ராகுவின் பிடியில் இருந்து விடுதலை.. மே 31 முதல் இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறங்க..

Rahu Transit 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமல்லாமல், நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

Rahu Transit In Sadhaya Nakshatra On 31 May 2026 These Zodiac Signs Will Be Lucky

ஜோதிடத்தில் ராகுவிற்கு என்று சொந்த ராசி எதுவும் இல்லை. மேலும் இந்த ராகு மற்ற கிரகங்களை போல் நேர்கதியில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார். அதுமட்டுமின்றி இந்த ராகு எதிர்மறை பலன்களைத் தரக்கூடியவராக கருதப்படுகிறார். என்ன தான் ராகு மோசமான கிரகமாக கருதப்பட்டாலும், சரியான நிலையில் இருந்தால், ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவார்.

அந்த வகையில் ராகு மே 31 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் சதய நட்சத்திரத்தின் இரண்டாம் பாத்தில் இருந்து முதல் பாதத்திற்குள் ராகு நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் சுமார் 64 நாட்கள் வரை இருக்கவுள்ளார். ராகுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. எதிர்பாராத பண வரவு, பொருள் இன்பங்கள் போன்றவை கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். இதுவரை உங்களை கஷ்டப்படுத்தியவர்கள் தங்களின் தவறை உணர்ந்து உங்களுடன் இணைய முன்வருவார்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். தொழிலில் நல்ல உச்சத்தை அடைவீர்கள்.

துலாம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. நீண்ட நாட்களாக அனுபவித்து வந்த கஷ்டங்களும், சிரமங்களும் குறையும். வாழ்க்கையில் சந்தோஷமும், அமைதியும் அதிகரிக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். இதுவரை செய்ய முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த, பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் குறையும். வேலையில் நல்ல உயர்நிலையை அடைவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

கும்பம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிதாக தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். தடைபட்டு வந்த திருமணம் வெற்றிகரமாக நடக்கும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எவ்வளவு பெரிய கடினமான வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, May 22, 2026, 17:46 [IST]
Desktop Bottom Promotion