For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூண்டு வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதற்கு முன்னால் இத தெரிஞ்சுகோங்க!

பூண்டினை மருந்தாக பயன்படுத்துவதற்கு முன்னதாக இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.

|

மருத்துவ குணங்கள் நிரம்பிய உணவுப் பொருட்களை நம்முடைய அன்றாட சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் குணநலன்களை எல்லாம் தேடிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சமையலில் பயன்படுத்தக்கூடியவை ஏரளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் அதில் இடம்பெறக்கூடிய ஒரு பொருள் பூண்டு. பூண்டில் ஏரளமான ஆண்ட்டிபயாட்டிக் சக்திகள் இருக்கின்றன. உடலில் ஏற்படுகிற பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை அகற்றிடும். அன்றாடம் ஏற்படக்கூடிய சளித்தொல்லையிலிருந்து விடுபடவும் இதனை பயன்படுத்தியிருப்போம்.

மருத்துவ குணங்கள் நிரம்பிய பூண்டினை எப்படி பயன்படுத்தினால் அதனுடைய அத்துனை குணங்களும் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமைத்த :

சமைத்த :

சிலர் பூண்டினை வேக வைத்தோ அல்லது வெறும் சட்டியில் வறுத்தோ பயன்படுத்துவார்கள். குறிப்பிட்ட சீசனுக்கு மட்டும் தான் இது கிடைக்கும் எனும்பட்சத்தில் நீங்கள் அந்தப் பொருளை சமைத்து பயன்படுத்தலாம். பூண்டு என்பது எல்லா நாட்களிலும் பயன்படுத்தக்கூடியது, கிடைக்கக்கூடியது. அதனால் அதனை நீங்கள் சமைத்து பயன்படுத்துவதை விட பச்சையாக பயன்படுத்துவதே நல்லது.

அலிசின் :

அலிசின் :

இதை விட பூண்டு சமைத்து பயன்படுத்தக்கூடாது என்பதற்கு இன்னொரு மிகப்பெரிய காரணம், அதிக தீயில் வைத்து சமைப்பதினால் பூண்டில் இருக்கிற அலிசின் என்ற சத்து அழிந்திடும்.

அதை அப்படியே கடித்துச் சாப்பிடுவதாலும் அதனை இடித்து அப்படியே பயன்படுத்துவதாலும் அந்த சத்து அப்படியே கிடைத்திடும்.

சமைக்கும் முறை :

சமைக்கும் முறை :

கட் செய்து வைத்த பூண்டில் தான் அலிசின் வேகமாக வளர்ந்திடும். அதனால் நீங்கள் பயன்படுத்துவதற்கு பத்து நிமிடங்கள் முன்பாகவே பூண்டினை இடித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பயன்படுத்தலாம்.

பூண்டினை சமையலில் சேர்க்கும் போது நீண்ட நேரம் கொதிக்க வைக்கவோ அல்லது பொறிக்கவோ வேண்டாம், மிதமான தீயில் வறுத்தெடுத்து சேர்த்திடுங்கள்.

மாத்திரை :

மாத்திரை :

பூண்டிலிருந்து அடர்த்தியான வாசனை வெளிவரும். சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது. அதனால் பூண்டின் மருத்துவ குணங்கள் நிரம்பிய மாத்திரைகளை சப்ளிமெண்ட்களாக எடுத்துக் கொள்வர். பூண்டு நேரடியாக கொடுக்கிற சத்தினை மாத்திரை ஒரு போதும் ஈடு செய்யாது.

மாத்திரை, பவுடர் அல்லது பேஸ்ட் என எந்த வடிவத்தில் எடுத்துக் கொள்வதை விட பூண்டினை நேரடியாக பயன்படுத்துவது நல்லது.

பூண்டு வாடை :

பூண்டு வாடை :

பூண்டில் அதிகப்படியான பாஸ்பரஸ் கேஸ் இருக்கிறது. அதனால் தான் பூண்டிலிருந்து கெட்ட நாற்றம் வருகிறது. பூண்டினை லேசாக சுட்டாலோ அல்லது சமைத்தாலோ அதிலிருந்த கெட்ட நாற்றம் போய்விடும்.

வெறும் பூண்டினை அதிக நாற்றத்தினால் கடித்து சாப்பிட முடியவில்லை, என்றால் லேசாக பூண்டை நெருப்பில் காண்பியுங்கள் அல்லது வெறும் சட்டியில் வறுத்து கொடுக்கலாம். பூண்டு வறுக்கும் போது மிதமான தீயில் வறுத்தாலே போதுமானது.

பழசா புதுசா? :

பழசா புதுசா? :

நீங்கள் பயன்படுத்துகையில் பூண்டு ஃபிரஷ்ஷாக இருக்க வேண்டும். பெரியது அல்லது வாங்கி நீண்ட நாட்கள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம். சமையலுக்கு என்று கேட்கும் போது சற்றே பழைய பூண்டினைத் தான் வாங்குவார்கள். மருத்துவ முறைக்காக நீங்கள் பயன்படுத்துகையில் ஃபிரஷ்ஷான பூண்டினை பயன்படுத்துவது தான் நல்லது.

அளவு :

அளவு :

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ பூண்டிற்கு கண்டிப்பாக பொருந்திடும். உடலில் இருக்கிற பாக்டீரியா தொற்றினை அகற்ற நீங்கள் சாப்பிடுவீர்களானால் மீடியம் சைஸ் பூண்டு இரண்டு அல்லது மூன்று போதுமானது.

நேரடியாக சாப்பிடுவதை விட குழம்பு, ரசம் ஆகியவற்றில் பூண்டு சேர்த்து பயன்படுத்தலாம். இரண்டு பூண்டு சாப்பிட வேண்டிய இடத்தில் ஆறு பூண்டு சாப்பிட்டால் பாக்டீயா உடனடியாக கட்டுக்குள் வரும் என்றெல்லாம் கணக்கு போடாதீர்கள். அது உங்களுக்கே பின் விளைவுகளை ஏற்படுத்திடும்.

ஆண்ட்டி பயாட்டிக் :

ஆண்ட்டி பயாட்டிக் :

பூண்டில் ஆண்ட்டி பயாட்டிக் துகள்கள் அதிகமிருக்கின்றன. இதனை நீங்கள் தொடர்ந்து எடுத்துவருவதால் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிற பாக்டீரியாக்களை கூட நீக்கிடும்.

அதனால் பூண்டு எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் ப்ரோபயாட்டிக் அதிகமிருக்கும் உணவுகளையும் சேர்த்தே எடுத்துக் கொள்ளுங்கள்.

உணவு :

உணவு :

பூண்டு எடுத்துக் கொள்வதினால அதுவே எல்லாவற்றையேயும் பார்த்துக் கொள்ளும் என்று நினைக்காதீர்கள். அது மருந்தளவிற்கு மட்டுமே நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதைத் தவிர உணவில் சத்தான ஆகாரங்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். ஏனென்றால் உடலின் இயக்கத்திற்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும் அனைத்து விதமான சத்துக்களும் அவசியமாகும்.

டிப்ஸ் :

டிப்ஸ் :

பூண்டு சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு அதன் கெட்ட வாடையினால் சாப்பிட முடியாமல் தவிர்ப்பவர்களுக்கு இந்த டிப்ஸ்.

பூண்டினை தோல் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின் பத்துநிமிடம் அப்படியே வைத்திடுங்கள். இந்த நேரத்தில் அலிசின் உற்பத்தி அதிகரிக்கும் அதோடு பூண்டில் இருக்கக்கூடிய பாஸ்பரஸ் கேஸும் காற்றுடன் கலந்திடும். அதன் பிறகு கெட்ட வாடை வராது. அதன் பிறகு அப்படியே சாப்பிடலாம். இல்லையென்றால் தயிர் அல்லது தேன் கலந்தோ சாப்பிடலாம்.

வெறும் வயிற்றில் :

வெறும் வயிற்றில் :

சிலர் காலையில் வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். பூண்டினை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். காலையில் வெறும் வயிற்றில் சாதரண தண்ணீரையோ அல்லது எலுமிச்சை கலந்த தண்ணீரையோ குடிக்கலாம். காலை உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளுங்கள்.

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி, செரிமானக் கோளாறு, வயிற்றுப் போக்கும் வாந்தி ஆகியவை ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Follow Before Using Garlic As Medicine

Tips To Follow Before Using Garlic As Medicine
Story first published: Wednesday, May 2, 2018, 12:50 [IST]
Desktop Bottom Promotion