Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
Sun Nakshatra Transit On 08 June 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவார். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் சூரியன் ஜூன் 08 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த பெயர்ச்சியின் போது சூரியன் மிருகசீரிட நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த மிருகசீரிட நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். சூரியன் செவ்வாயின் நட்சத்திரத்திற்குள் நுழைவதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும்.
குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்வில் குழப்பம், மன அழுத்தம் மற்றும் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் பேச்சு கடுமையாக இருக்கும். கோபம் அதிகரிக்கும். இதனால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன் வேலை செய்வோருடன் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி நிலை பலவீனமாக இருக்கும். அவசரப்பட்டு செய்யும் முதலீடுகளால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது. பணியிடத்தில் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்களின் நற்பெயர் பாழாகும்.
விருச்சிகம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் மோசமான விளைவுகளை சந்திப்பார்கள். அதுவும் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் மூலம் வேலையில் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலைகளை தொடங்குவதையும், புதிய ஒப்பந்தங்களை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
மகரம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். இதனால் உங்களின் பட்ஜெட் பாழாகும். நீதிமன்ற வழக்குகளுக்கு நிறைய பணத்தை செலவிட நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் ஏமாற்றமடையக்கூடும். எதிரிகள் உங்கள் மன அமைதியை சீர்குலைக்கலாம். யாரிடமும் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும்.
மீனம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். இக்காலத்தில் எந்த ஒரு புதிய வீடு, வாகனம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடலாம். சிலருக்கு பிடிக்காத பணியிட மாற்றம் ஏற்படலாம். இக்காலத்தில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



