகிழ்ச்சியாய் செய்வார்கள், ஆனால் ஆறு மணிக்கு எழுந்திருக்க சொன்னால் அழவே தொடங்கிவிடுவார்கள்.

ஒருநாளின் வெற்றி என்பது அன்று நாம் செய்து முடிக்கும் காரியங்களில் மட்டுமல்ல. வெற்றிகரமான ஒரு நாளை துவங்குவதென்பது அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில் நம்மில் பெருபாலானோர் காலையில் எழ நினைக்கும் நேரம் ஒன்று ஆனால் எழும் நேரம் ஒன்று. எனவே நமது முதல் இலக்கே தினமும் தோல்வியில்தான் முடிகிறது என்னும்போது எவ்வாறு அந்த நாளை வெற்றிகரமான நாள் என கூற இயலும். காலையில் சீக்கிரம் எழுவதற்கான சில காரணங்களை இங்கே பார்க்கலாம்.

ஒரே நேரத்தை கடைபிடித்தல்
தினமும் ஒரே நேரத்தில் எழுவதை எப்படியாவது வழக்கமாக கொள்ளுங்கள். அதற்காக தினமும் 8 மணிக்குத்தான் எழுவேன் என்று அடம்பிடிக்காதீர்கள். சீக்கிரம் எழ முயலுங்கள். ஆறு மணிக்கு காலை ஏல வேண்டுமென்றால் அதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியமாகும். இரவு சீக்கிரம் படுத்தால் காலை உங்கள் உடல் தானாகவே சீக்கிரம் எழ பழகிவிடும். அதேபோல சீக்கிரம் படுக்கவேண்டும் என்று படுக்கையில் படுத்துவிட்டு செல்போனை பயன்படுத்தி கொண்டிருக்காதீர்கள். தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு செல்லுங்கள்.

அவசியம் உணர்தல்
ஆரோக்கியத்திற்காக மட்டுமில்லாமல் நீங்களாகவே காலையில் சீக்கிரம் எழுவதற்கான காரணத்தை உருவாக்குங்கள். அவை உடற்பயிற்சி, காலை நேர அமைதி, சூரிய உதயம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு பிடித்த காரணமாக இருக்க வேண்டும். உங்களுக்கான காரணத்தை இன்றே தேட தொடங்குங்கள்.

மெதுவாக தொடங்குங்கள்
இப்பொழுது நீங்கள் தினமும் 8 மணிக்கு எழுகிறீர்கள் என்றால் திடீரென உங்களை 5 மணி எழ சொன்னால் உங்கள் உடலும் சரி, மனதும் சரி அதற்கு ஒத்துழைக்காது. எனவே கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டே வாருங்கள். முதல் வாரம் 7:30 பின்னர் அடுத்த இரண்டு வாரம் 7:ஊ என குறைத்து கொண்டே வந்தால் சில வாரங்களிலியே நீங்கள் நினைக்கும் நேரத்தை அடைந்து விடலாம்.

அலாரம்
இது காலம் காலமாக வெறும் சடங்காகவே இருந்து வரும் ஒரு முறையாகும். ஆனால் இதனை உபயோகமாக மாற்ற சில வழிகள் இருக்கிறது. நீங்கள் எழ நினைக்கும் நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே அலாரத்தை வைத்து விடுங்கள். நீங்கள் எழும் நேரத்திற்கும் ஒரு அலாரம் வையுங்கள். இரண்டு அலாரங்களின் சத்தமும் வழக்கமாக இருக்கும் சத்தத்தை விட அதிகமாக இருக்க வேண்டியது அவசியம். தேவைப்பட்டால் உங்கள் செல்போன், கடிகாரம், அலாரம் க்ளாக் என அநினைத்திலும் அலாரம் வைத்துக்கொள்ளுங்கள். அதை அணைக்கவாவது நெனக்கில் எழுந்துதான் ஆக வேண்டும்.

சூரிய ஒளி
சூரிய ஒளி உங்களை சுறுசுறுப்பாக்க கூடும் என்பது உண்மை. இதன் எதிர்மறையும் உண்மையானதுதான். நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு சூரியனை பார்க்காமல் இருந்தால் அது உங்களை சோம்பேறியாக்க கூடும். எனவே எழுந்தவுடன் முதலில் ஜன்னல் திரைகளை திறந்து கதிரவனை உங்கள் அறைக்கு வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள்.

காலை சடங்குகள்
காலை எழுவது மற்றும் முக்கிமானதல்ல, அதற்கு பின் செய்ய வேண்டியவையும் பல உள்ளது. சீக்கிரம் எழுந்து செல்போனையோ அல்லது தொலைக்காட்சியையோ பார்த்து கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. எனவே எழுந்தவுடன் காலையில் செய்ய வேண்டிய உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய முயலுங்கள். இப்போதெல்லாம் காலை நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பார்த்தால் இதற்கு உடற்பயிற்சி செய்வதே சிறந்தது என்று உங்களுக்கு தோன்றும்.

ஆப்பிள் சாப்பிடுங்கள்
காலை எழுந்தவுடன் ஒரு கை செல்போனை தேடினால் மற்றொரு கை காபி கோப்பையை தேடும். இதனை முதலில் தவிர்க்க முயலுங்கள். இரவு தூங்கும் முன் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள். ஆப்பிளில் உள்ள இயற்கை சர்க்கரை உங்களை விரைவில் எழுந்திரிக்க உதவுவதுடன் உங்களை புத்துணர்ச்சியாகவும் உணரச்செய்யும். காபியில் உள்ள காஃபைன் உங்களை சோம்பலாக உணரச்செய்யும். ஆனால் ஆப்பிளில் உள்ள குளுக்கோஸ் மற்றும் வைட்டமின்கள் நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். காலை காபி குடிப்பதற்கு பதிலாக சுடுதண்ணீரில் எலுமிச்சையும், தேனும் கலந்து குடிக்க பழகுங்கள். இது உங்களை நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருக்க உதவும்.

எது உங்களை தாமதமாக தூங்கவைக்கிறது என்பதை உணருங்கள்
நீங்கள் இரவு தாமதமாக தூங்க என்ன காரணம் என்பதை கண்டறிய முயலுங்கள். அது உங்களின் பணிசுமையாக இருக்கலாம், நீங்கள் செய்த உடற்பயிற்சியாக இருக்கலாம், அல்லது தூங்குவதற்கு முன் நீங்கள் குடித்த காபியாக இருக்கலாம். இதில் எது நீங்கள் சீக்கிரம் எழுவதை தடுத்தாலும் அதனை தவிர்க்க முயலுங்கள். முக்கியமாக இணையம், செல்போனை இரவில் உபயோகிப்பதை நிறுத்துங்கள்.

காபி மற்றும் டீ
இரவு படுக்கைக்கு செல்லும் முன் காபி, டீ குடிப்பதை தவிருங்கள். படுக்கைக்கு செல்லும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே காபி, டீ குடித்து விடுங்கள். இல்லையெனில் அது நீங்கள் தூங்கும் நேரத்தை தாமதப்படுத்தும். தூங்கும் நேரம் தாமதகமாக இருக்கும் பட்சத்தில் எழும் நேரமும் தாமதமாகத்தான் இருக்கும்.



Click it and Unblock the Notifications