ஆண்கள் சந்திக்கும் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்கும் சில தந்திரங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

முந்தைய காலத்தில் பாலியல் பிரச்சனைகள் படுக்கை அறையை விட்டு வெளியே யாருக்கும் தெரியாது. ஆனால் தற்போது பாலியல் பிரச்சனைகளுக்கான மருந்துகள் விளம்பரங்கள், சிகிச்சை முன்னேற்றங்கள் போன்றவற்றால் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் வெளிப்படையாக தெரிகிறது. அதில் பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் பிரச்சனை தான் விறைப்புத்தன்மை குறைபாடு. அதாவது துணையுடன் உடலுறவில் ஈடுபடும் போது, நீண்ட நேரம் துணையைக் குதூகலப்படுத்த முடியாமல் ஆண்கள் தவிக்கும் பிரச்சனை.

விறைப்புத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்படும் ஆண்கள் மன அழுத்தத்துடன் இருப்பதோடு, தன்னம்பிக்கை குறைந்தவராகவும் இருப்பர். இதனால் துணையுடன் அடிக்கடி காரணமின்றி சண்டையும் போடுவர். ஆண்களுக்கு இப்பிரச்சனை வர முக்கிய காரணம் போதிய இரத்த ஓட்டம் ஆணுறுப்பில் இல்லாதது தான். அதிலும் உலகிலேயே அமெரிக்காவில் 15-30 மில்லியன் ஆண்கள் இந்த விறைப்புத்தன்மை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் பாருங்கள்.

இதற்கு முன்மையான காரணம் தற்போதைய வாழ்க்கை முறை மாற்றமும், உணவு பழக்கவழக்கத்தில் உள்ள மாற்றங்களும் தான். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதோடு, பாலியல் வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் பாலியல் பிரச்சனைகளாலும் அவஸ்தைப்பட நேரிடுகிறது. பல ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வே கிடையாதா என்ற வருத்தத்தில் உள்ளனர். ஆனால் இப்பிரச்சனையை வாழ்க்கை முறையில் சில மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம் என நிபுணர்களும் கூறுகின்றனர்.

கீழே ஆண்கள் சந்திக்கும் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்கும் சில தந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேரம் கொடுங்கள்

நேரம் கொடுங்கள்

ஆண்களின் வயது அதிகரிக்கும் போது, விறைப்புத்தன்மைப் பெற சற்று நீண்ட நேர தூண்டுதல் தேவைப்படலாம். அதில் 18 முதல் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு சில வினாடிகள் ஆகலாம். 30-40 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு, 1-2 நிமிடங்கள் ஆகலாம். ஆனால் 60 வயதிற்கு மேலான ஆண்களுக்கு 1-2 நிமிடங்களுக்கு மேல் விறைப்படையாமல் போகலாம். இதனால் அவர்கள் செயலற்றவர்கள் என்று அர்த்தம் இல்லை. இத்தகையவர்களுக்கு இன்னும் சற்று நேரம் தேவைப்படலாம். வயது அதிகரிக்கும் போது விந்து வெளியேறி மீண்டும் விறைப்படைவதற்கு சற்று நேரம் ஆகும் என்பது ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதேப் போல் அனைவருக்குமே ஒரே மாதிரியான உடலமைப்பு இருக்காது. நிச்சயம் வேறுபாடு இருக்கும். எனவே அவசரப்படாமல் பொறுமையை எப்போதும் கையாளுங்கள்.

மருந்துகளை கவனியுங்கள்

மருந்துகளை கவனியுங்கள்

விறைப்புத்தன்மை கோளாறுகளுக்கு நீங்கள் எடுத்து வரும் சில மருந்துகளும் ஓர் காரணம். அதில் இதய பிரச்சனைகளுக்கான மருந்துக்ள, உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், சிறுநீர்ப்பெருக்கி மருந்துகள், ஆன்டி-ஹிஸ்டமைன் மருந்துகள் போன்றவை ஆண்களின் விறைப்புத்தன்மையை பாதிக்கக்கூடியவை. பொதுவாக தற்போது 40 வயதிற்கு மேல் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் வந்துவிடுவதால் தான், ஆண்கள் 40 வயதிலேயே விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்கின்றனர் என்றும் கூறலாம். ஆகவே இதுக்குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். அதுவே ஒரே சிறந்த வழியும் கூட.

மதுவிற்கு நோ சொல்லுங்கள்

மதுவிற்கு நோ சொல்லுங்கள்

பலரும் மரு அருந்தினால் உடலுறவில் சிறப்பாக செயல்படலாம் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் மது அருந்தினால், அது மைய நரம்பு மண்டலத்தில் இறுக்கத்தை உண்டாக்கி, பாலியல் உணர்ச்சிகளைப் பாதிக்கும். அதிலும் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தால், அதனால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். அதோடு, நரம்பு மற்றும் கல்லீரல் பாதிப்பும் ஏற்படும். ஆண்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால், அது அவர்களின் உடலில் பெண் செக்ஸ் ஹார்மோன்களின் அளவை அதிகரித்துவிடும். ஒரு ஆணின் உடலில் போதுமான அளவில் ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் இல்லாவிட்டால், அது பாலியல் வாழ்க்கையை சீரழிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

இரத்த நாள ஆரோக்கியத்தை கவனிக்கவும்

இரத்த நாள ஆரோக்கியத்தை கவனிக்கவும்

ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது என்றால், ஆணுறுப்பிற்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லை என்று அர்த்தம். பொதுவாக 38 வயதிற்கு மேல் ஆண்களின் ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த நாளங்கள் குறுக ஆரம்பிக்கும். இதற்கு இவர்கள் இளமையில் நன்கு எண்ணெயில் பொரித்த பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்டது என்று கூறலாம். இதனால் அவற்றில் உள்ள கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் படிந்து, இரத்த நாளங்கள் சுருங்கச் செய்து, இரத்த ஓட்டத்தில் தடையை உண்டாக்கி, விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்குகிறது. எனவே கொழுப்புமிக்க உணவுகளை அதிகம் சாப்பிடாதீர்கள்.

புகை வேண்டாம்

புகை வேண்டாம்

சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் இரத்த நாளங்களை சுருங்க செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் உள்ள ஆய்வுக் குழுவினர். புகைப்பிடிக்காத ஆண்களை இரு குழுக்களாக பிரித்து, ஒரு குழுவிற்கு நிக்கோட்டின் உள்ள சூயிங் கம்மையும், மற்றொரு குழுவினருக்கு சாதாரண சூயிங் கம்மையும் கொடுத்தனர். அதில் நிக்கோட்டின் கம் சாப்பிட்ட ஆண்களுக்கு, சாப்பிடாத ஆண்களை விட 23% பாலுணர்ச்சி குறைந்திருப்பது தெரிய வந்தது. எனவே கவனமாக இருங்கள்.

உடல் எடையை கவனியுங்கள்

உடல் எடையை கவனியுங்கள்

ஆய்வுகளில் உடல் பருமன் கொண்ட ஆண்களால் உறவில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்க முடிவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. இப்படி உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லாமல் இருந்தால், அவர்களால் உடலுறவின் போது நீண்ட நேரம் விறைப்பை தக்க வைக்க முடியாமல், துணையை திருப்தி படுத்த முடியாமல் போகும். அதோடு உடல் பருமன் ஒருவரது தன்னம்பிக்கையையும் குறைக்கும். எனவே எப்போதும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

பைக் ரைடிங் வேண்டாம்

பைக் ரைடிங் வேண்டாம்

அளவுக்கு அதிகமாக பைக்கிலோ அல்லது சைக்கிளிலோ பயணிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இதனால் கால்களுக்கு இடையே அதிகளவு அழுத்தத்தைக் கொடுக்க நேரிடுகிறது. இதனால் ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும். இதன் விளைவாக விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே பைக் அல்லது சைக்கிளில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

அதிகமாக உடலுறவு கொள்ளுங்கள்

அதிகமாக உடலுறவு கொள்ளுங்கள்

சுமார் 55-75 வயதுடைய 1000 பின்னிஷ் ஆண்களைக் கொண்டு 5 வருடமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு ஒருமுறை உடலுறவில் ஈடுபட்டவர்களை விட, வாரத்திற்கு ஒருமுறை கூட உடலுறவில் ஈடுபடாத ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. ஆகவே உங்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், அடிக்கடி துணையுடன் உடலுறவில் ஈடுபடுங்கள்.

'நோ' காப்ஃபைன்

'நோ' காப்ஃபைன்

காப்ஃபைன் நிறைந்த பானங்கள் உடலின் ஆற்றலை ஒரே நேரத்தில் விரைவில் அதிகரிக்கும். ஆனால் உடலுறவின் போது ரிலாக்ஸாக இருக்க வேண்டியது அவசியம். அதை விட்டு காப்ஃபைன் பானங்களைப் பருகிவிட்டு உறவில் ஈடுபட்டால், அது உடலுறவில் ஈடுபடும் ஆரம்பத்தில் நன்கு சுறுசுறுப்பாக இருக்கச் செய்து, பின் உடலை சோர்வடையச் செய்து, நாட்டத்தைக் குறைத்துவிடும். எனவே இந்த தவறை செய்யாதீர்கள்.

தர்பூசணி சாப்பிடுங்கள்

தர்பூசணி சாப்பிடுங்கள்

தர்பூசணி ஓர் நேச்சுரல் வயாகரா என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்டுகள் தான் காரணம். அதோடு, அதில் உள்ள சிட்ருலின், இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, உடல் முழுவதும் குறிப்பாக அந்தரங்க பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் உடலுறவின் போது நீண்ட நேரம் குதூகலமாக இருக்க தர்பூசணி உதவி புரியும். எனவே விறைப்புத்தன்மை குறைபாடு வராமல், உறவில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tactics For Dealing With Erectile Dysfunction

Erectile dysfunction (ED) is the inability to get or keep an erection firm enough to have sexual intercourse. Men have a lot of fears about erectile dysfunction. But Here we listed some tactics for dealing with erectile dysfunction. Read on...
Story first published: Friday, February 16, 2018, 13:50 [IST]