Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
Cauliflower Milagu Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காலிஃப்ளவர் என்றால் ரொம்ப பிடிக்குமா? இதனால் அடிக்கடி காலிஃப்ளவரை வாங்கி சமைப்பீர்களா? அதுவும் எப்போதும் காலிஃப்ளவரை 65/பக்போடா போன்றோ அல்லது மசாலா, கிரேவி போன்று தான் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை காலிஃப்ளவரைக் கொண்டு மிளகு வறுவல் செய்யுங்கள். இந்த காலிஃப்ளவர் மிளகு வறுவல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுக்கு சிறந்த சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு இந்த காலிஃப்ளவர் மிளகு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் மிளகு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* பட்டை - 2 துண்டு
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 4
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* வறுத்து அரைத்த பவுடர்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெரிய காலிஃப்ளவர் - 1
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை
கொதிக்கும் சுடுநீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2-3
நிமிடம் வேக வைத்து இறக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, ஏலக்காய்,
கிராம்பு, மிளகு, சீரகம், சோம்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு
வறுக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து
பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் வறுத்து அரைத்த பவுடரை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி, 2
கையளவு நீரை தெளித்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 15 நிமிடம்
மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது மூடியைத்
திறந்து காலிஃப்ளவரை கிளறி விட வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் மிளகு வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications
