Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
Vellarikkai Dosa With Karuppu Ulunthu Chutney In Tamil: காலையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் அடிக்கும் வெயிலுக்கு ஏற்ற வகையில் ஒரு காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெள்ளரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வெள்ளரிக்காயைக் கொண்டு வெள்ளரிக்காய் தோசையும், அதற்கு சைடு டிஷ்ஷாக கருப்பு உளுந்து சட்னியையும் செய்யுங்கள். இந்த காம்போ அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த வெள்ளரிக்காய் தோசை மற்றும் கருப்பு உளுந்து சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளரிக்காய் தோசை மற்றும் கருப்பு உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் தோசைக்கு...
* ரவை - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* பெரிய வெள்ளரிக்காய் - பாதி
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 4
* பச்சரிசி மாவு - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
சட்னிக்கு...
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கருப்பு உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 8 பல்
* தக்காளி - 3 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - சிறிய துண்டு
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து, அதில் நீரை ஊற்றி
கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெள்ளரிக்காயை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் நறுக்கிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய்
மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதில் ஊற வைத்துள்ள ரவையை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஜாரில் சிறிது நீரை
ஊற்றி அலசி ஊற்ற வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை,
கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து கலந்து, மாவு கெட்டியாக
இருந்தால், இன்னும் சிறிது நீரை ஊற்றி, ரவா தோசை மாவு பதத்திற்கு
கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து,
உளுந்து நிறம் லேசாக மாறும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு நறுக்கிய தக்காளி மற்றும் சிறிய துண்டு புளியை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால்,
கருப்பு உளுந்து சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், சிறிது
எண்ணெய் ஊற்றி தேய்த்து, ரவா தோசை போன்று அள்ளி ஊற்றி தோசையாக சுட்டு,
எண்ணெய் ஊற்றி, முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான
வெள்ளரிக்காய் தோசை தயார்.
ஊட்டச்சத்து மதிப்பு
2 வெள்ளரிக்காய் தோசை மற்றும் 3 டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்து சட்னியில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:
கலோரிகள்: ~280-320 kcal
புரதச்சத்து: 6-7 கிராம்
கார்போஹைட்ரேட்: 44-48 கிராம் (ரவை மற்றும் அரிசி மாவிலிருந்து)
நார்ச்சத்து: 4-5 கிராம்
கொழுப்பு: 8-10 கிராம் (சட்னி மற்றும் தாளிப்பிற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்)
ஆரோக்கிய நன்மைகள்
* வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதைக் கொண்டு தோசையாக செய்து சாப்பிடும் போது, அது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதோடு, உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியே வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த தோசை செரிமானத்திற்கும் நல்லது, எடை இழப்புக்கும் உதவுகிறது.
* வெள்ளரிக்காயில் உள்ள சிலிக்கா மற்றும் வைட்டமின்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். மேலும், இதில் சேர்க்கப்படும் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை வழங்குகின்றன.
* கருப்பு உளுந்து சட்னியில் இரும்புச்சத்தும், கால்சியமும், புரதமும் மிக அதிகம். எனவே இது பெண்களுக்கு இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
* சட்னிக்கு தக்காளியை எண்ணெயில் வதக்கும் போது அதில் உள்ள லைகோபீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் வீரியமடைகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications