Latest Updates
-
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க..
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...
Pachai Payaru Dosa With Ginger Chutney for Weight Loss In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் டயட்டில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்ப்பது நல்லது. அதுவும் காலையில் எப்பவும் ஓட்ஸ் சாப்பிட்டு போரடித்திருந்தால், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய காலை உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள்.

அதுவும் பச்சை பயறு தோசை மற்றும் இஞ்சி சட்னி மிகச்சிறந்த காம்போ ஆகும். இந்த தோசையை ஒன்று சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும். அதோடு, இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு இந்த பச்சை பயறு தோசை மற்றும் இஞ்சி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு தோசை மற்றும் இஞ்சி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு தோசைக்கு...
* பாசிப்பருப்பு - 1 டம்ளர்
* பச்சை பயறு - 1 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பூண்டு - 2
* இஞ்சி - சிறிய
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி சட்னிக்கு...
* கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கருப்பு உளுந்து - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* இஞ்சி - 2 இன்ச் (தோல் நீக்கி நறுக்கியது)
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - சிறிய துண்டு
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் பாசிப்பருப்பு மற்றும் 1
டம்ளர் பச்சை பயறை எடுத்து, நீரில் 2 முறை கழுவி, நீரை ஊற்றி 5
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 5 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்த பருப்புக்களை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன்
பொடியாக நறுக்கிய பூண்டு, துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை
மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு
கலந்து விட வேண்டும். அதிகமாக நீரை ஊற்றிவிட வேண்டாம்.
* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும்
வேக வைத்து எடுத்தால், சுவையான பச்சை பயறு தோசை தயார்.
* அடுத்து இஞ்சி சட்னி செய்வதற்கு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், கருப்பு உளுந்து மற்றும்
வரமிளகாயை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய 2 இன்ச் இஞ்சியை சேர்த்து,
எண்ணெயில் நன்கு நிறம் மாற வதக்க வேண்டும். இதன் மூலம் சட்னியின்
காரத்தன்மை குறையும்.
* பின்பு அதில் புளி, தேங்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு மற்றும் சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், சுவையான இஞ்சி சட்னி தயார்.
ஊட்டச்சத்து மதிப்பு:
2 பச்சை பயறு தோசை + 2-3 ஸ்பூன் இஞ்சி சட்னியில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:
* கலோரிகள்: ~260-290 kcal
* புரதச்சத்து: 11-13 கிராம்
* கார்போஹைட்ரேட்: 34-38 கிராம்
* நார்ச்சத்து: 7-8 கிராம்
* கொழுப்பு: 6-8 கிராம் (நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெயிலிருந்து
கிடைக்கும் ஆரோக்கியமான கொழுப்பு)
பச்சை பயறு தோசை மற்றும் இஞ்சி சட்னியின் ஆரோக்கிய நன்மைகள்
* இந்த பச்சை பயறு தோசையில் புரோட்டீன் அதிகம் என்பதால் தசை வளர்ச்சிக்கும், உடல் சோர்வை நீக்கவும் உதவுகிறது.
* இந்த தோசையில் அரிசி இல்லாததால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென்று உயராமல் சீராக இருக்கும். எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவாக இருக்கும்.
* முக்கியமாக இந்த தோசையில் புரோட்டீனும், நார்ச்சத்தும் அதிகம் என்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதன் மூலம் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்தது.
* இஞ்சி சட்னியானது செரிமானத்தை அதிகரிக்கும், நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.



Click it and Unblock the Notifications