ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா?

Rahu Transit In Sadayam Nakshatra 2026: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு ஒரு மர்ம கிரகமாகவும் கருதப்படுகிறார். நவகிரகங்களில் ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிப்பார். இப்படிப்பட்ட ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதோடு இவருக்கு சொந்த ராசி என்று எதுவும் இல்லை.

Rahu Transit In Sadayam Nakshatra 2026 These Zodiac Signs Get Money Benefits

இந்த ராகுவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அது ஒருவரது வாழ்க்கையில் திடீர் மற்றும் எதிர்பாராத மாற்றங்களை கொண்டு வரும். தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 31 ஆம் தேதி ராகு நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதுவும் தனது சொந்த ராசியான சதயம் நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார்.

இந்த ராகுவின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் முழுமையான அதிர்ஷ்டம் , எதிர்பாராத நிதி ஆதாயங்கள் மற்றும் தங்கள் தொழிலில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இப்போது ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். முக்கியமாக நீண்ட காலமாக தடைபட்டு வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களும் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். மேலும் புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். நீண்ட நாட்களாக சிக்கியிருக்கும் பணம் ராகுவின் அருளால் கைக்கு வந்து சேரும்.

மிதுனம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வீரமும், செல்வாக்கும் அதிகரிக்கும். பேச்சாலும், புத்திசாலித்தனத்தாலும் பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் எதிரிகளை தோற்கடித்து வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனை முடிவுக்கு வரப்போகிறது. முக்கியமாக உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

கும்பம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் எதிர்பாராத பல நன்மைகளைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்து, இக்காலத்தில் செய்தால் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறலாம்.

ராகு பலவீனமாக இருந்தால் செய்ய வேண்டிய பரிகாரங்கள்:

* ஜாகதத்தில் ராகு பலவீனமாக இருந்தால், ராகுவை வலுப்படுத்த துர்கா தேவியை வழிபாடு செய்ய வேண்டியது சிறந்த வழியாகும். அதுவும் துர்கா சாலிசாவை பாராயணம் செய்தால், வாழ்வில் உள்ள குழப்பமும், மன அழுத்தமும் நீங்கும்.

* பைரவரை வழிபாடு செய்வதன் மூலமும் ராகுவை வலுப்படுத்தலாம். அதுவும் சனிக்கிழமைகளில் பைரவருக்கு கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் நல்லது. இதன் மூலம் ராகு தோஷத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* தினமும் பறவைகளுக்கு ஏழு வகையான தானியங்கள் கலந்த கலவையை உணவாக கொடுங்கள். இதனால் ராகுவின் மோசமான விளைவுகள் குறைந்து, முன்னேற்ற பாதை திறக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, June 1, 2026, 9:00 [IST]
Desktop Bottom Promotion