Latest Updates
-
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம்
செஃப் தீனாவின் சிக்கன் வறுவல் - வெறும் 4 பொருள் வெச்சே செய்யலாமாம்.. எப்படின்னு பாருங்க..
Chef Deena's Chicken Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் செய்வீர்களா? அந்த சிக்கனை எப்போதும் ஒரே சுவையில் குழம்பு, வறுவல் என்று தான் செய்து சாப்பிடுவீர்களா? அதுவும் சிக்கனை வறுவல் செய்வதாக இருந்தால், அத்துடன் வெங்காயம், தக்காளி சேர்த்து தான் செய்வீர்களா?

அப்படியானால் அடுத்தமுறை சிக்கனை வாங்கினால் வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காமல், வெறும் 4 பொருட்களைக் கொண்டே அட்டகாசமான சுவையில் செஃப் தீனா ஸ்பெஷல் சிக்கன் வறுவலை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் வறுவலை செய்து ரசம் சாதத்துடனோ அல்லது சூடான சாதத்துடனோ சேர்த்து சாப்பிட்டால், சுவை வேற லெவலில் இருக்கும்.
இந்த சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று மிகவும் பிரபலமான செஃப் தீனா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* பூண்டு - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 20
* கடலை எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் பால் - 1 கப்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்து குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியில் சிக்கனை கழுவி எடுத்து, அத்துடன் சிறிது
கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிக்கன் வேக தேவையான அளவு மட்டும் சிறிது நீரை ஊற்றி,
அடுப்பில் வைத்து, மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.
முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட்டு சிக்கனை வேக
வைக்க வேண்டும்.
* மறுபுறம் மிக்சர் ஜாரில் வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து,
நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை வெந்து கொண்டிருக்கும் சிக்கனுடன் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* சிக்கனில் இருந்து பூண்டின் மணம் வரத் தொடங்கும் போது, அதில்
தேங்காய் பால் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கிளறி, 5 நிமிடம் சிக்கனில்
உள்ள நீர் வற்றும் வரை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான சிக்கன்
வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications
