Latest Updates
-
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
வெறும் வயிற்றில் இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்..! மீறி செய்தால் மரண கூட ஏற்படலாம்..!
ஒரு சில செயல்களை இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்கிற வரையறை இருக்கிறது. அதனை மீறி செய்வதால் பல விளைவுகள் நமது உடலுக்கு ஏற்படுகிறது. உடலின் தன்மையை பொருத்தே இவை நமக்கு ஆபத்தை ஏற்படுத்துமா..? இல்லையா..? என்பது தெரியும்.

நாம் வெறும் வயிற்றில் செய்கின்ற ஒரு சில செயல்கள் நமக்கு பல வித ஆபத்துகளை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த செயல்கள் ஒவ்வொரு உறுப்புகளையும் பாதிக்க செய்து மரணத்தை கூட ஏற்படுத்தும். நாம் வெறும் வயிற்றில் செய்கின்ற எந்தெந்த செயல்கள் நமக்கு தீங்கை தரும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

ஏன் செய்ய கூடாது..?
காலையில் எழுந்தவுடன் நாம் எதையும் சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில் பல வித செயல்கள் நம்மை அறியாமலே செய்வோம். இவை எந்த வித பாதிப்பை நமக்கு தரும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். வெறும் வயிற்றில் ஒரு சில விஷயங்களை செய்தாலும், அல்லது சாப்பிட்டாலும் உறுப்புகளின் செயல்திறன் மாறுதல் அடையும்.

டீயா..? காப்பியா..?
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால், வெறும் வயிற்றில் இவற்றை குடித்தால், அமில தன்மை வயிற்றில் அதிகரித்து செரிமான பிரச்சினை, மலச்சிக்கல், வாந்தி ஆகிய பின்விளைவுகளை ஏற்படும். எனவே, இதற்கு பதிலாக டீ அல்லது காபியுடன் ஏதேனும் சேர்த்து சாப்பிடுவது சற்று நல்லது.

உடற்பயிற்சி செய்யலாமா..?
உடற்பயிற்சியை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் செய்வதால் உடல் எடை சட்டென குறைந்து விடும் என பலர் எண்ணுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். இந்த பயிற்சி கொழுப்புகளை குறைக்காமல் தசைகளையே குறைக்கும். ஆதலால், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாமல் ஏதேனும் சிறிய அளவில் சாப்பிட்டு விட்டு பயிற்சியை தொடங்குங்கள்.

ஜிவிங் கம் வேண்டாமே..!
பலருக்கு ஜீவிங்கம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதனை மற்ற நேரத்தில் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்பை விட, வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் தான் அதிகம். வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் வாயு கோளாறு, அமில தன்மை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றான வர தொடங்கும்.

குடல் பிரச்சினையா..?
வெறும் வயிற்றில் இந்த செயலை நிச்சயம் செய்ய கூடாது. அதாவது, சோடாக்கள் நிறைந்த பானங்களையோ, உணவுகளையோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், குடல் பகுதியில் அதிக எரிச்சல், வாந்தி ஏற்படுத்தும் தன்மை ஏற்படும். பல நாட்கள் இது தொடர்ந்தால் குடல் புண், உடல் எடை கூடுதல், பசியின்மை போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படும்.

காரசார உணவுகளா..?
காலையில் எழுந்ததும் உணவின் மீது உள்ள காதலால் காரசாரமான உணவுகளை சாப்பிடாதீர்கள். காலை உணவில் காரசாரமான உணவுகளை சாப்பிட்டால் வயிற்றில் அமில தன்மை அதிகரிக்க கூடும். பிறகு குடல் புண்கள் ஏற்பட்டு அதிக வலியை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஜாக்கிரதை..!
நீங்கள் வெறும் வயிற்றில் பாராசிட்டமால், ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை எடுத்து கொள்ள கூடாது. இவ்வாறு செய்வதால் இவற்றின் வீரியம் அதிகரிக்க கூடும். இவை மலத்தில் ரத்த போக்கை ஏற்படுத்தி பல வித பாதிப்புகளை தருமாம். ஆதலால், மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளாதீர்கள்.

கடைக்கு செல்லாதீர்கள்..!
இது என்ன புதுசா இருக்கேனு நினைக்கிறீங்களா..?! உண்மைதாங்க... நாம் வெறும் வயிற்றில் கடைக்கு சென்றால் பார்க்கின்ற அனைத்தையும் வாங்கி அடுக்கி கொள்வோம். குறிப்பாக இனிப்பு வகை உணவுகள், அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவுகள் போன்றவற்றை வாங்க தூண்டும். எனவே வெறும் வயிற்றில் கடைக்கு செல்லாதீர்கள்.

பசி இருந்தா, நீ நீயா இருக்க மாட்ட..!
இந்த விளம்பர வாசகம் நம் அனைவருக்கும் நன்கு மனப்பாடம் ஆன ஒன்று. இது உண்மையும் கூட. நமக்கு அதிக பசி இருக்கும் நேரத்தில் நம்மை அறியாமலே பலவற்றை செய்வோம். இதற்கு காரணம் பசி தான். பசி உள்ள நேரத்தில் குறிப்பாக யாருடனும் வாக்கு வாதம் வைத்து கொள்ளாதீர்கள். இது பெரிய பிரச்சினையாக மாற கூடும்.

காலையிலே இந்த பழக்கமா..?
நவீன நாகரீகம் என்கிற பெயரில் இந்த செயலை பலர் செய்து வருகின்றனர். அதாவது, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மது அருந்தும் பழக்கம் இப்போதெல்லாம் பரவலாக எல்லோரிடமும் தொற்றி வருகின்ற ஒரு கலாச்சாரமாக உள்ளது. ஆனால், வெறும் வயிற்றில் மது அருந்தினால் கல்லீரல், இதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் சிதைவடையும்.

மறவாதீர்கள்..!
மேற்சொன்ன பழக்க வழக்கங்களை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் செய்யாதீர்கள். மீறி செய்தால் இவை உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும். மேலும், வாழைப்பழம், தக்காளி, சிட்ரஸ் பழங்கள், பச்சை காய்கறிகள் போன்றவற்றையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே.



Click it and Unblock the Notifications