Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
Mangai Thakkali Chutney Recipe In Tamil: தற்போது மாங்காய் சீசன் என்பதால், இந்த சீசன் இருக்கும் போதே மாங்காய் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை செய்து சுவைத்துவிட வேண்டும். பொதுவாக மாங்காயைக் கொண்டு மாங்காய் சாதம், மாங்காய் ரசம், மாங்காய் துவையல், மாங்காய் சாம்பார் என்று பல ரெசிபிக்களை செய்யலாம்.

அதுவும் உங்கள் வீட்டில் அடிக்கடி தக்காளி சட்னி செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை மாங்காய் சேர்த்து தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த மாங்காய் சட்னி செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும், சுவையாகவும் இருக்கும்.
இந்த மாங்காய் தக்காளி சட்னி குறித்து ஹேமா சுப்ரமணியன் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த மாங்காய் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்காய் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* மாங்காய் - 1
* தக்காளி - 3
* பூண்டு - 8 பல்
* பச்சை மிளகாய் - 4
* வெங்காயம் - 1
* கொத்தமல்லி - சிறிது
* சீரகம் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி, அதில் இரண்டு துண்டுகளாக்கப்பட்ட மாங்காய் மற்றும் தக்காளியை
வைத்து, அத்துடன் பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிதமான
தீயில் வைத்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, காய்கறிகளை திருப்பிப் போட்டு,
மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, மிக்சர் ஜாரில் சேர்க்க
வேண்டும்.
* பின் அதில் மாங்காயின் சதைப் பகுதியை ஒரு கரண்டியால் கிளறி எடுத்து
சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து, அத்துடன்
கொத்தமல்லி, சீரகம், நறுக்கிய வெங்காயம், காஷ்மீரி மிளகாய் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொரகொரவென்று அரைத்து, ஒரு
கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதை
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான மாங்காய் தக்காளி சட்னி
தயார்.
குறிப்பு:
இந்த மாங்காய் தக்காளி சட்னி சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
