Latest Updates
-
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா?
செஃப் தீனா ஸ்டைல் மாங்காய் துவையல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
Chef Deena's Manga Thuvaiyal Recipe In Tamil: கோடை வெயிலால் மதிய வேளையில் சமையலை சிம்பிளாகவும், அதே சமயம் வாய்க்கு ருசியாகவும் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தற்போது மாங்காய் சீசன் என்பதால், நிச்சயம் வீட்டில் மாங்காய் இருக்கும். அந்த மாங்காயைக் கொண்டு துவையலை செய்யுங்கள்.

முக்கியமாக இந்த மாங்காயை துவையலாக செய்யும் போது, அதை சூடான சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடும் போது, சுவை பிரமாதமாக இருக்கும். குறிப்பாக இந்த மாங்காய் துவையல் சாதத்துடன் மட்டுமின்றி, இட்லியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.
இந்த மாங்காய் துவையல் குறித்து மிகவும் பிரபலமான செஃப் தீனா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு செஃப் தீனா அவர்களின் மாங்காய் துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் தீனா அவர்களின் மாங்காய் துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - தேவையான அளவு
* வரமிளகாய் - 8
* கறிவேப்பிலை - தேவையான அளவு
* மாங்காய் - 1
* தேங்காய் - 1/2 மூடி
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை
சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கிளி மூக்கு மாங்காயை எடுத்து, அதை சிறு துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை
சேர்த்து, அத்துடன் மாங்காய், தேங்காய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நீர்
சேர்க்க வேண்டாம். ஒருவேளை தேவைப்பட்டால், சிறிது சேர்த்துக்
கொள்ளுங்கள்.
* பின்னர் அரைத்த துவையலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1
டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலுடன் சேர்த்தால், சுவையான
மாங்காய் துவையல் தயார்.



Click it and Unblock the Notifications
